வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 சனவரி

வர்த்தகப் பற்றாக்குறையானது ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் வீழ்ச்சியடைந்த அதேவேளையில் இறக்குமதிகள் மீதான செலவினம் அதிகரித்தமையின் காரணமாக 2019 சனவரியுடன் ஒப்பிடுகையில் 2020 சனவரியில் விரிவடைந்தது. சுற்றுலாக் கைத்தொழிலானது 2019இன் இறுதியில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களிலிருந்து துரிதமாக மீட்சியடைந்த போதிலும் கொவிட் - 19 நோய்த்தொற்று 2020 சனவரியில் மீட்சியடைகின்ற போக்கினைத் திரும்பலடையச் செய்தது. தொழிலாளர் பணவனுப்பல்கள், 2020 சனவரியில் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன. அதேவேளை, அரச பிணையங்கள் சந்தையிலிருந்தான வெளிநாட்டு முதலீடுகள் 2020 சனவரியில் தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த அதேவேளை கொழும்புப் பங்குச் சந்தையிலிருந்து தேறிய வெளிப்பாய்ச்சலொன்று அவதானிக்கப்பட்டது. இலங்கை ரூபா ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிராக பரந்தளவில் நிலையானதாகக் காணப்பட்டதுடன் மீண்டும் 2020 சனவரியில் உயர்வடைந்தது. ஆயினும், கொவிட் - 19 உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக மாச்சில் சடுதியாக பெறுமானத் தேய்வடைந்தது. 
 

Published Date: 

Monday, March 30, 2020