இலங்கை உள்ளிட்ட ஏழு வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் செலாவணி வீத நெருக்கடி இடர்நேர்வில் காணப்படுகின்றன என்பதனை காண்பிக்கின்ற நொமுறா கோல்டிங்ஸ் இன்ங் மூலமான பகுப்பாய்வொன்றினை பல பன்னாட்டு ஊடகத் தளங்கள் அண்மையில் எடுத்துக்காட்டியுள்ளன.
இலங்கையின் குறுகியகால வெளிநாட்டுப் படுகடன் ஐ.அ.டொலர் 160 பில்லியன் வரை உயர்வானது எனக் குறிப்பிடுகின்ற அறிக்கையினை சொல்லப்பட்ட ஊடகத் தளங்கள் மேலும் எடுத்துக்காட்டியுள்ளன. இலங்கையின் குறுகியகால வெளிநாட்டுப் படுகடன் எவ்விதத்திலேனும் இத்தொகைக்கு அண்மித்துக் காணப்படாமையினால், இலங்கை மத்திய வங்கியானது தமது கணிப்புகளில் உள்ள பிழைகளைச் சரிசெய்யுமாறு நொமுறா இனைக் கோரியது.1