2025இல், இலங்கை மத்திய வங்கியானது தேசத்தின் பொருளாதார பயணத்தினை செம்மையாக்கும் மரபுரிமையை நினைவுகூரும் முகமாக தனது 75ஆவது ஆண்டு நிறைவினை குறிக்கின்றது. அதன் வரலாறு முழுவதும், விலை நிலையுறுதியினை பேணுதல், நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை பேணிக்காத்தல் மற்றும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை பேணிவளர்த்தலில் இலங்கை மத்திய வங்கி ஏதுவாக இருந்து வருகின்றது. இந்நோக்கில், இந்த தேசம் தழுவிய சித்திரப்  போட்டியானது  இந்த மைல்கல்லை மாத்திரமன்றி, இலங்கை மத்திய வங்கியின் ஆர்வலர்களுடன் இணைப்பதையும் கொண்டாடுகின்றது. இந்த முயற்சி தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் இலங்கை மத்திய வங்கியின் வகிபங்கு குறித்த தங்கள் எண்ணப்பாடுகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்துவதற்கு இலங்கையர்களை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கை மத்திய வங்கிக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான வலுவான தொடர்புகளை மேம்படுத்துவதை  நோக்கமாகக் கொண்டுள்ளது. 

கருப்பொருள்

இலங்கை மத்திய வங்கி: உங்களது பார்வையில்’  எனும் கருப்பொருளின் ஊடாக தனிநபர், சமூக அத்துடன்/அல்லது தேசிய மட்டத்தில் இலங்கையர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் இலங்கை மத்திய வங்கி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினை எவ்வாறு நோக்குகின்றீர்கள் என்பதனை ஆக்கப்பூர்வமாக படைப்பதற்கு உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். விலை நிலையுறுதியினை பேணுதல், நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை பேணிக்காத்தல், பொருளாதார வளர்ச்சியின் ஊடாக வாய்ப்புக்களை உருவாக்குதல், டிஜிட்டல் வங்கித்தொழில் அத்துடன்/அல்லது கொடுப்பனவுகளை இலகுப்படுத்தல், நிலைபேறான நிதியியல் முயற்சிகளை மேம்படுத்தப்பட்ட வானிலை தொடர்பான தாக்குப்பிடிக்கும் தன்மை அத்துடன்/அல்லது பெண்களின்  வலுவூட்டலாக மாறுதலடைய செய்தல், நிதியியல் வசதிக்குட்படுத்தல் மற்றும் நிதியியல் அறிவு எதுவாகவிருப்பினும் ஏனையவற்றுக்கு மத்தியில் இலங்கை மத்திய வங்கி உங்களது வாழ்வில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை உங்களுடைய சித்திரங்களின் ஊடாக வெளிப்படுத்துவதற்கு பங்கேற்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. பங்கேற்பாளர்கள் அவர்களுக்கு பொருத்தமான இத்துறைகளில் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றை தெரிவு செய்யலாம்.

தகைமை

இப்போட்டி கீழே குறிப்பிடப்பட்ட தகைமை பிரமானங்களை நிறைவு செய்யும் இலங்கை பிரசைகளுக்கானது.   

    • பங்கேற்பாளர்கள் பின்வரும் இரு பிரிவுகளில் ஒன்றில் போட்டியிடலாம்:
      • பாடசாலை மாணவர்கள்: தற்போது 10, 11, 12 அல்லது 13 ஆம் தரங்களில் கல்விப்பயிலும் மாணவர்கள்
      • திறந்த பிரிவு: 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்
    • பாடசாலை மாணவர்கள் திறந்த பிரிவின் கீழ் போட்டியில் பங்கேற்க முடியாது.
    • இலங்கை மத்திய வங்கியின் ஊழியர்கள் மற்றும் அவர்களின் உடனடி குடும்ப உறுப்பினர்கள் போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள். 
    • சமர்ப்பணங்கள் தனிநபர்களால் மாத்திரமே  மேற்கொள்ளப்பட  வேண்டும். குழுவாக சமர்ப்பிக்கும் சித்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 
    • ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒரு ஆக்கப்படைப்பினை மாத்திரமே சமர்ப்பிக்கலாம்.

பங்கேற்பாளரின் வயது மற்றும் தகைமைகளை உறுதிசெய்வதற்கு  தேசிய அடையாள அட்டை, அஞ்சல் அடையாள அட்டை அல்லது அடையாளத்தின் பிற ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றுகளின் பிரதி சித்திரங்களுடன் சேர்த்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

சித்திரங்களுக்கான தேவைப்பாடுகள்

ஏற்றுக்கொள்ளப்படும் ஊடகங்கள்
கைகளினால் வரையப்படும் பின்வரும் ஊடகங்களில் எவற்றையேனும் பயன்படுத்தி சித்திரங்களை சமர்ப்பிக்கலாம்:

    • பென்சில், கரி, பேனை, மை
    • நீர்வர்ணம், கண்ணாடி ஒளியிரு (acrylic) எண்ணெய் வர்ணம் (oil paint)
    • உலர்பசை வண்ணக்கோல்கள் (pastel),  ஊடகம் (ஆயின் அது ஒட்டுமொத்தமாக கைகளினால் வரையப்பட்டதாக அல்லது கைகளினால் நிறம்தீட்டப்பட்டதாக இருக்க வேண்டும்) 
    • குறிப்பு: டிஜிட்டல் கருவிகள், செயற்கை நுண்ணறிவு-மெருகூட்டல்கள் அல்லது கணினியினைக் கொண்டு உருவாக்கப்படும் சித்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தேவைப்படும் அளவு

    • கண்காட்சி தயார்படுத்தல் மற்றும் சட்டக அமைத்தலில் ஒரே சீர்மைக்காக சித்திரங்கள் A3 (11.7 x 16.5 அங்குலம்) நியம அளவில் காகிதத்தில் அல்லது வரைதிரையில் (canvas) மாத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். குறித்துரைக்கப்பட்ட இவ்வடிவங்களில காணப்படும் சித்திரங்கள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்.  

