முனைவர். சி. அமரசேகர

துணை ஆளுநர்

திருமதி டவுளுகல, வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு, நிதி, பன்னாட்டுத் தொழிற்பாடுகள், இடர்நேர்வு முகாமைத்துவம், பிரதேச அபிவிருத்தி, மனிதவள முகாமைத்துவம் மற்றும் பயிற்சி அத்துடன் அபிவிருத்தி ஆகிய துறைகளில் வேறுபட்ட பதவிகளில் இலங்கை மத்திய வங்கியில் 31 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியுள்ளார்.

இவர் முன்னர் இலங்கை, இந்தியா, வங்காளதேசம் மற்றும் பூட்டான் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராக ஐக்கிய அமெரிக்காவின் வொசிங்கடன் டீ சி நகரில் அமைந்துள்ள பன்னாட்டு நாணய நிதியத்திற்கு விடுவிக்கப்பட்டிருந்தார் (2022 சனவரி- 2025 பெப்புருவரி).

முனைவர் அமரசேகர நாணயக் கொள்கை மற்றும் பேரண்ட பொருளாதார ஆராய்ச்சியில் விசேடத்துவம் பெற்றுள்ளதுடன், பன்னாட்டு நாணய நிதியத்தில் அவரது பொறுப்புக்களை ஏற்பதற்கு முன்னர், பொருளாதார ஆராய்ச்சிப் பணிப்பாளராக இருந்தார். முனைவர் அமரசேகர மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபைக்கு மேலதிகமாக, நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழு மற்றும் சந்தைத் தொழிற்பாடுகள் குழு, இடர்நேர்வு முகாமைத்துவக் குழு என்பவற்றில் உறுப்பினராகவும் இருக்கின்றார். இவர் தற்போது கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் ஆளுர்கள் சபை மற்றும் இலங்கை ஏற்றுமதிக் கொடுகடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை என்பவற்றின் உறுப்பினரொருவராகவும் இருக்கின்றார். இவர் முன்னர் ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சிப் பயிற்சி நிலையத்தின் உறுப்பினராகவும் தேசிய விஞ்ஞான மன்றத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆராய்ச்சிப் பணிக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

நாணயக் கொள்கை மற்றும் வேறு மத்திய வங்கிதொழில் கருப்பொருட்கள் பற்றிய முனைவர் அமரசேகரவின் ஆராய்ச்சி பல பன்னாட்டு மற்றும் உள்நாட்டுச் சஞ்சிகைகளில் வெளியிடப்பட்டுள்ளதுடன் பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு மேற்கோள் காட்டப்படுகின்றது. 2015-2020 வரையான காலப்பகுதியில், இவர் மத்திய வங்கி சஞ்சிகையின்; அலுவலர் ஆய்வுத் தொடர்களின் பதிப்பாசிரியராகவுமிருந்தார். பல்கலைக்கழங்கள், இலங்கை வங்கியாளர்களின் நிறுவகம் மற்றும் வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம் போன்றவை உட்பட பல்வேறு கல்விசார் மற்றும் தொழில்சார் நிபுணத்துவ நிறுவனங்களில் இவர் வருகைதரு விரிவுரையாளாராகவும், பரீட்சகராகவும், வினாவிடைப் போட்டித் தலைவராகவும் தன்னார்வமாக பணியாற்றியுள்ளார். 

முனைவர் அமரசேகர ஐக்கிய இராச்சியத்தில் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்திலிருந்து பொருளியலில் முனைவர் பட்டத்தையும் ஐக்கிய இராச்சியத்தில் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்திலிருந்து திறமைச் சித்தியுடன் பொருளியலில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தையும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து முதல் வகுப்பு கௌரவத்துடன் பொருளியலில் கலைமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் சட்டத்தரணியுமாவார்.