மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி - 2019

நாட்டின் வர்த்தக மற்றும் நிர்வாக தலைநகரத்தை தன்னகத்தே கொண்ட மேல் மாகாணம், பொருளாதாரத்தின் முன்னோடியாக தொடர்ந்தும் விளங்கியது. எனினும் பிராந்திய ஏற்றத்தாழ்வு சுருக்கமடைவதற்கு பங்களித்து அதன் பங்கு வீழ்ச்சியடைந்தது

நாட்டின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பாரிய பங்கினை (39.1 சதவீதம்) மேல் மாகாணம் தனதாக்கிக் கொண்டது. எனினும், ஏனைய மாகாணங்களில் கிடைத்த அதிகரித்த பங்களிப்பின் காரணமாக அதன் பங்கு 2018 இலிருந்து 0.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. மத்திய (11.5 சதவீதம்) மற்றும் வடமேல் (10.7 சதவீதம்) மாகாணங்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளுக்கு தரப்படுத்தப்பட்டன.

வடக்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களின் மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்குகள் அதிகரித்த அதேவேளை மேல், மத்திய, தென், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ஆண்டிற்கு ஆண்டு பங்கு வீழ்ச்சிகள் அவதானிக்கப்படக்கூடியதாகவிருந்தது.

முழுவடிவம்

Published Date: 

Friday, December 18, 2020