ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனங்கள், துணை-துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துக்களின் விற்பனை

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனங்கள், துணை-துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துக்களின் விற்பனை 

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் அதன் துணை நிறுவனங்கள் துணை-துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச்  சொத்துக்களை விற்பனை செய்தமை பற்றியும் அது தொடர்பில் மத்திய வங்கியின் ஈடுபாடு பற்றியும் பரப்பப்படும் சில தவறான தகவல்களைப் பற்றியும் இலங்கை மத்திய வங்கியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

குறிப்பிட்ட கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பின்வருவன பற்றித் தெளிவுபடுத்த விரும்புகின்றது. 

  1. எல்லா நேரங்களிலும் இலங்கை மத்திய வங்கி அடையாளம் காணப்பட்ட சொத்துக்களை ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் வைப்பாளர்களுக்கு மிகச்சிறந்த நன்மைகளை வழங்குகின்ற விதத்தில் வாய்ப்புக்களைக் கொண்ட வாங்குனர்களுக்கு பூரணமாக விற்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினையே பேணியது.
  2. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை எப்பொழுதும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிறுவனமொன்றில் முதலீடு செய்வதற்கு அல்லது அத்தகைய நிறுவனத்தின் சொத்துக்களை கொள்வனவு செய்வது தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையும் தொடர்பான நிறுவனத்துடன் நேரடியாகவே கையாளப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினையே பேணி வந்தது. எனவே ஈரிஐ பினான்ஸ்ஸில் முதலீடு செய்வதற்கு அத்துடன்ஃ அல்லது அதன் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கான அனைத்து கோரிக்கைகளும் கம்பனிக்கே அனுப்பப்பட்டன. இதன்படி, ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் சொத்துக்கள் மாற்றல் செய்யவேண்டிய தரப்பினரின் தெரிவு ஈரிஐயின் பணிப்பாளர் சபையினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் நாட்டின், ஏற்புடைத்தான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுடன் இணங்கிச் செல்லும் விதத்தில் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்வது உட்பட, பல்வேறு நிபந்தனைகளுக்குள்பட்டு வைப்பாளர்களின் நலவுரித்துகளைக் பாதுகாக்கும் நோக்கிலிருந்து மட்டுமே நாணயச் சபை ஒப்புதலை வழங்கியிருக்கிறது.
  3. வாய்ப்;புக்களைக் கொண்ட வாங்குனர்களினால் செய்யப்பட்ட பல்வேறு விலைக்குறிப்பீடுகள் ஐ.அ.டொலர் 61 மில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 75 மில்லியன் வரையிலான வீச்சினைக் கொண்டிருந்த வேளையில் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் பணிப்பாளர் சபையினால் முன்மொழியப்பட்ட தரப்பினர் அடுத்த மிகவுயர்ந்த விலைக்குறிப்பீட்டினை மேற்கொண்ட தரப்பினரை விட ஐ.அ.டொலர் 14 மில்லியன் கூடுதலாக ஐ.அ.டொலர் 75 மில்லியன் கொண்ட மிக உயர்ந்த விலைக்குறிப்பீட்டினைச் செய்திருந்தமையினால்  அத்தரப்பினருக்கு ஒப்புதலை வழங்கியது. மேலும், தற்போதைய வாங்குனர் மட்டுமே ஈரிஐ பினான்ஸ் பணிப்பாளர் சபையினால் விதந்துரைக்கப்பட்ட ஒரே தரப்பினர் ஆவர். ஈரிஐ பினான்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு சாத்தியமான நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக நாணயச்சபை ஆரம்ப விலைக்குறிப்பீடான ஐ.அ.டொலர் 60 மில்லியனை ஐ.அ.டொலர் 75 மில்லியனுக்கு அதிகரிப்பதற்கு அயராது பாடுபட்டது. 
  4. இலங்கை மத்திய வங்கி, கொடுக்கல்வாங்கல்கள் ஏற்புடைத்தான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படுவதனை எப்பொழுதும் வழியுறுத்தி வந்திருக்கிறது. எனவே புகழ்பெற்ற வங்கித்தொழில் வழிப்படுத்தலின் ஊடாக ஈரிஐ பினான்ஸ்க்கு வழிப்படுத்தப்பட்ட கொடுக்கல்வாங்கல்களை தொடர்பான வங்கிகள் ஏற்புடைத்தான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளின் படி, அதிகரிக்கப்பட்ட நெருங்கிய கண்காணிப்பின் ஊடாக நிதியங்களைத் தீர்ப்பனவு செய்தமையினைத் தொடர்ந்து, ஒவ்வொரு தொகுதிக்கும் இலங்கை மத்திய வங்கியினால் ஒப்புதளிக்கப்பட்டது

தற்பொழுது ஐ.அ.டொலர் 75 மில்லியன் கொண்ட மொத்தத் தொகையில் ஐ.அ.டொலர் 54 மில்லியன் ஈரிஐ பினான்ஸ்க்கு பெறப்பட்டிருப்பதுடன் இது முக்கியமாக கம்பனியின் வைப்புக்களில் 20 சதவீதத்தினை மீளச்செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், வாங்குனர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, பல்வேறு காரணங்களினால் தாமதிக்கப்பட்ட ஐ.அ.டொலர் 16 மில்லியன் 2019 பெப்புருவரி மாதத்திற்கிடையில் கம்பனியினால் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

 

Published Date: 

Monday, February 11, 2019