இலங்கை மத்திய வங்கி ரூ. 1000 முகப் பெறுமதியையுடைய தங்கம் மற்றும் வெள்ளி ஒரே சித்தரிப்புகளுடனான ஞாபகார்த்த நாணயக் குற்றிகளை இலங்கை - சீனாவுக்கிடையிலான 65 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன பொதுவுடைமைக் கட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக வெளியிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையைப் பாராட்டும் முகமாக இலங்கை அரசின் வேண்டுகோளின்படி நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
-
Issue of Commemorative Coins to Mark the 65th Anniversary of Sri Lanka – China Diplomatic Relations and 100th Anniversary of Communist Party of China
-
Investments by Licensed Banks in International Sovereign Bonds
இலங்கை மத்திய வங்கியானது பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர் சமூகத்திற்கு பின்வரும் தகவல்களை வழங்க விரும்;புகின்ற அதேவேளை, வங்கித்துறையின் நிலைத்திருக்கும் தன்மைக்கு சவால்விடுக்கின்ற தரமிடல் நிறுவனங்களின் அறிக்கைகள் மற்றும் இலங்கை நாட்டுக்கான பன்னாட்டு முறிகள் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகள் என்பவற்றில் உரிமம்பெற்ற வங்கிகளின் முதலீடுகள் தொடர்பான ஊகங்களையும் மறுக்கின்றது.
பின்வரும் முக்கிய இடர்நேர்வு தணிப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் முதலீட்டு வாய்ப்புக்களை வசதிப்படுத்துவதற்காகவும் நாட்டுக்கான வெளிநாட்;டுச் செலாவணியின் உட்பாய்ச்சலை மேலும் ஊக்குவிப்பதற்குமாக இலங்கை மத்திய வங்கியானது, வெளிமூலங்களிலிருந்தான வளங்களிலிருந்து நாட்டுக்கான பன்னாட்டு முறி மற்றும் இலங்கை அபிவிருத்தி முறி ஆகியவற்றில் சமமாகப் பகிரப்பட்டளவிலான முதலீடுகளை உரிமம்பெற்ற வணிக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவை மேற்கொள்ள அனுமதிக்கின்றது.
-
Extension of the Suspension of Business of Perpetual Treasuries Limited
பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2021 யூலை 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.
-
New Order issued under Foreign Exchange Act to Preserve the Foreign Exchange Position of Sri Lanka
நாட்டின் செலாவணி வீதம் மீதான அழுத்தத்தினைக் குறைத்து வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலையினைப் பாதுகாப்பதன் மூலம் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு உதவியளித்து பேணும் நோக்குடன், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையுடனும் அமைச்சரவையின் ஒப்புதலுடனும் கௌரவ நிதியமைச்சர், 2021 யூலை 02ஆம் திகதியிடப்பட்ட 2234/49 அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் கட்டளையொன்றினை வழங்கியுள்ளார்.
அதற்கமைய, வெளிமுகப் பணவனுப்பல்கள் மீது பின்வரும் இடைநிறுத்தல்கள்/ கட்டுப்பாடுகள் 2021 யூலை 02ஆம் திகதியிலிருந்து தொடங்குகின்ற ஆறு (06) மாதங்களுக்கு நடைமுறையிலிருக்கும்.
-
CCPI based Inflation increased to 5.2 per cent in June 2021
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 மேயின் 4.5 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 5.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 மேயின் 9.9 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 11.3 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 மேயின் 2.2 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 2.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 மேயின் 3.9 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 4.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.
-
Statement by Deshamanya Professor W D Lakshman, Governor of the Central Bank of Sri Lanka on Foreign Currency Liquidity in the Domestic Market
கடந்த சில நாட்களாக, உள்நாட்டுச் சந்தையில் வெளிநாட்டு நாணயத் திரவத்தன்மையின் ஊகிக்கப்பட்ட பற்றாக்குறையொன்று தொடர்பில் பல்வேறுபட்ட தனிநபர்கள் மற்றும் ஊடகங்களினால் கரிசனைகள் எழுப்பப்பட்டிருந்ததுடன் இவை வங்கிகளை இறக்குமதிகளுக்கு வசதிப்படுத்துவதிலிருந்தும் தடுத்திருந்தன. சில ஊடகங்களினால் வெளியிடப்பட்ட அல்லது பரப்பப்பட்ட அறிக்கைகள் மிகவும் எதிர்மறையான கண்ணோட்டத்தை குறித்திருந்ததுடன் அவை நாட்டிற்கு மிகவும் தீங்கு விளைவிக்கவல்லன. இவ்விடயம் தொடர்பிலான உண்மையான நிலையினைத் தெளிவுபடுத்துவதற்காக நான் பின்வரும் அறிக்கையினை வெளியிட விரும்புகின்றேன்.
-
NCPI based Inflation increased in May 2021
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 ஏப்பிறலின் 5.5 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 6.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்புகள் மூலம் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 ஏப்பிறலில் 9.7 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 10.3 சதவீதத்திற்கு அதிகரித்ததுடன் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 ஏப்பிறலின் 2.2 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 2.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.
ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 ஏப்பிறலின் 5.3 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 5.4 சதவீதத்திற்குச் சிறிதளவு அதிகரித்தது.
-
External Sector Performance - April 2021
2021 ஏப்பிறலில் இலங்கையின் வெளிநாட்டுத்துறை கலப்பான செயலாற்றத்தினை வெளிக்காட்டியது. வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக 2021 ஏப்பிறலில் விரிவடைந்த அதேவேளையில் சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் தொடர்ந்தும் குறைவடைந்து காணப்பட்டது. குறிப்பாக, ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும் 2020 ஏப்பிறலுடன் ஒப்பிடுகையில் 2021 ஏப்பிறலில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருந்தாலும் 2021 மாச்சுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்து காணப்பட்டன. இருப்பினும், தொழிலாளர் பணவனுப்பல்கள் அதன் உத்வேகத்தைத் தொடர்ந்தும் பேணி 2021 ஏப்பிறலில் குறிப்படத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்தது. அதேவேளையில், சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு இம்மாத காலப்பகுதியில் சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்பட்ட கூட்டுக்கடன் வசதிப் பெறுகைகளுடன் வலுவடைந்தது. ஏப்பிறல் மாத நடுப்பகுதியில் சில தளம்பல்கள் அவதானிக்கப்பட்ட போதிலும் இலங்கை ரூபா இம்மாதம் முழுவதும் பரந்தளவில் நிலையாகக் காணப்பட்டது.
-
Sri Lanka Purchasing Managers’ Index - May 2021
தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் மேயில் சுருக்கமடைந்தன.
கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலையின் பாதகமான தாக்கங்களின் காரணமாக தயாரிப்பு நடவடிக்கைகள் மே காலப்பகுதியில் சுருக்கமடைந்தன.
கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலையின் அதிகரிப்பிற்கு இசைவாக பணிகள் கொ.மு.சுட்டெண் 2020 ஏப்பிறலிலிருந்து ஆகக்குறைந்த வாசிப்பினைப் பதிவுசெய்து 2021 மேயில் 39.5 இற்கு மேலும் வீழ்ச்சியடைந்து.
-
Concessionary Scheme for Businesses and Individuals Affected by the third Wave of COVID-19
கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளின் (இதனகத்துப்பின்னர் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் எனக் குறிப்பீடுசெய்யப்படும்) கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகளைப் பற்றிய 2021ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க சுற்றறிக்கையை வெளியிடுவதன் மூலம் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு பின்வருமாறு சலுகைகளை வழங்குமாறு வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களைக் கோரியுள்ளது: