2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கு அமைய நிதி வியாபாரத்தினை மேற்கொள்வதற்காக ஸ்டான்டட் கிறடிற் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட உரிமம் 2018.07.25ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் இரத்துச்செய்யப்படுள்ளது.
இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை துணையளித்தல் திட்டத்தின் கீழ் ஸ்டான்டட் கிறடிற் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டின் வைப்பாளர்களுக்கு நட்டஈட்டினைக் கொடுப்பனவு செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இலங்கை வைப்புக் காப்புறுதி ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகளுக்கு அமைவாக நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும். விண்ணப்ப பிரமாணம் தொடர்பான அறிவுறுத்தல்கள் அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிவிக்கப்படும்.