அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உள்நாட்டுத் தொழிற்பாடுகள்

நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தல் என்றால் என்ன?

நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலானது மத்திய வங்கியின் நாணயச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட நாணயக் கொள்கைத் தீர்மானங்களைத் தொழிற்படுத்துவதற்கான பல்வேறுபட்ட நாணயக் கொள்கைக் கருவிகளைப் பயன்படுத்துவதுடன் தொடர்புபட்டதாகக் காணப்படுகிறது.

திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் என்றால் என்ன?

திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் என்பது 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 90ஆம் பிரிவின் கீழ் மத்திய வங்கியினால் நாணயச் சந்தையில் திரவத்தன்மையினை உள்ளீடு செய்ய அல்லது ஈர்த்துக் கொள்வதற்காக பிணையங்களை வாங்குவதனை அல்லது விற்பனை செய்வதனைக் குறிக்கிறது. எனவே, திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் என்பது, குறுங்கால வட்டி வீதங்களில் செல்வாக்கினைச் செலுத்தும் பொருட்டு உள்நாட்டு நாணயச் சந்தைத் திரவத்தன்மையினை முகாமைப்படுத்துவதற்கு அரச பிணையங்;;;களை அத்துடன்Æ அல்லது மத்திய வங்கிப் பிணையங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மத்திய வங்கியினால் நடத்தப்படும் முதன்மைச் சந்தையை அடிப்படையாகக் கொண்ட நாணயக் கொள்கைத் தொழிற்பாடுகளைக் குறிக்கிறது.

திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் எவ்வாறு தொழிற்படுகின்றன?

திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதங்களில் செல்வாக்கைச் செலுத்துகின்றன. இது, குறுங்கால வட்டி வீதங்களின் அசைவுகளிலும் அதேபோன்று நீண்ட கால வட்டி வீதங்களிலும் சொத்து விலைகளிலும் தாக்கத்தினைக் கொண்டிருக்கிறது. இது வைப்புக்கள் மற்றும் கடன்வழங்கல் வீதங்கள் போன்ற ஏனைய வட்டி வீதங்களின் மீதும் தாக்கத்தினைத் தோற்றுவிப்பதுடன், அதன் மூலமாக வீட்டுத்துறையினர் மற்றும் வியாபாரங்களின் சேமிப்பு மற்றும் செலவிடல் தீர்மானங்களின் மீதும் தாக்கத்தினை ஏற்படுத்தி இறுதியாகப் பொருளாதாரத்திலுள்ள பொருளாதார நடவடிக்கையிலும் விலை மட்டங்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.

திறந்த சந்தைத் தொழிற்பாடுகளில் பங்கேற்பதற்கு தகைமையுடையவர்கள் யார்?

அனைத்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளில் பங்கேற்பதற்கு தகைமையுடையனவாகும். தனியான முதனிலை வணிகர்களும் (உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் தவிர்ந்த முதனிலை வணிகர்களாக நியமிக்கப்பட்ட கம்பனிகள்) ஊழியர் சேம நிதியமும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் வசதிகளைப் பெறுவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகுதல்களைக் கொண்டுள்ளன. இந்நிறுவனங்கள் பங்கேற்கும் நிறுவனங்கள் எனப் பொதுவாக அறியப்படுகின்றன.

அழைப்புப் பணச் சந்தை என்றால் என்ன?

வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை என்பது பொதுவாக, எந்தவொரு பிணையுறுதியும் இல்லாமல் அவர்களிடையே கடன்பாடுகளையும் கடன்வழங்கல்களையும் மேற்கொள்வதன் மூலமாக ஓரிரவு திரவத்தன்மை தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்காக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்காக நடத்தப்படும் ஓரிரவு சந்தையாகும். இக்கொடுக்கல்வாங்கல்கள் அவற்றின் தன்மையில் மிகக் குறுகிய காலத்தினை கொண்டனவாக இருப்பதுடன் சந்தையில் திரவத்தன்மைக்கான கேள்வியையும் நிரம்பலையும் பிரதிபலிக்கின்றன.

சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம் என்றால் என்ன?

சராசரி நிறையேற்றப்;;பட்ட அழைப்புப் பணவீதம் என்பது ஓரிரவு அடிப்படையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளிடையேயான வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணம் கொடுக்கல்வாங்கல்களின் நிறையேற்றப்பட்ட சராசரி வீதமாகும். சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம், மத்திய வங்கியின் நடைமுறை நாணயக் கொள்கைக் கட்டமைப்பின் தொழிற்பாட்டு இலக்காகப் பணியாற்றுகிறது. சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்பப் பணவீதம் ஒவ்வொரு வேலை நாளன்றும் மத்திய வங்கியினால் கணிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

மீள்கொள்வனவு சந்தை என்றால் என்ன?

மீள்கொள்வனவு சந்தை என்பது குறுங்கால சந்தையொன்றாகும். இது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், தனியான முதனிலை வணிகர்கள் மற்றும் ஊழியர் சேம நிதியம் என்பன அவற்றின் நாளாந்த திரவத்தன்மை முகாமைத்துவ நோக்கங்களுக்காக பிணையுறுதி மயப்படுத்தப்பட்ட கடன்பாடுகளினூடாக அவற்றின் திரவத்தன்மைத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்ய உதவுகிறது.

சராசரி நிறையேற்றப்பட்ட மீள்கொள்வனவு வீதம் என்றால் என்ன?

சராசரி நிறையேற்றப்பட்ட மீள்கொள்வனவு வீதம் என்பது ஒவ்வொரு வேலை நாளன்றும் மத்திய வங்கியினால் கணிக்கப்பட்டு வெளியிடப்படுகின்ற, குறிப்பிட்ட நாளொன்றிற்கான பங்கேற்கும் நிறுவனங்களிடையேயான ஓரிரவு மீள்;கொள்வனவு வீதமாகும்.

மத்திய வங்கியின் திரவத்தன்மை என்றால் என்ன? நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலுக்கு இது ஏன் முக்கியமானது?

மத்திய வங்கியின் திரவத்தன்மை என்பது, ஒதுக்குத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் கடப்பாடுகளைத் தீர்ப்பனவு செய்வதற்காகவும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியுடன் வைத்திருக்கும் ஒதுக்கு நிலுவைகளின் தொகையாகும் என வரைவிலக்கணம் செய்யப்படுகிறது. ஒதுக்குக் கணக்கில் பேணப்பட வேண்டும் எனத் தேவைப்படுத்தப்படும் மட்டத்திற்கு மேலாக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் ஒதுக்குக் கணக்கில் வைத்திருக்கப்படும் தொகை திரவத்தன்மையின் பற்றாக்குறையினை அல்லது மிகையினைத் தீர்மானிக்கிறது. மத்திய வங்கியுடனான உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் வைப்பு நிலுவைகள் அவர்கள் ஒதுக்குÆ தீர்ப்பனவுக் கணக்கில் பேணப்பட வேண்டும் என தேவைப்படுத்தப்பட்ட நிலுவையிலும் பார்க்க உயர்வானதாக (குறைந்தது) இருக்குமாயின், குறிப்பிட்ட நாளன்று மிகையான திரவத்தன்மை (பற்றாக்குறை) காணப்படுவதாக வங்கித்தொழில் முறைமை கருதுகிறது. சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம் நடைமுறை நாணயக் கொள்கை கட்டமைப்பின் தொழிற்பாட்டு இலக்காக இருப்பதனால், மத்திய வங்கியானது அத்தகைய மிகையான அல்லது பற்றாக்குறையான திரவத்தன்மையினை அடிப்படையாகக் கொண்டு நிலவுகின்ற நாணயக் கொள்கை நிலையாக, சராசரி நிறையேற்றப்படும் அழைப்புப் பணவீதத்தினை விரும்பத்தக்க மட்டத்திலும் விரும்பத்தக்க திசையிலும் வழிநடத்துவதற்காகப் பொருத்தமான கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலின் மீது தீர்மானங்களை மேற்கொள்கிறது.

