அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எம்மைப் பற்றி

இலங்கை மத்திய வங்கி என்றால் என்ன?

இலங்கையின் நிதியியல் துறையில் உச்ச மட்ட நிறுவனமாக இலங்கை மத்திய வங்கி விளங்குகின்றது. அரைவாசியளவு சுயநிர்ணயம் கொண்ட நிறுவனமொன்றாக 1950ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கி நிறுவிய 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்திற்கு பதிலீடாக 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டம் 2023 செத்தெம்பரில் சட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. புதிய சட்டத்தின் கீழ், இலங்கை மத்திய வங்கியானது சுயநிர்ணயம் கொண்டதும் வகைகூறுவதாகவும் இருக்க வேண்டும். சட்ட ரீதியான ஆளும் தன்மையுடன் காணப்படும் கூட்டிணைக்கப்பட்ட குழுவொன்றாக, இலங்கை மத்திய வங்கியானது இலங்கையின் நாணய, நிதியியல் மற்றும் கொடுப்பனவு முறைமைகளின் நிர்வாகத்திற்கு பொறுப்புடையதாக இருக்க வேண்டும். இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரகாரம், திறைசேரிக்கான செயலாளர் மத்திய வங்கியின் தீர்மானத்தை மேற்கொள்ளும் ஏதேனும் குழுக்களுக்கு பாகமாக இனிமேலும் இருக்கமாட்டார்.

நாணயச் சபை என்றால் என்ன?

ஆளுநரின் தலைமையில் ஆளும் சபையும் நாணயக் கொள்கைச் சபையும் என்ற இரு சமாந்தரமான தீர்மானம் மேற்கொள்ளும் குழுக்களை புதிய ஆளுகைக் கட்டமைப்பு உள்ளடக்குகின்றது.

ஆளும் சபை - இலங்கை மத்திய வங்கியின் அலுவல்களினது நிருவாகத்தையும் முகாமையையும் மேல்நோக்குகின்ற மற்றும் நாணயக்கொள்கை தவிர மத்திய வங்கியின் பொதுக்கொள்கையைத் தீர்மானிக்கின்ற பொறுப்புடைமை பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

நாணயக் கொள்கைச் சபை – உள்நாட்டு விலையின் உறுதிப்பாட்டை அடைவதற்கும் பேணவதற்குமென நெகிழ்வான பணவீக்க இலக்கிடல் கட்டமைப்புக்கிணங்க இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கையை வகுத்தமைத்தலும் நெகிழ்வான செலாவணி வீதத் தோற்றப்பாட்டை நடைமுறைப்படுத்தலும் இதற்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

நாணயச் சபையில் அங்கம் வகிப்போர் யார்? அவர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகின்றார்கள்?

ஆளும் சபை

இலங்கை மத்திய வங்கியின் அலுவல்களினது நிருவாகத்தையும் முகாமையையும் மேல்நோக்குகின்ற மற்றும் நாணயக்கொள்கை தவிர மத்திய வங்கியின் பொதுக்கொள்கையைத் தீர்மானிக்கின்ற பொறுப்புடைமை மத்திய வங்கியின் ஆளும் சபைக்கு பொறுப்பிக்கப்பட்டுள்ளது.ஆளும் சபையானது மத்திய வங்கியின் ஆளுநரையும் (ஆளும் சபையின் தலைவராக இருக்க வேண்டும்), பொருளியல், வங்கித்தொழில், நிதி, கணக்கீடு மற்றும் கணக்காய்வு, சட்டம் அல்லது இடர்நேர்வு முகாமைத்துவம் என்பவற்றில் நிபுணத்துவத்தைக் கொண்ட ஆறு உறுப்பினர்களையும் கொண்டிருத்தல் வேண்டும். ஆளும் சபையின் செயலாளர் மத்திய வங்கியின் ஊழியரொருவாக இருப்பதுடன் மத்திய வங்கியின் ஆளுநரினால் பெயர்குறித்து நியமிக்கப்படுதல் வேண்டும்.

நாணயக் கொள்கைச் சபை

உள்நாட்டு விலையின் உறுதிப்பாட்டை அடைவதற்கும் பேணவதற்குமென நெகிழ்வான பணவீக்க இலக்கிடல் கட்டமைப்புக்கிணங்க இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கையை வகுத்தமைத்தலும் நெகிழ்வான செலாவணி வீதத் தோற்றப்பாட்டை நடைமுறைப்படுத்தலும் மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபைக்கு பொறுப்பிக்கப்பட்டுள்ளது. நாணயக் கொள்கைச் சபையானது, இலங்கையின் பேரண்ட பொருளாதார மற்றும் நிதிநிலைமையைக் கணக்கிற்கெடுத்து, பணத்தின் வழங்குகை, பணம் கிடைக்கக்கூடியமை மற்றும் பணத்தின் கொள்விலை என்பவற்றை ஒழுங்குபடுத்துதல் வேண்டும். நாணயக் கொள்கைச் சபையானது ஆளுநரையும் (ஆளும் சபையின் தலைவராக இருக்க வேண்டும்), பொருளாதாரம் மற்றும் நிதியில் இரு நிபுணர்களையும், விலை உறுதிப்பாட்டுக்கு பொறுப்பாகவுள்ள மத்திய வங்கியின் பிரதி ஆளுநரையும், நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக்கு பொறுப்பாகவுள்ள மத்திய வங்கியின் பிரதி ஆளுநரையும் கொண்டிருக்கின்றது. நாணயக் கொள்கைச் சபையின் செயலாளர் மத்திய வங்கியின் ஊழியரொருவாக இருப்பதுடன் மத்திய வங்கியின் ஆளுநரினால் பெயர்குறித்து நியமிக்கப்படுதல் வேண்டும்.