இலங்கை மத்திய வங்கியானது கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்த்தொற்றுப் பரவுதலினால் ஏற்படக்கூடிய வெளிநாட்டுச் செலாவணி வீதம் மீதான அழுத்தத்தினை இலகுபடுத்தவும் மற்றும் நிதியியல் சந்தைக் குழப்பத்தைத் தடுப்பதற்கும் அவசரமான வழிமுறைகளை அறிமுகப்படுத்துகின்றது

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டம், 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டம் மற்றும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டம் என்பனவற்றின் ஒதுக்கங்களின் அடிப்படையில், இலங்கை மத்திய வங்கியானது கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்த்தொற்றுப் பரவுதலினால் ஏற்படக்கூடிய வெளிநாட்டுச் செலாவணி வீதம் மீதான அழுத்தத்தினை இலகுபடுத்தவும் மற்றும் நிதியியல் சந்தைக் குழப்பத்தைத் தடுப்பதற்கும் பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இதன்படி, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கி என்பன உடனடியாக நடைமுறைக்குவரும் வகையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்:  
 
1.2020ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டப் பணிப்புரைகளின் கீழ் குறிப்பாக விலக்கப்பட்டவை தவிர்த்து நாணயக் கடிதத்தின் கீழ் அனைத்து விதமான மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு வசதிப்படுத்தலினை இடைநிறுத்தல்.
 
2.நாணயக் கடிதம், ஏற்றுக்கொள்வதற்கெதிரான ஆவணங்கள் மற்றும் முற்கொடுப்பனவுகளின் கீழ் 2020ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் பணிப்புரைகளில் குறித்துரைக்கப்பட்டவாறான அத்தியாவசியமற்ற பண்டங்களிற்கான இறக்குமதிக்கு வசதிப்படுத்தலினை இடைநிறுத்தல்.
 
3.இலங்கையின் உரிமம்பெற்ற வங்கிகளினால் இலங்கைக்கான நாட்டிற்கான பன்னாட்டு முறிகளைக் கொள்வனவு செய்வதிலிருந்து இடைநிறுத்தல்.
 
இதற்கு மேலதிகமாக, அதிகாரமளிக்கப்பட்ட வெளிநாட்டுச் செலாவணியின் வணிகர்கள் பிரயாணக் கொடுப்பனவாக வெளிநாட்டு நாணயத் தாள்களில் அதிகபட்சமாக 5,000 ஐ.அ.டொலருக்கு (அல்லது அதற்குச் சமமான ஏதாயினும் வேறு வெளிநாட்டு நாணயம்) மாத்திரம் மட்டுப்படுத்தி வழங்குவதற்கு அனுமதியளிக்கப்படுகின்றனர்.
 
இலங்கை மத்திய வங்கியானது சந்தை அபிவிருத்திகளைத் தொடர்ந்தும் கண்காணிப்பதுடன் தேவைப்படும் பொழுது மேலதிக வழிமுறைகளை எடுக்கும் வேளையில், சீரான செயற்பாடுகளை வசதிப்படுத்துவதற்கு சந்தையில் தேவைப்படும் அளவிற்குத் திரவத்தன்மையை மற்றும் கொரோனா வைரஸ் (கொவிட் - 19) தொற்றுப் பரவலுக்கு மத்தியில் சந்தை நம்பகத்தன்மையின் நிலைத்திருக்கும் தன்மையை உறுதிப்படுத்திக்கொள்கின்றது.

Published Date: 

Thursday, March 19, 2020