ஓவியரின் குறிப்பு (விவரணம்)

    • ஒவ்வொரு சமர்ப்பணமும் சித்திரப்படைப்பிற்கு பின்னாலுள்ள உத்வேகம்> செய்தி அல்லது தனிப்பட்ட கதையினை விளக்கி ஓவியரின் சுருக்க குறிப்புடன் (100 சொற்களுக்கு விஞ்ஞாமல்) சமர்பிக்கப்பட வேண்டும்.
    • பங்கேற்பாளரின் தெரிவில் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இந்த குறிப்பு சமர்பிக்கப்படலாம்.

சுய ஆக்கமும் சமர்ப்பணமும்

    • அனைத்து சமர்ப்பணங்களும் 100 சதவீதம் அசலானவையாகவும் கைகளினால்  வரையப்பட்டவையாகவும் இருத்தல் வேண்டும்.
    • சமர்ப்பணங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டதாக> காட்சிப்படுத்தப்பட்டதாக அல்லது ஏனைய போட்டிகளுக்கு சமர்பிக்கப்பட்டதாக இருக்க கூடாது.
    • சித்திரம் சட்டகம் அமைக்கப்படாதவாறு சமர்பிக்கப்படுதல்  வேண்டும்: கண்காட்சியின்  நோக்கங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சித்திரங்களின் அனைத்து சட்டகம் அமைத்தல் மற்றும் காட்சிப்படுத்தல் நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கி கையாளும்.
    • சித்திரங்கள் மீள வழங்கப்பட மாட்டாது என்பதுடன் ஓவியர்களுக்கான முழுமையான அங்கீகாரத்துடன், பொதுமக்கள் கண்காட்சி மற்றும் ஆவணக்காப்பக பயன்பாட்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் ஆதனமாகவிருக்கும்.  
    • அனைத்து ஓவியர்களும் போட்டி வழிகாட்டல்களுடன் இணங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் கையொப்பமிடப்பட்ட பிரகடன படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
    • பாடசாலை சமர்ப்பணங்கள் உரிய பாடசாலை அதிபரினால் பிரகடன படிவத்தின் சான்றுப்படுத்தும் பிரிவினை பயன்படுத்தி சான்றுப்படுத்தப்பட வேண்டும்.

சமர்ப்பிக்கும் செயன்முறை

பின்வரும் முறைகளொன்றின் மூலம் சித்திரங்களை சமர்ப்பிக்கலாம்:

    • இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தில் அல்லது இலங்கை மத்திய வங்கியின் ஏதேனும் பிரதேச அலுவலகத்தில் அலுவலக நேரங்களில் சமர்ப்பிக்கலாம்
    • பதிவுத் தபால் அல்லது விரைவுத் தபால் ஊடாக பின்வரும் முகவரிக்கு அனுப்பலாம்

இலங்கை மத்திய வங்கி 
இல.30, சனாதிபதி மாவத்தை, 
கொழும்பு 01
இலங்கை

பின்வரும் ஆவணங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்:

    • கையொப்பமிடப்பட்ட பிரகடன படிவம்  
    • சிங்கள, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 100 சொற்கள் கொண்ட ஓவியரின் குறிப்பு
    • தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் அட்டையின் பிரதி (பாடசாலை சமர்ப்பணங்கள் அதிபரால் சான்றுப்படுத்;தப்பட வேண்டும்)

அனைத்து சித்திரங்களும் 2025 யூன் 25 அல்லது அதற்கு முன்னர் வந்தடைய வேண்டும்.

முக்கிய திகதிகள்

    • போட்டி தொடங்கும் திகதி: 2025 மே 25
    • சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி: 2025 யூன் 25
    • கண்காட்சி: 2025 ஓகத்து கொழும்பில் பொதுவான அமைவிடமொன்றில் இடம்பெறும்

பரிசில்களும் பாராட்டுக்களும்

    • இரு பிரிவுகளை சேர்ந்த வெற்றியாளர்கள் பெறுமதிமிக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்களைப் பெறுவர்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த  75 சித்திரங்கள் உத்தியோகப்பூர்வ ஆண்டு நிறைவு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்
    • தேர்ந்தெடுக்கப்படும் கருப்பொருள்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள் வழங்கப்படும்

ஆவணங்களை பதிவிறக்க

போட்டி வழிக்காட்டல்கள்  – PDF 

பிரகடன படிவம் – PDF 

துண்டுப்பிரசுரம் – PDF 

தொடர்பு கொள்ளும் தகவல்கள்

விசாரணைகளுக்கு, தொடர்பு கொள்க:

தொடர்பூட்டல் திணைக்களம் - இலங்கை மத்திய வங்கி

மின்னஞ்சல்: 75art@cbsl.lk

தொலைபேசி எண்: 0112477965 / 0112477418

இற்றைப்படுத்தல்களை தொடர்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ சமூக ஊடக வலைத்தளங்களை பின்தொடருங்கள்

Facebook Twitter / X YouTube WhatsApp Instagram LinkedIn