கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 ஏப்பிறலின் 35.3 சதவீதத்திலிருந்து 2023 மேயில் 25.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் இவ்வீழ்ச்சியானது, பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் 2023 ஏப்பிறலில் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வீழ்ச்சிப் பாதைக்கு இசைவாக காணப்படுகின்றது.
-
CCPI based headline inflation continued to record a sharp decline in May 2023
-
Sri Lanka Purchasing Managers’ Index - April 2023
தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2023 ஏப்பிறலில் வீழ்ச்சியடைந்தன
பருவகால போக்குகளைத் தொடர்ந்து, 2023இன் ஏப்பிறலில் தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 34.7 ஆக குறைவடைந்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் மாதத்திற்கு மாத சுருக்கமொன்றை எடுத்துக்காட்டியது. அதற்கமைய, உற்பத்தி, புதிய கட்டளைகள், தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு துணைச் சுட்டெண்கள் மாச்சில் காணப்பட்ட பருவகால உச்சத்துடன் ஒப்பிடுகையில் ஏப்பிறலில் வீழ்ச்சியடைந்தன.
பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2023 ஏப்பிறலில் 49.6 சுட்டெண் பெறுமதியினை பதிவுசெய்து நடுநிலையான அடிப்படை அளவிற்கு சற்று கீழே காணப்பட்டது. புதிய வியாபாரங்கள், தொழில்நிலை மற்றும் நிலுவையிலுள்ள பணிகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சிகளால் இது தூண்டப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும், தொழில் நடவடிக்கைகளும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கைகளும் மாதகாலப்பகுதியில் தொடர்ந்தும் அதிகரித்தன.
-
Imposition/ Collection of Administrative Penalties by the Financial Intelligence Unit (FIU) to Enforce Compliance on Financial Institutions from 17 November 2022 to 31 March 2023
2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் பயனைக்கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்களின் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றை பரிசீலனையிற் கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம்.
அதற்கமைய, பணம் தூயதாக்குதலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துனர் என்ற ரீதியில், நிதியியல் உளவறிதல் பிரிவு, நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு 2022 நவெம்பர் 17 தொடக்கம் 2023 மாச்சு 31 வரையான காலப்பகுதியில் கீழேகாட்டப்பட்டவாறு, மொத்தமாக ரூ.5.5 மில்லியன் கொண்ட தொகையினைத் தண்டப்பணமாக சேகரித்தது. தண்டப்பணங்களாக சேகரிக்கப்பட்ட நிதி திரட்டு நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டன.
-
CCPI based headline inflation declined sharply in April 2023
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 மாச்சின் 50.3 சதவீதத்திலிருந்து 2023 ஏப்பிறலில் 35.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மேற்கொள்ளப்பட்ட எறிவுகளுடன் ஒப்பிடுகையில் தேறிய பணவீக்க மட்டம் குறைவடைந்தமைக்கு தளம்பல்மிக்க உணவு மற்றும் உணவல்லாப் பொருட்களில் அவதானிக்கப்பட்ட எதிர்பார்க்கப்பட்டதை விடவும் உயர்வான விலை வீழ்ச்சிகள் பிரதான காரணமாக அமைந்தன.
-
External Sector Performance - March 2023
வர்த்தகப் பற்றாக்குறையானது 2023 பெப்புருவரியுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு விரிவடைந்து காணப்பட்டபோதிலும் ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் 2023 மாச்சில் தொடர்ந்தும் மிதமடைந்து காணப்பட்டது.
தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் என்பன 2023 மாச்சில் குறிப்பிடத்தக்களவிலானதொரு மேம்பாட்டினைப் பதிவுசெய்தன
பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் இறுதிப்படுத்தல் மற்றும் மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட கொள்கைத் தளர்வினால் உந்தப்பட்டு உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் திரவத்தன்மை நிலைமைகளில் ஏற்பட்ட மேம்பாடுகள் என்பவற்றினை நோக்கிய மேம்பட்ட சந்தை மனோபாவங்களினால் ஆதரவளிக்கப்பட்டு 2023 மாச்சில் செலாவணி வீதம் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்தது
-
The Central Bank of Sri Lanka Releases its Annual Report for the Year 2022
1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் எழுபத்து மூன்றாவது ஆண்டறிக்கை இன்று (2023.04.27) இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் பி. நந்தலால் வீரசிங்க அவர்களினால் சனாதிபதியும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு கையளிக்கப்பட்டது.