திரவத்தன்மையினை அதிகரிக்கின்ற மற்றும் குறைக்கின்ற முக்கிய காரணிகள் யாவை?

திரவத்தன்மையினை அதிகரிக்கின்ற காரணிகள் முக்கியமாகப் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

அ) மத்திய வங்கியினால் இரண்டாந்தரச் சந்தையிலிருந்து திறைசேரி உண்டியல்கள்/ முறிகளைக் கொள்வனவு செய்யப்படுதல் (நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்கள்).

ஆ) உடன் அடிப்படையில் மத்திய வங்கியினால் திறைசேரி உண்டியல்கள்/ முறிகள் கொள்வனவு செய்யப்படுதல்.

இ) மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட சொந்தப் பிணையங்களின் இளைப்பாறல்

ஈ) மத்திய வங்கியின் துணைநில் கடன்வழங்கல் வசதி ஏற்பாடுகள்

உ) மத்திய வங்கியினால் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்து வெளிநாட்டுச் செலாவணி கொள்வனவு செய்யப்படுகின்றமை

ஊ) மத்திய வங்கியினால் அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட கடன்பெறுகைகள் கொள்வனவு செய்யப்படுகின்றமை.

எ) வங்கிகளினால் மத்திய வங்கியில் செய்யப்படும் நாணய வைப்புக்கள்

ஏ) மத்திய வங்கியினால் முதலாந்தரச் சந்தையிலிருந்து திறைசேரி உண்டியல்கள்/ முறிகள் கொள்வனவு செய்யப்படுகின்றமை.

ஐ) அரசாங்கத்திற்கு மத்திய வங்கி விடுவிக்கின்ற இலாபங்கள் 

ஒ) மத்திய வங்கியினால் வழங்கப்படும் அரசாங்கத்திற்கான தற்காலிக முற்பணங்கள்

ஓ) மத்திய வங்கியினால் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மற்றும் முற்பணங்கள்

திரவத்தன்மையினைக் குறைக்கின்ற காரணிகள் முக்கியமாகப் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

அ) மத்திய வங்கியினால் இரண்டாந்தரச் சந்தைக்கு திறைசேரி உண்டியல்கள்/ முறிகள் விற்பனை செய்யப்படுகின்றமை (மீள்கொள்வனவு ஏலங்கள்).

ஆ) உடனடி அடிப்படையில் மத்திய வங்கி வசமிருந்த திறைசேரி உண்டியல்/ முறிகளின் விற்பனை.

இ) மத்திய வங்கியினால் பிணையங்கள் வழங்கப்பட்டமை

ஈ) மத்திய வங்கியினால் துணைநில் வைப்பு வசதி ஏற்பாடுகள்

உ) உள்நாட்டுச் சந்தையில் மத்திய வங்கியினால் மேற்கொள்ளபப்டும் வெளிநாட்டுச் செலாவணி விற்பனை

ஊ) அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட கடன்களை மீளச் செலுத்துவதற்காக மத்திய வங்கியினால் அரசாங்கத்திற்கு விற்பனை செய்யப்படும் வெளிநாட்டுச் செலாவணி

எ) மத்திய வங்கியிலிருந்து வங்கிகளினால் நாணயம் எடுப்பனவு செய்யப்படுகின்றமை

ஏ) மத்திய வங்கி வசமிருந்த திறைசேரி உண்டியல்கள்/ முறிகளை முதிர்ச்சியடைய/ இளைப்பாற விடல்

ஐ) பங்கேற்கும் நிறுவனங்களினால் மத்திய வங்கியிலிருந்து பெறப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்களின் மீள்கொடுப்பனவு

ஒரு நாளுக்குள்ளேயான திரவத்தன்மை வசதி என்றால் என்ன?

பங்கேற்கும் நிறுவனங்களின் ஏதேனும் திரவத்தன்மைப் பிரச்சனைகளின் காரணமாக எழக்கூடிய ஏதேனும் இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையின் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு அரச பிணையங்களின் பிணையுறுதிகளுக்கெதிராக மத்திய வங்கி வட்டியற்ற ஒரு நாளுக்குள்ளேயான திரவ வசதியை வழங்குகிறது.

