அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எமது தாய்நாட்டிற்கு உதவுவதற்கு நாம் ஒன்றிணைந்து நன்கொடை வழங்குவோம்
எனது தாராளமிக்க நன்கொடை ஏன் இலங்கைக்குத் தேவைப்படுகின்றது?
‘டித்வா’ புயல் மூலம் ஏற்படுத்தப்பட்ட அண்மைய பேரழிவுமிக்க வானிலை நிலைமைகளால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்குகள், நிலச்சரிவுகள் பல வீடுகளை நாசப்படுத்தி, சேதமடையச்செய்து பல குடும்பங்களின் வாழிடங்களை இல்லாமல் செய்துள்ளது. பல எண்ணிக்கையான பிரசைகள் தமது வாழ்வாதாரங்களையும் இழந்து மீண்டுவருவதை மேலும் சவால்மிக்கதாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள அத்துடன் தமது அன்புக்குரியவர்களையும் இழந்துள்ளவர்களுக்கு உங்களது தாராளத்தன்மை மிகவும் அவசியப்படும் நிவாரணத்தை வழங்கலாம். இன்றியமையாத உங்களது ஆதரவிற்காக அரசாங்கம் உத்தியோகபூர்வ வழிகளை நிறுவியுள்ளது. பாதிக்கப்பட்ட அல்லலுறும் எமது சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் உங்களது ஒவ்வொரு பங்களிப்பும் நம்பிக்கையையும் அத்தியாவசிய உதவியையும் கொண்டுசேர்க்கும்.
உணவுக்கும் உறையுள்ளுக்கும் தற்போது போராடுகின்ற ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு உங்களது நன்கொடைகள் அவசர நிவாரணத்தை வழங்குவதற்கு உதவும்.
எனது நன்கொடையை இலங்கை மத்திய வங்கியின் ஊடாக எவ்வாறு அனுப்பலாம்?
நீங்கள் உங்களது நன்கொடையை இலங்கை மத்திய வங்கிக்காக பேணப்படுகின்ற பின்வரும் எந்தவொரு வங்கிக் கணக்குகளுக்கும் வங்கி மாற்றலொன்றினூடாக அனுப்பலாம்.
|
இல. |
நாணயம் |
வங்கியின் பெயர் |
கணக்கு விபரங்கள் |
| 1. | ஐ.அ.டொலர் (USD) |
Deutsche Bank Trust Company Americas New York, NY USA |
பெறுநர் கணக்குப் பெயர் : Central Bank of Sri Lanka கணக்குள்ள வங்கி : Deutsche Bank Trust Company Americas கணக்கு இலக்கம் : 04015541 கணக்கு வகை : Demand Deposit Account(DDA) வழிப்படுத்தல் இலக்கம்: 021001033 SWIFT குறியீடு: BKTRUS33XXX |
| 2. | யூரோ (EUR) |
ODDO BHF Bank - Frankfurt Am Main Germany |
பெறுநர் கணக்குப் பெயர் : Central Bank of Sri Lanka கணக்குள்ள வங்கி : ODDO BHF Bank கணக்கு இலக்கம் : 0000739854 IBAN : DE39500202000000739854 SWIFT குறியீடு: BHFBDEFF500 |
| 3. | ஸ்ரேலிங் பவுன் (GBP) |
HSBC London
|
பெறுநர் கணக்குப் பெயர் : Central Bank of Sri Lanka கணக்குள்ள வங்கி : HSBC Bank Plc கணக்கு இலக்கம் : 39600144 வகைக் குறியீடு : 400515 IBAN : GB48MIDL40051539600144 SWIFT: MIDLGB22XXX |
| 4. | ஸ்ரேலிங் பவுன் (GBP) |
Bank of Ceylon (UK) LTD London, UK |
பெறுநர் கணக்குப் பெயர் : Central Bank of Sri Lanka கணக்குள்ள வங்கி : Bank of Ceylon (UK) LTD கணக்கு இலக்கம் : 88001249 கணக்கு வகை : Business Account வகைக் குறியீடு : 405056 IBAN : GB89BCEY40505688001249 SWIFT குறியீடு: BCEYGB2LXXX |
| 5. | யப்பானிய யென் (JPY) |
MUFG BANK TOKYO |
பெறுநர் கணக்குப் பெயர் : Central Bank of Sri Lanka கணக்குள்ள வங்கி : MUFG BANK கணக்கு இலக்கம் : 653-0407895 SWIFT: BOTKJPJTXXX குறிப்பு: இக்கணக்கிற்கான நிதியங்கள் வெளிநாட்டுப் பணவனுப்பலொன்றாக அனுப்பப்பட வேண்டும். |
|
6. |
அவுஸ்திரேலிய டொலர் (AUD) | Reserve Bank of Australia |
பெறுநர் கணக்குப் பெயர் : Central Bank of Sri Lanka கணக்குள்ள வங்கி: Reserve Bank of Australia கணக்கு இலக்கம் : 817364 BSB : 092002 SWIFT: RSBKAU2SXXX |
நன்கொடைகளுக்கான பயன்பெறுநரின் முகவரி என்ன?
