மத்திய வங்கியனாது, திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான சனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் திறைசேரி முறிகள் வழங்கல் பற்றிய பரிந்துரைகளுக்கிசைவாக இலங்கை மத்திய வங்கியின் தொழிற்பாடுகளின் பல்வேறு விடயப்பரப்புக்களில் வெளிப்படைத்தன்மையினையும் பொறுப்புக்கூறலினையும் வலுப்படுத்துவதற்கு பல வழிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றில் சில ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதனை பொதுமக்களுக்கு தெரிவிக்கவிரும்புகின்றது.
மத்திய வங்கி தொழிற்படுகின்ற சட்ட ரீதியான கட்டமைப்பு தொடர்பில் மத்திய வங்கிக்கு ஏற்புடையதான பல சட்டங்களை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாணயவிதிச் சட்டம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் தொடர்பில் திருத்தங்கள் முறைப்படுத்த்தப்பட்டு வருகின்றன.