மீள்கொள்வனவு/ நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்கள் என்றால் என்ன?

உள்நாட்டுப் பணச் சந்தைகளிலிருந்து திரவத்தன்மையினை ஈர்த்துக்கொள்ளவும் சந்தைக்கு உள்ளீடு செய்வதற்குமாக மீள்கொள்வனவு/ நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்கள் மத்திய வங்கியினால் நடத்தப்படுகின்றன. மீள்கொள்வனவு ஏலங்கள் மிகையான திரவத்தன்மையினை ஈர்த்துக்கொள்வதற்கான நடத்தப்படுவதுடன் நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்கள் உள்நாட்டு பணச் சந்தைக்கு திரவத்தன்மையினை உள்ளீடு செய்வதற்காக நடத்தப்படுகின்றன. மீள்கொள்வனவு ஏலங்களின் கீழ் மத்திய வங்கி இணங்கிக் கொள்ளப்பட்ட எண்ணிக்கையான நாட்களின் பின்னர் கொடுக்கல்வாங்கல்களை நேர்மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கையொன்றுடன் தற்காலிக அடிப்படையொன்றின் மீது அரச பிணையங்களை (மீள்கொள்வனவு) விற்பனை செய்வதாகும். அவ்வாறிருக்கையில், நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களின் கீழ், மத்திய வங்கி, இணங்கிக் கொள்ளப்பட்ட எண்ணிக்கையான நாட்களின் பின்னர் கொடுக்கல்வாங்கல்களை நேர்மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கையொன்றுடன் தற்காலிக அடிப்படையொன்றின் மீது அரச பிணையங்களை வாங்கிக் கொள்கிறது (நேர்மாற்று மீள்விற்பனை). ஏலங்களின் காலம், சந்தைத் திரவத்தன்மையின் கிடைப்பனவினை அடிப்படையாகக் கொண்டு (1 நாள் - ஓரிரவு மீள்கொள்வனவு நேர்மாற்று மீள்கொள்வனவு, 7 நாட்களுக்குக் குறைவானவை – குறுங்கால மீள்கொள்வனவு/ நேர்மாற்று கொள்வனவு ஏலங்கள், 7 நாட்களுக்கும் கூடுதலாக 90 நாட்கள் வரை – நீண்ட கால மீள்கொள்வனவு/ நேர்மாற்று மீள்கொள்வனவு) தீர்மானிக்கப்படுகிறது.

உடனடி ஏலங்களென்றால் என்ன?

உடனடி ஏலங்கள், நீண்ட காலத் திரவத்தன்மை மிகை/ பற்றாக்குறையினைக் கட்டுப்படுத்துவதற்காக நடத்தப்படுவதுடன் இதன் காரணமாக திரவத்தன்மை நிரந்தர அடிப்படையில் ஈர்த்துக் கொள்ளப்படுகிறது அல்லது உள்ளீடு செய்யப்படுகிறது. சந்தை திரவத்தன்மை பாரிய மிகையான தன்மையுடனும் நீண்ட காலத்திற்கு விடாப்பிடியாகவும் தொடர்ந்தும் காணப்படுமாயின், மத்திய வங்கி திரவத்தன்மையினை நிரந்தரமாக ஈர்த்துக் கொள்வதற்காக அதன் வசமுள்ள அரச பிணையங்களின் உடமையிலிருந்து இரண்டாந்தரச் சந்தையில் உடனடி அடிப்படையொன்றின் மீது அரச பிணையங்களை விற்பனை செய்யத் தீர்மானிக்கிறது. இதேபோன்று இரண்டாந்தரச் சந்தையில் உடனடி அடிப்படையொன்றின் மீது அரச பிணையங்களை விற்பனை செய்வதனூடாக திரவத்தன்மை நிரந்தரமாக உள்ளீடு செய்யப்படுகிறது.

திரவத்தன்மை ஆதரவு வசதி என்றால் என்ன?