-
Shortage of a Cash Bundle
2023.04.11 அன்று நாணயச் செயற்பாடுகளின் போது, இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் ரூ. 5 மில்லியன் பெறுமதியான (ரூ. 5,000 நாணயத்தாள் வகை) காசுக்கட்டு குறைவடைந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயம் சம்பந்தமாக உள்ளக ஆய்வுகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை, கோட்டை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது. பொலிஸ் விசாரணைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயத்தை முழுமையாக விசாரணை செய்வதற்கும் மற்றும் உள்ளகக் கட்டுப்பாடுகள், செயன்முறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் அவசியமான வழிமுறைகளை இலங்கை மத்திய வங்கி எடுத்து வருகின்றது. பொலிஸ் அதனுடைய விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தொடர்ந்தும் அதன் ஆதரவினை வழங்கும்.
-
SL Purchasing Managers’ Index (PMI) – March 2023
தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டுக்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2023 மாச்சில் சாதகமான எல்லைக்குத் திரும்பின.
தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்இ தொடர்ச்சியாக ஒன்பது அளவீட்டு காலங்களின் பின்னர், 2023 மாச்சில் 51.4 சுட்டெண் புள்ளியினைப் பதிவுசெய்து சாதகமாக மாறியது. பிரதானமாக பருவகால கேள்வியின் காரணமாக புதிய கட்டளைகள், உற்பத்தி துணைச் சுட்டெண்களில் அதிகரிப்பினால் மாதத்திற்கு மாத இவ்விரிவடைதல் தூண்டப்பட்டிருந்தது. எனினும், தொழில்நிலை, கொள்வனவுகளின் இருப்பு மற்றும் நிரம்பலர் விநியோக நேரம் துணைச் சுட்டெண்கள் நடுநிலையான அடிப்படை அளவிற்கு கீழேயே காணப்பட்டன.
-
The Central Bank Clarifies Misreporting of the Views Expressed by Governor of the Central Bank on the Economic Outlook
அண்மையில் நிகழ்ந்த ஊடக சந்திப்பொன்றினைத் தொடர்ந்து மத்திய வங்கியின் ஆளுநரினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலான தவறான அறிக்கையிடலை இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்த விரும்புகின்றது. அத்தகைய ஊடக அறிக்கைகள் ‘பொருளாதாரத்தில் கடினமானதொரு காலகட்டத்தினை ஆளுநர் எதிர்பார்க்கின்றார்’ எனக் குறிப்பிட்டிருந்தன. எதிர்பார்க்கப்படுகின்ற சீர்திருத்தங்கள் தாமதமானாலோ அல்லது தடம்புரள்வினை எதிர்கொண்டாலோ எதிர்வருகின்ற காலப்பகுதியில் பொருளாதாரம் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்த கலந்துரையாடலின் பின்னணியில் ஆளுநரினால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களிற்கு ஒட்டுமொத்தமாகத் தவறான பொருட்கோடலாக இது காணப்படுகின்றது. 2022இல் காணப்பட்ட முன்னெப்பொழுதுமில்லாத சமூக-பொருளாதார பதற்றங்களுடன் ஒப்பிடுகையில் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட கடினமானதும் வேதனையளிக்கின்றதுமான கொள்கைசார் வழிமுறைகள் பொருளாதார நிலைமைகளை உறுதிப்படுத்துவதற்குத் துணைபுரிந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.
-
Monetary Policy Review - No. 3 of 2023
இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2023 ஏப்பிறல் 04ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 15.50 சதவீதம் மற்றும் 16.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. அண்மைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் மற்றும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களின் மீதான பேரண்டப்பொருளாதார எறிவுகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்தான நீடிக்கப்பட்ட நிதிய வசதியின் இறுதிப்படுத்தல் மற்றும் வீழ்ச்சியடைகின்ற இடர்நேர்வு மிகையினைப் பிரதிபலிக்கின்ற உயர்வடைந்த சந்தை வட்டி வீதங்களின் கீழ்நோக்கிய நகர்வு என்பவற்றினைத் தொடர்ந்து சந்தை மனோபாவங்களில் ஏற்பட்ட மேம்பாடுகளுக்கு மத்தியில் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற பணவீக்க வீழச்சிப்பாதைச் செய்முறையின் தொடர்ச்சியினை வசதிப்படுத்துவதற்கு நாணய நிலைமைகள் தொடர்ந்தும் போதியளவில் இறுக்கமாவிருப்பதனை நிச்சயப்படுத்தும் பொருட்டு தற்போதுள்ள இறுக்கமான நாணயக் கொள்கை நிலையின் பேணுகை அத்தியாவசியமானதென சபை அபிப்பிராயப்பட்டது.