பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான கொடுகடன் ஆதரவு

நாட்டில் பொருளாதார வளர்ச்சியினை துரிதப்படுத்தும் நோக்குடன் வங்கித்தொழில் துறையின் தகைமையுடைய சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சிக் கடன் பெறுநர்களுன்கென விசேட கொடுகடன் ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, வங்கியல்லா நிதி நிறுவனங்கள் துறை கடன் பெறுநர்களுக்கும் நன்மைகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தினைக் கருத்திற்கொண்டு வங்கியல்லா நிதி நிறுவனங்களுக்கும் இதனையொத்த திட்டமொன்றினை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. 

அதற்கமைய, இலங்கை மத்திய வங்கியானது பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான கொடுகடன் ஆதரவு என்ற 2020ஆம் ஆண்டின் 01ஆம் இலக்கச் சுற்றறிக்கையில் குறித்துரைக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் 2019.12.31 அன்று உள்ளவாறு செயலாற்றமற்றவையாக ஏற்கனவே வகைப்படுத்தப்பட்ட வருமானம் ஈட்டுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற தனிப்பட்டவர்களுக்கும் நிறுவனங்களுக்குமென விசேட கொடுகடன் ஆதரவுத் திட்டமொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. 

எனவே, இத்திட்டத்தின் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அனைத்துத் தகைமையுடைய கடன் பெறுநர்களும் 2020.03.31 அன்று அல்லது அதற்கு முன்னர் தொடர்புடைய உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கு/ சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கு எழுத்திலான கோரிக்கையொன்றினைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கு/ சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட சுற்றறிக்கை, பின்வரும் இணைய முகவரியின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. (https://www.cbsl.gov.lk/en/laws/directions-circulars-guidelines-for-non-banks)

Published Date: 

Thursday, March 12, 2020