• CCPI based Inflation remained unchanged at 4 per cent in October 2020

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)   ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2019 ஒத்தோபரில் நிலவிய உயர் தளத்தின் புள்ளிவிபரத் தாக்கத்தின் காரணமாக 2020 ஒத்தோபரில் 4.0 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 செத்தெம்பரின் 11.5 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 10.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 செத்தெம்பரின் 0.9 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 1.3 சதவீதத்திற்கு அதிகரித்தது.

    ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 செத்தெம்பரின் 4.7 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 4.6 சதவீதத்திற்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்தது.

  • Special Arrangements made by Employees’ Provident Fund Department of the Central Bank of Sri Lanka to Provide Uninterrupted EPF Related Services to its Stakeholders

    இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாபத் திணைக்களமானது, கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக நாட்டில் நிலவிவருகின்ற கஷ்டமான நிலைமைக்கு மத்தியிலும் அதன் பணிகளை இடைத்தடங்கலின்றி வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பில் அதன் அனைத்து ஆர்வலர்களுக்கும் அறிவிக்கின்றது. மீளளிப்பு நிதியங்களைத் தீர்ப்பனவு செய்தல், பங்களிப்புச் சேகரித்தல், நிலுவை உறுதிப்படுத்தல்களை மற்றும் பங்களிப்பு வரலாற்று அறிக்கைகளை வழங்குதல் அத்துடன் பெயர் மற்றும் கணக்குத் திருத்தங்கள் போன்றன தொடர்புபட்ட பணிகள் பின்வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • Cancellation of the Licence issued to ICICI Bank Limited (ICICI Colombo Branch)

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெட் இந்தியாவின், கோரிக்கையைப் பரிசீலித்து பல நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு இலங்கையிலுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெட்டின் வணிக நடவடிக்கைகளை முடிவுறுத்துவதற்கும் 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்ட விதிகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கியது.

  • The Central Bank of Sri Lanka Continues its Accommodative Monetary Policy Stance

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2020 ஒத்தோபர் 21ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கும் இதன்மூலம் தற்போதுள்ள அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்வதற்கும் தீர்மானித்துள்ளது. இதுவரையான ஆண்டு காலப்பகுதியில் மத்திய வங்கியினால் முன்னொருபொழுதுமில்லாத வகையில் எடுக்கப்பட்ட நாணய தளர்த்தல்களினைத் தொடர்ந்து, சபையானது ஒட்டுமொத்த சந்தை கடன் வழங்கல் வீதங்களில் வீழ்ச்சியினை அவதானித்திருந்ததுடன் சந்தை கடன் வழங்கல் வீதங்களில் பரந்தளவிலான கீழ்நோக்கிய திருத்தத்தின் தொடர்ச்சியினையும் எதிர்பார்க்கின்றது. இதன்மூலம், தற்போது காணப்படுகின்ற தாழ்ந்தளவிலான பணவீக்க சூழலில் பொருளாதாரத்தில் திறன்மிக்க துறைகளுக்கு வசதியான கொடுகடன் பாய்ச்சல்களினையும் உறுதிசெய்கின்றது.

  • NCPI based Inflation increased in September 2020

    தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 ஓகத்தில் 6.2 சதவீதத்திலிருந்து செத்தெம்பரில் 6.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளில் மாதாந்த அதிகரிப்பின் மூலம் தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2019 செத்தெம்பரில் நிலவிய உயர்வான தளத்தின் புள்ளிவிபரத் தாக்கம் காரணமாக 2020 ஓகத்தில் 13.2 சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில்; 12.7 சதவீதத்திற்குக் குறைவடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 ஓகத்தில் 1.1 சதவீதத்திலிருந்து செத்தெம்பரில் 1.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.

  • Central Bank Approved 61,907 Loans Amounting to Rs. 178 billion through Saubagya COVID-19 Renaissance Facility

    இலங்கை மத்திய வங்கியானது 2020 ஒத்தோபர் 15ஆம் திகதி வரையில் கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற 61,907 கடன் விண்ணப்பங்களுக்கு ஒப்புதலளித்தது. இந்த விண்ணப்பங்கள் மொத்தமாக ரூ.177,954 மில்லியனை வகைகூறுவதுடன் சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் வசதியின் மூன்று கட்டங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது வரையில், உரிமம்பெற்ற வங்கிகள் நாடுமுழுவதும் பாதிக்கப்பட்ட 45,582 வியாபாரங்களுக்கிடையில் ரூ.133,192 மில்லியன் கடன்களை விடுவித்துள்ளது. (தகவல்களுக்கு அட்டவணை 01 இனைப் பார்க்கவும்)

  • Sri Lanka Purchasing Managers’ Index - September 2020

    தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் செத்தெம்பரில் விரிவடைந்தன. 

