இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2019 மாச்சு

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 46–மாதம் உயர்வுத்தன்மையை அடைந்திருந்ததுடன் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஓர் எழுச்சியையும் சமிக்ஞைப்படுத்தியிருந்தது. பருவகால கேள்விகளுக்கு இணங்கிச்செல்லும் வகையில் குறிப்பாக உணவு மற்றும் குடிபானங்கள் தயாரிப்பு தொடர்பில் அதிகரித்த புதிய கட்டளைகளினால் மார்ச் மாதத்தில் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அதிகரித்திருந்தது. 

ஏப்பிரல் மாதத்தின் புதுவருட விடுமுறைகளின் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட உற்பத்தி மட்டங்களை அடைந்துகொள்ளும் நோக்கில் உற்பத்தியும் கணிசமானளவில் அதிகரித்திருந்தது. இறுக்கமான உற்பத்தி அட்டவணைகளுக்கு ஏற்றவகையில் மாதகாலப்பகுதியில் கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை என்பனவும் அதிகரித்திருந்தன. குறிப்பாக புடவைகள் மற்றும் ஆடைகள் துறையிலுள்ள பெருமளவான பதிலளிப்பாளர்கள் முன்னோக்கிய பண்டிகை விடுமுறைகளின் கட்டளைகளை சரியான நேரத்தில் பூர்த்தி செய்யும் நோக்கில் மேலதிக நேர வேலையினை மேற்கொள்ளவேண்டியமையை குறித்துக்காட்டியிருந்தனர். மேலும், நிரம்பலாளர்களின் விநியோக நேரங்களின் விரிவாக்கமும் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்கு சாதகமாக பங்களித்திருந்தது. 

முழுவடிவம் 

Published Date: 

Tuesday, April 16, 2019