வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 ஓகத்து

வர்த்தகப் பற்றாக்கையில் ஏற்பட்ட மேம்பாடு, தொழிலாளர் பணவனுப்பல்களில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்பனவற்றின் முக்கிய ஆதரவுடன் 2020 ஓகத்துக் காலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை அநேக விடயங்களில் தொடர்ந்தும் மீட்சியடைந்திருக்கிறது. இம்மாத காலப்பகுதியில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் வணிகப்பொருட்களின் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் வீழ்ச்சி காணப்பட்டமைக்கிடையிலும் இன்றியமையாதனவல்லாத பொருட்களின் இறக்குமதி மீதான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டுப்பாடுகள் மற்றும் குறைவடைந்த மசகெண்ணெய் விலைகள் என்பனவற்றின் காரணமாக வணிப்பொருள் இறக்குமதிகளில் ஏற்பட்ட குறைப்பின் விளைவாக வர்த்தகப் பற்றாக்குறை ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் மேம்பட்டது. இருப்பினும் கூட, தொற்று உலகளாவிய கேள்வியைப் பாதித்தமைக்கிடையிலும் ஏற்றுமதிச் செயலாற்றம் தொடர்ந்தும் மூன்றாவது மாதமாக வலுவான நிலையில் காணப்படுகிறது. அதேவேளை, 2020 ஓகத்தில் தொழிலாளர் பணவனுப்பல்கள் கணிசமான வளர்ச்சியைப் பதிவுசெய்தமையின் மூலம் நடைமுறைக் கணக்கு வலுவடைந்திருக்கிறது. நிதியியல் கணக்கில் அரச பிணையங்கள் சந்தையிலிருந்து சிறிதளவு வெளிநாட்டு முதலீட்டு வெளிப்பாய்ச்சல்கள் பதிவுசெய்யப்பட்ட வேளையில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையும் இம்மாத காலப்பகுதியில் ஒரு சில வெளிநாட்டு முதலீட்டு வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்திருக்கிறது. உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் காணப்பட்ட அதிகரித்த தேறிய உட்பாய்ச்சல்களின் காரணமாக மத்திய வங்கி மொத்த அலுவல்சார் ஒதுக்குகளைக் கட்டியெழுப்புவதற்காக இம்மாத காலப்பகுதியில் வெளிநாட்டுச் செலாவணியினை ஈர்த்துக் கொள்ளக்கூடியதொரு நிலையில் காணப்பட்டது. ஓகத்தில் நடுப்பகுதியில் ஓரளவு தளம்பல்களை எடுத்துக்காட்டிய இலங்கை ரூபா மாதத்தின் இறுதியில் உறுதியடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Friday, October 9, 2020