“ஒருங்கிணைப்பதற்கான முதன்மைத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் துறையை வலுப்படுத்தும் வழிமுறையொன்றாக, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது கன்றிச் பினான்ஸ் லிமிடெட் எதிர்கொண்ட தொடர்ச்சியான மூலதனப் பற்றாக்குறைகளின் காரணமாக 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 25(1)(க) ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம், 2022.12.26 தொடக்கம் 2023.02.28 வரையான காலப்பகுதியினுள் அதன் பொதுமக்களுக்கான பொறுப்புக்களை (வைப்புக்கள் மற்றும் வாக்குறுதிப் பத்திரங்கள்) தீர்ப்பனவுசெய்யுமாறு கன்றிச் பினான்ஸ் லிமிடெட்டினைப் பணிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
-
Kanrich Finance Limited – Settlement of Public Liabilities
-
Provincial Gross Domestic Product (PGDP) - 2021
இலங்கையின் பெருமளவிலான முக்கிய நடவடிக்கைகளின் மையப்பகுதியாக விளங்குகின்ற மேல் மாகாணம், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் அதன் பங்கில் சிறிதளவிலான அதிகரிப்பொன்றுடன் 2021இல் பெயரளவிலான மொ.உ.உற்பத்தியின் (அடிப்படை ஆண்டு 2015) 42.6 சதவீதத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய வெளியீட்டிற்கு தொடர்ந்தும் பாரியளவில் பங்களித்துள்ளது. வடமேல் (11.1 சதவீதம்) மற்றும் மத்திய (10.1 சதவீதம்) மாகாணங்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகூடிய பங்குகளை பதிவுசெய்தன.
-
Swarnamahal Financial Services PLC - Cancellation of the Licence
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 37(3) ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம், 2022 திசெம்பர் 28ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சிக்கு வழங்கப்பட்ட நிதித்தொழில் உரிமத்தினை இரத்துச்செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. அதற்கமை, நிதித்தொழில் சட்டத்தின் கீழ் நிதித்தொழிலில் ஈடுபடுவதற்கு 2022 திசெம்பர் 28 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி அனுமதிக்கப்படாது.
-
NCPI based headline inflation decreased for the second consecutive month in November 2022
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 ஒத்தோபரின் 70.6 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 65.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதேபோன்று, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஒத்தோபரின் 80.9 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 69.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஒத்தோபரின் 61.3 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 60.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
-
Sri Lanka Purchasing Managers’ Index - November 2022
தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டுக்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 நவெம்பரில் சுருக்கமடைந்து காணப்பட்டன.
தயாரிப்பு நடவடிக்கைகளில் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் பின்னடைவினை எடுத்துக்காட்டி, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2022 நவெம்பரில் 42.1 கொண்ட சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. நிரம்பலர் விநியோக நேரத்திற்கானவை தவிர, அனைத்து துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட குறைவடைந்த செயலாற்றம் இப்பின்னடைவிற்கு பங்களித்திருந்தது.
-
Public awareness in relation to defrauding individuals through scam calls, text messages, email messages and social media networks
மோசடியான தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றன ஊடாக வெளிநாட்டுத் தொழிலுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்து அல்லது பல்வேறு பெறுமதிவாய்ந்த பொருட்களைக் கொண்ட பொதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு சுங்கத் தீர்வைகளைச் செலுத்தக் கோரி, பொய்யான தகவல்களை வழங்குவதன் வாயிலாக தனிப்பட்டவர்களிடமிருந்து பண மோசடி செய்வது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் கோவைப்படுத்தப்படும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் அண்மைக்காலமாக துரித அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டு வருகின்றது.
-
Imposition/ Collection of Administrative Penalties by the Financial Intelligence Unit (FIU) to Enforce Compliance on Financial Institutions from 01 July 2022 to 16 November 2022
2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் பயனைக்கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்களின் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. தண்டப்பணங்கள் நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றை பரிசீலனையிற் கொண்டு விதித்துரைக்கப்படுகிறது.
அதற்கமைய, பணம் தூயதாக்குதலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துனர் என்ற ரீதியில், நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு 2022 யூலை 01 தொடக்கம் 2022 நவெம்பர் 16 வரையான காலப்பகுதியில் உளவறிதல் பிரிவு கீழேயுள்ளவாறு ரூ.10.75 மில்லியன் கொண்ட மொத்தத் தொகையினைத் தண்டப்பணமாக சேகரித்தது. தண்டப்பணமாக சேகரிக்கப்பட்ட நிதித் திரட்டு நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டிருக்கிறது.
-
Revocation of the money changing permit issued to Prasanna Money Exchange (Pvt) Ltd
2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் (சட்டம்) 11 (3)ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக, இல.42A, முதலிகே மாவத்தை, கொழும்பு 01 மற்றும் இல.57, காலி வீதி கொழும்பு 06 என்ற முகவரிகளில் முறையே அதன் தலைமை அலுவலகத்திலும் கிளையிலும் நாணய மாற்று தொழிலில் ஈடுபடுவதற்கு பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தின் தற்காலிக இடைநிறுத்தலைத் தொடர்ந்து, கம்பனி மூலம் புரியப்பட்ட இணங்காமைகள் தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொண்டதன் பின்னர், பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டிற்கு வழங்கிய DFE/RD/0058 ஆம் இலக்க அனுமதிப் பத்திரத்தை நிரந்தரமாக இரத்துச்செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.
-
External Sector Performance – October 2022
ஆடை ஏற்றுமதிகளின் குறைந்தளவிலான வருவாய்களின் காரணமாக வணிகப்பொருள் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2022 மாச்சிலிருந்து முதற்தடவையாக ஆண்டிற்காண்டு அடிப்படையில் 2022 ஒத்தோபரில் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. இறக்குமதிச் செலவினமானது 2022 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்திருந்தபோதிலும் இறக்குமதிச் செலவினத்தின் வீழ்ச்சி தொடர்ச்சியாக எட்டாவது மாதமாக 2022 ஒத்தோபரில் (ஆண்டிற்காண்டு) தொடர்ந்தது. வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஒத்தோபரில் குறிப்பிடத்தக்கதொரு சுருக்கத்தினைப் பதிவுசெய்தது. அதேவேளை, 2022 ஒத்தோபரில் தொழிலாளர் பணவனுப்பல்கள் நிலையாகக் காணப்பட்டதுடன் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் மேம்பட்டன. 2022 சனவரி தொடக்கம் ஒத்தோபர் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் ஐ.அ.டொலர் 1 பில்லியனை விஞ்சிக் காணப்பட்ட அதேவேளையில், தொழிலாளர் பணவனுப்பல்கள் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 3 பில்லியனை அண்மித்தும் காணப்பட்டன. அரச பிணையங்கள் சந்தையிலும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையிலும் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடு 2022 ஒத்தோபர் காலப்பகுதியில் சிறியளவிலான தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தது. மத்திய வங்கி அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிக்கும் பொருட்டு வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையைத் தொடர்ந்தும் வழங்கியமையானது மொத்த அலுவல்சார் ஒதுக்குகளின் திரவ மட்டத்தினைக் குறைவடையச் செய்துள்ளது. அதேவேளை, வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட உடனடிச் செலாவணி வீதமானது மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலரொன்றிற்கு ஏறத்தாழ 363 ரூபாவாகத் தொடர்ந்தும் காணப்பட்டது.
-
CCPI based headline inflation decreased for the second consecutive month in November 2022
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 ஒத்தோபரின் 66.0 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 61.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அதையொத்த போக்கினைத் தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஒத்தோபரின் 85.6 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 73.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த, அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஒத்தோபரின் 56.3 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 54.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.