    தயாரிப்பு நடவடிக்கைகள், 2020 ஓகத்துடன் ஒப்பிடுகையில் 2020 செத்தெம்பரில் உயர்வான வீதமொன்றில் விரிவடைந்தன. தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் இவ்விரிவடைதலுக்கு உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகள் விசேடமாக உணவு மற்றும் குடிபானம், புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் துறைகளின் தயாரிப்பில் அதிகரிப்புக்கள் பிரதான காரணமாக அமைந்தது.

    பணிகள் துறையானது முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2020 செத்தெம்பரில் 54.3 கொ.மு.சு பதிவுடன் தொடர்ச்சியாக நான்காவது மாதமாகவும் தொடர்ந்தும் விரிவடைந்தது. பணிகள் துறை நடவடிக்கைகள் மேலும் மீட்சியடைவதனை எடுத்துக்காட்டி 2020 ஓகத்துடன் ஒப்பிடுகையில் புதிய வியாபாரங்கள்இ வியாபார நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட விரிவடைதல்கள் மூலம் இது துணையளிக்கப்பட்டிருந்தது.

     

  • External Sector Performance - August 2020

    வர்த்தகப் பற்றாக்கையில் ஏற்பட்ட மேம்பாடு, தொழிலாளர் பணவனுப்பல்களில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்பனவற்றின் முக்கிய ஆதரவுடன் 2020 ஓகத்துக் காலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை அநேக விடயங்களில் தொடர்ந்தும் மீட்சியடைந்திருக்கிறது. இம்மாத காலப்பகுதியில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் வணிகப்பொருட்களின் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் வீழ்ச்சி காணப்பட்டமைக்கிடையிலும் இன்றியமையாதனவல்லாத பொருட்களின் இறக்குமதி மீதான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டுப்பாடுகள் மற்றும் குறைவடைந்த மசகெண்ணெய் விலைகள் என்பனவற்றின் காரணமாக வணிப்பொருள் இறக்குமதிகளில் ஏற்பட்ட குறைப்பின் விளைவாக வர்த்தகப் பற்றாக்குறை ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் மேம்பட்டது. இருப்பினும் கூட, தொற்று உலகளாவிய கேள்வியைப் பாதித்தமைக்கிடையிலும் ஏற்றுமதிச் செயலாற்றம் தொடர்ந்தும் மூன்றாவது மாதமாக வலுவான நிலையில் காணப்படுகிறது.

  • Launch of the National LANKAQR initiative

    தேசிய LANKAQR முன்னெடுப்பான “நாடு முழுவதற்குமான LANKAQR” 2020 ஒத்தோபர் 5ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்தன அவர்களினால் பணம், மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி சீரமைப்பு இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு அஜித் நிவார்ட் கப்ரால், கூட்டுறவுச் சங்கங்கள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், மாண்புமிகு லசந்தா அழகியவண்ண, சமுர்த்தி, வீட்டுத்துறைப் பொருளாதாரம், நுண்பாக நிதி, சுயதொழில் வாய்ப்பு, வியாபார அபிவிருத்தி மற்றும் குறைப் பயன்பாடு அரச மூலவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு செகான் சேமசிங்க, மத்திய வங்கியின் ஆளுநர், தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷமன், நிதி அமைச்சின் செயலாளர். திரு. எஸ்.கே. ஆட்டிகல உட்பட நாணயச் சபை உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் தொடக்கி வைக்கப்பட்டது.

  • The Central Bank of Sri Lanka Successfully Completes the Settlement of the Maturing International Sovereign Bond of US Dollars 1 Billion on Behalf of the Government of Sri Lanka

    இலங்கை மத்திய வங்கியானது இலங்கை அரசாங்கம் சார்பில் ஐ.அ.டொலர் 1 பில்லியன் கொண்ட முதிர்ச்சியடைகின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறியின் தீர்ப்பனவினை கூப்பன் கொடுப்பனவுகளுடன் சேர்த்து 2020 ஒத்தோபர் 2 அன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

Pages