திரவத்தன்மை ஆதரவு வசதி என்பது மத்திய வங்கியினால் தனியான முதனிலை வணிகர்களுக்கு உள்நாட்டு பணச் சந்தையின் சுமுகமான தொழிற்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கும் திரவத்தன்மைப் பற்றாக்குறை காணப்படுகின்ற காலப்பகுதியில் பணச் சந்தையின் மீதான தேவையற்ற அழுத்தங்களை இல்லாமல் செய்வதற்காகவும் வழங்கப்படுகிறது.

பங்கேற்கும் நிறுவனங்களுக்காக கிடைக்கத்தக்கதாகவுள்ள திறந்த சந்தைத் தொழிற்பாட்டு ஏலங்கள் யாவை?

திரவத்தன்மை நிலைமைகளைப் பொறுத்து மத்திய வங்கி, திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் பல்வேறு விதமான ஏலங்களையும் நடத்துகிறது.

ஏலம் குறிக்கோள்கள் தகைமையுடைய இணைத்தரப்பினர் காலம்
ஓரிரவு மீள்கொள்வனவு ஏலங்கள் ஓரிரவு அடிப்படையில் திரவத்தன்மையை ஈர்த்துக் கொள்வதற்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் ஊ.சே.நிதியம் (ஊ.சே.நிதியம் மீள்கொள்வனவு ஏலங்களுக்கு மாத்திரம்) 1 நாள்
ஓரிரவு நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்கள் ஓரிரவு அடிப்படையில் திரவத்தன்மையை உள்ளீடு செய்வதற்கு
ஓரிரவு திரவத்தன்மை ஆதரவு வசதி ஓரிரவு அடிப்படையில் திரவத்தன்மையை உள்ளீடு செய்வதற்கு தனியான முதனிலை வணிர்கள்  1 நாள்
குறுங்கால மீள்கொள்வனவு ஏலங்கள் குறுங்கால அடிப்படையில் திரவத்தன்மையை ஈர்த்துக் கொள்வதற்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் ஊ.சே.நிதியம் (ஊ.சே.நிதியம் மீள்கொள்வனவு ஏலங்களுக்கு மாத்திரம்) 2-7 நாட்கள்
குறுங்கால நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்கள் குறுங்கால அடிப்படையில் திரவத்தன்மையை உள்ளீடு செய்வதற்கு
குறுங்கால திரவத்தன்மை ஆதரவு வசதி ஏலங்கள் குறுங்கால அடிப்படையில் திரவத்தன்மையை உள்ளீடு செய்வதற்கு தனியான முதனிலை வணிர்கள் 2-7 நாட்கள்
நீண்டகால மீள்கொள்வனவு ஏலங்கள் நீண்டகால அடிப்படையில் திரவத்தன்மையை ஈர்த்துக் கொள்வதற்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் ஊ.சே.நிதியம் (ஊ.சே.நிதியம் மீள்கொள்வனவு ஏலங்களுக்கு மாத்திரம்) 7 நாட்களுக்குக் கூடுதலாக 90 நாட்கள் வரை
நீண்டகால நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்கள் நீண்டகால அடிப்படையில் திரவத்தன்மையை உள்ளீடு செய்வதற்கு
நீண்டகால திரவத்தன்மை ஆதரவு வசதி ஏலங்கள் நீண்டகால அடிப்படையில் திரவத்தன்மையை உள்ளீடு செய்வதற்கு தனியான முதனிலை வணிர்கள் 7 நாட்களுக்குக் கூடுதலாக 90 நாட்கள் வரை
உடனடி விற்பனை ஏலங்கள் நிரந்தர அடிப்படையில் திரவத்தன்மையை ஈர்த்துக் கொள்வதற்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், தனியான முதனிலை வணிகர்கள் மற்றும் ஊ.சே.நிதியம் ஏற்புடைத்தானதல்ல
உடனடி கொள்வனவு ஏலங்கள் நிரந்தர அடிப்படையில் திரவத்தன்மையை உள்ளீடு செய்வதற்கு

நியதி ஒதுக்கு விகிதம் என்றால் என்ன?

