இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சார்பில், இலங்கை மத்திய வங்கி ஐ.அ.டொலர் 500 மில்லியன் பெறுமதியான 5.5 ஆண்டு கால மற்றும் ஐ.அ.டொலர் 1.0 பில்லியன் பெறுமதியான 10 ஆண்டு கால நாட்டிற்கான பன்னாட்டு முறிகளையும் 2016 யூலை 11ஆம் நாளன்று வெற்றிகரமாக வழங்கியதன் மூலம் ஐ.அ.டொலர் முறிகள் சந்தைகளுக்கு இலங்கை திரும்பியமையினை எடுத்துக்காட்டியது. இது இலங்கையின் 10ஆவது ஐ.அ.டொலர் முறிகளின் வழங்கலையும் முதலாவது இரட்டைத் தொகுதி வழங்கலையும் குறிக்கிறது.
மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சேர்விஸ், ஸ்டான்டட் அன்ட் புவர் மற்றும் பிட்ஜ் றேடிங் என்பன இம்முறிகளை முறையே பி1, பீ+ மற்றும் பீ+ இல் தரமிட்டன. சிட்டி குறூப், டியூச் பாங்க், எச்எஸ்பீசி மற்றும் ஸ்டான்டட் அன்ட் சார்டட் பாங்க் என்பன இவ்வெற்றிகரமான கொடுக்கல்வாங்கலின் கூட்டு முகாமையாளர்களாகவும் ஏற்பாட்டாளர்களாகவும் தொழிற்பட்டன.