இரஜரட்டை மற்றும் வயம்ப மக்களை சந்திக்கின்றது இலங்கை மத்திய வங்கி

இரஜரட்டை மற்றும் வயம்ப பிராந்திய மக்களுக்கு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு மத்திய வங்கி சேவைகளின் இலகுவான கிடைப்பனவை மற்றும் மத்திய வங்கியின் நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்ட பொதுமக்களுக்கான சேவைநாள் நிகழ்ச்சித்திட்டமானது இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலக வளாகத்திலும் மற்றும் அனுராதபுர பொது மைதானத்திலும் (சல்காடோ) 2018 செத்தெம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்ச்சித்திட்டமானது காலை 9.00 மணி முதல் 7.00 மணி வரை இடம்பெறுவதுடன் ஊழியர் சேம நிதியம் தொடர்பான பிரச்சனைகளை தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புக்களை பெறுவதற்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிக் கொடுகடன் திட்டங்கள் மற்றும் தொடர்புடைய சேவைகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பினைப் பொதுமக்கள் பெற்றுக்கொள்வர். சேதமடைந்த நாணயத் தாள்களை மாற்றுவதற்கும் நாணயக் குத்திகளைப் பெற்றுக்கொள்வதற்குமான நாணயப் பரிமாற்று வசதியும் இடம்பெறும். 

கடன் தகவல் பணியம் பற்றிய சேவைகளை வழங்குதல் மற்றும் கொடுகடன் ஆலோசனை நிலையம் உள்ளடங்கலாக தற்கால நிதியியல் சூழல் மற்றும் நிதியியல் அறிவு என்பனபற்றி பொதுமக்களை அறிவூட்டுவதனை நோக்காகக் கொண்ட பல எண்ணிக்கையான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் செயலமர்வுகளும் இந்நிகழ்வில் நடைபெறவுள்ளன. பங்கேற்பவர்கள் அனுராதபுர பிரதேச அலுவலகத்தின் நாணய அருங்காட்சியகத்தை பார்வையிட சந்தர்ப்பத்தைப் பெறுவதுடன் மத்தயி வங்கி வெளியீடுகளை 25மூ கழிவில் கொள்வனவு செய்யலாம். 

மத்திய வங்கித்தொழில் சேவைகளை வழங்குவதற்கு மேலதிகமான, பொதுமக்களுக்கான சேவைநாள் நிகழ்ச்சித்திட்டமானது சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சியாளர்களின் உற்பத்திக்கூடங்களையும் கொண்டிருக்கும். எனவே, இவ்வாய்ப்பிலிருந்து உச்ச பயனை பெற்றுக்கொள்ளுமாறு இரஜரட்டை மற்றும் வயம்ப பிரதேச மக்களை இலங்கை மத்திய வங்கி அழைக்கின்றது.

Published Date: 

Wednesday, September 19, 2018