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 93ஆம் பிரிவின் நியதிகளில் தொடர்பான வங்கியின் மொத்த ரூபா வைப்புப் பொறுப்புக்களின் விகிதத்தில் மத்திய வங்கியுடன் பேணும் ஒதுக்குக் கணக்கில் ஒவ்வொரு உரிமம்பெற்ற வர்த்தக வங்கியும் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச ஒதுக்குத் தொகையினை நியதி ஒதுக்கு விகிதம் வரையறை செய்கிறது.

நியதி ஒதுக்கு விகிதத்தினைக் கணிப்பதற்கு எவ்வகையிலான வைப்புக்கள் பரிசீலனையில் கொள்ளப்படுகின்றன?

கேள்வி வைப்புக்கள், தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள் உட்பட உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட வைப்புக்கள், ரூபா நியதிகளில் குறிப்பிடப்படுகின்ற ஏனைய வைப்புக்கள் மற்றும் மத்திய வங்கியின் நாணயச் சபையினால் காலத்திற்குக் காலம் தீர்மானிக்கப்படுகின்றவாறான வேறு ஏதேனும் வைப்பு வகைகள் என்பன. தற்பொழுது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் ரூபா வைப்புப் பொறுப்புக்களில் 4 சதவீதத்தினை நியதி ஒதுக்கு விகிதமாகப் பேணுதல் வேண்டும்.

வங்கி வீதம் என்றால் என்ன?

வங்கி வீதம் என்பது, 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் பிரிவுகள் 86 மற்றும் 87இன் கீழ் வங்கித்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்ற அவசர காலக் கடன்களுக்கான வீதமாகும். தற்பொழுது வங்கி வீதம் மத்திய வங்கியினால் அடித்தள அளவுக்குறியீட்டு வீதத்துடன் எல்லை வீதத்தினையும் சேர்த்து (உ-ம்: சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம் ூ 300 அடிப்படைப் புள்ளிகள்) மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்படுகிறது.

மத்திய வங்கியின் திரவத்தன்மை உதவி வசதி என்றால் என்ன?

நாணய விதிச் சட்டத்தின் 83(1)(இ) பிரிவின் கீழ், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியிடமிருந்து அரச பிணையங்களினால் உத்தரவாதப்படுத்தப்பட்ட பாதுகாப்பான வாக்குறுதிச் சான்றிதழ்களின் மீது 180 நாட்களை விஞ்சாததொரு நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்கு கடன் வசதியொன்றினைப் பெற்றுக்கொள்ள உரித்துடையனவாகும்.

அரசாங்கத்திற்கான தற்காலிக முற்பணங்கள் என்றால் என்ன?

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 89ஆம் பிரிவின் நியதிகளில், மத்திய வங்கி, உறப்படக்கூடிய அதிகாரமளிக்கப்பட்ட செலவினங்களுக்கு நிதியிடுவதற்காக அரசாங்கத்திற்கு தற்காலிக முற்பணங்களை திரட்டப்பட்ட நிதியிலிருந்து, அத்தகைய முற்பணங்கள் ஆறு மாத காலப்பகுதியை விஞ்சாததொரு காலப்பகுதிக்குள் மீளச்செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு வழங்குகிறது. அத்துடன் அத்தகைய முற்பணங்களின் வெளிநிற்கும் மொத்தத் தொகை எந்தவொரு நேரத்திலும் முற்பணங்கள் வழங்கப்படுகின்ற நிதியியல் ஆண்டிற்கான அரசின் மதிப்பிடப்பட்ட வருமானத்தில் பத்து சதவீதத்தினை விஞ்சக்கூடாது.

அரசாங்கத்தின் வங்கியாளர் என்ற ரீதியில் மத்திய வங்கியின் வகிபாகம் என்ன?

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் பிரிவுகள் 106 மற்றும் 109இன் கீழ் மத்திய வங்கி அரச திணைக்களங்கள், அரச முகவராண்மைகள், அரச நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட நியதிச் சபைகளுக்கு அரசாங்கத்தின் வங்கியாளர் என்ற ரீதியில் கணக்குகளைப் பேணுவதுடன் வங்கித்தொழில் வசதிகளையும் வழங்குகிறது.