30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 00100, இலங்கை
யார் நன்கொடை வழங்கலாம்?
நலன்விரும்பிகளாகவிருக்கின்ற எந்தவொரு தேசத்தவரும்
நன்கொடைகளை அனுப்புவதற்கு SWIFT வலையமைப்பைப் பயன்படுத்துவது கட்டாயமா?
இல்லை.
நீங்கள் வதிகின்ற நாட்டில் கிடைக்கப்பெறுகின்ற நிதி மாற்றல் பொறிமுறைகளை பயன்படுத்தும் சாத்தியம் காணப்படுகின்றது (உ-ம் கொடுப்பனவுச் செயலிகள்)
அதிகளவு பெறுமதியிலான நன்கொடைகளுக்காக வேண்டப்படுகின்ற சந்தர்ப்பத்தில் SWIFT தகவல்கள் தரப்பட்டுள்ளன.
எனது நன்கொடை கிடைக்கப்பெற்றமை பற்றி எவ்வாறு அறிந்துகொள்ளலாம்?
உங்களது நன்கொடைகளைச் செலுத்துகின்ற போது நிதிமாற்றல் அறிவுறுத்தலில் தயவுசெய்து உங்களது பெயரைக் குறிப்பிடுவதை உறுதிசெய்யுங்கள். கொடுப்பனவை நிறைவுசெய்ததன் பின்னர் இலங்கை மத்திய வங்கிக்கான கொடுப்பனவுத் திகதியுடன் சேர்த்து கொடுப்பனவு உறுதிப்படுத்தலின் பிம்பத்தை fdacc@cbsl.lk ஊடாக தயவுசெய்து மின்னஞ்சல் செய்யவும். தொடர்புடைய கணக்கிற்கு நிதியங்கள் வரவுவைக்கப்பட்டு அவை உங்களது கொடுப்பனவு உறுதிப்படுத்தலுடன் இணக்கம் பார்க்கப்பட்டதும் உங்களது கொடுப்பனவின் கிடைப்பனவை உறுதிப்படுத்தி கிடைக்கப்பெற்றமை பற்றிய மின்னஞ்சலொன்று உங்களுக்குக் கிடைக்கப்பெறும்.
நீங்கள் உங்களது நன்கொடையை ஏற்கனவே அனுப்பியுள்ளீர்களாயின் கிடைக்கப்பெற்றதை உறுதிப்படுத்துவதற்கு வங்கியின் பெயர், பணவனுப்பல் திகதி, தொகை அத்துடன் ஏதேனும் தொடர்பை அல்லது உங்களது பெயரை எமக்கு அறிவிக்கவும்.
நிதியங்களை இலங்கை மத்திய வங்கி பெற்றுக்கொண்டதன் பின்னர் அவற்றிற்கு என்ன நடக்கும்?
அனைத்து நிதியங்களும் ‘இலங்கை மீளக்கட்டியெழுப்பும் நிதியம்’ இற்கு வரவுவைக்கப்படும்.
எனது நன்கொடை தொடர்பில் மேலதிகத் தகவல்களை நான் எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்?
fdacc@cbsl.lk ஊடாக இலங்கை மத்திய வங்கிக்கு மின்னஞ்சலொன்றை அனுப்புவதன் வாயிலாக அல்லது +94768315782 என்ற வட்ஸப் இலக்கத்திற்கு செய்தியொன்றை அனுப்புவதன் வாயிலாக ஏதேனும் விசாரணையை மேற்கொள்ளலாம்.