வங்கியாளருக்கான வங்கியாளர் என்ற ரீதியில் மத்திய வங்கியின் வகிபாகம் யாது?

வங்கியாளருக்கான வங்கியாளர் என்ற ரீதியில் மத்திய வங்கி அவர்களுக்கு நடைமுறைக் கணக்கு வசதிகளை வழங்கி கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளுக்கு வசதியளிக்கின்றது. அத்தகைய வங்கிகளுக்கு வழங்கப்படுகின்ற தீர்ப்பனவு வசதிகளைப் பொறுத்தவரையில் மத்திய வங்கி முக்கியமான கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் தொடர்பில் வர்த்தக வங்கிகளிடையே தேறிய தீர்ப்பனவுகளை மேற்கொள்கிறது. அதாவது, அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையூடாக காசோலை பிம்பப்படுத்தல் மற்றும் சுற்றோட்டக் குறைப்பு முறைமை, இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமை, பொதுவான தன்னியக்க கூற்றுப் பொறி ஆளி மற்றும் பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆளி என்பனவற்றை மேற்கொள்கிறது.

அதிகாரமளிக்கப்பட்ட பணத் தரகர் என்பவர் யார்?

அதிகாரமளிக்கப்பட்ட பணத் தரகர்கள் என்பது பணம், வெளிநாட்டுச் செலாவணி மற்றும் அரச பிணையங்கள் சந்தையில் சந்தை இடையேற்பாட்டாளராக விளங்கி பங்கேற்கின்ற நிறுவனங்களிடையேயான கொடுக்கல்வாங்கல்களுக்கு வசதியளிக்கின்றவர்களாவர். அவர்கள் கொடுக்கல்வாங்கலொன்றிற்கு இணைத்தரப்பினரொருவராக இல்லாமல் முகவராக தொழிற்படுகின்றனர். எனினும், தரகுக் கட்டணத்திற்காக வர்த்தக இணைத்தரப்பினர்களிடையே பேச்சுவார்த்தை, ஏற்பாடு அல்லது உடன்படிக்கைகளுக்கு வசதியளித்தல் என்பனவற்றில் ஈடுபடுகின்றனர். எனவே, அதிகாரமளிக்கப்பட்ட பணத்தரகர்கள் பணச் சந்தையில் விலை கண்டறியும் செய்முறைக்கு உதவுவதுடன் மத்திய வங்கி அவர்களின் தொழில்சார் நடத்தைகளை உறுதிப்படுத்துவதற்காக அவர்களை ஒழுங்குமுறைப்படுத்துகிறது. 

இலங்கையில் எத்தனை பணத் தரகர்கள் தொழிற்படுகின்றனர்?

2022.12.31இல் உள்ளவாறு இலங்கையில் ஒன்பது (9) பணத்தரகுக் கம்பனிகள் தொழிற்படுகின்றன.

  1. பீஎம்ஆர் மணி புரோக்கர்ஸ் (பிறைவேட்) லிமிடெட்
  2. சென்றல் பொரேக்ஸ் அன்ட் மணி புரோக்கர்ஸ் லிமிடெட்
  3. பெர்ஸ்ட் அலியன்ஸ் மணி புரோக்கர்ஸ் (பிறைவேட்) லிமிடெட்
  4. ஜோர்ஜ் ஸ்டிவாட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (பிறைவேட்) லிமிடெட்
  5. எம்விஎஸ் மணி புரோக்கர்ஸ் (பிறைவேட்) லிமிடெட்
  6. பிஜோட் சப்மன் அன்ட் கம்பனி (பிறைவேட்) லிமிடெட்
  7. எஸ்எம்பி மணி புரோக்கர்ஸ் (பிறைவேட்) லிமிடெட்
  8. தப்ரபேன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (பிறைவேட்) லிமிடெட்
  9. விஸ்வின் மணி அன்ட் எக்ஸ்சேன்ஜ் புரோக்கர்ஸ் லிமிடெட்