• CCPI based headline inflation increased in December 2023

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 நவெம்பரின் 3.4 சதவீதத்திலிருந்து 2023 திசெம்பரில் 4.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வதிகரிப்பானது அநேகமாக 2023 நவெம்பரில் இலங்கை மத்திய வங்கியினால் எதிர்பார்க்கப்பட்ட எறிவுகளிற்கு இசைவாக காணப்படுகின்றது.

    ஐந்து மாதகால தொடர்ச்சியான பணச் சுருக்கத்தின் பின்னர், உணவு வகையானது 2023 நவெம்பரில் பதிவுசெய்த 3.6 சதவீதப் பணச் சுருக்கத்திலிருந்து 2023 திசெம்பரில் 0.3 சதவீதம் கொண்ட பணவீக்கத்தைப் பதிவுசெய்தது.  அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு) 2023 நவெம்பரின் 6.8 சதவீதத்திலிருந்து 2023 திசெம்பரில் 5.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. கொ.நு.வி.சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2023 திசெம்பரில் 0.89 சதவீதத்தைப் பதிவுசெய்தமைக்கு உணவு வகையின் பொருட்களில் அவதானிக்கப்பட்ட 1.16 சதவீதம் கொண்ட விலை அதிகரிப்புக்கள் மற்றும் உணவல்லா வகையின் பொருட்களில் அவதானிக்கப்பட்ட 0.27 சதவீதம் கொண்ட விலை குறைப்புக்கள் ஆகியவற்றின் இணைந்த தாக்கம் காரணமாக அமைந்தது. பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு) 2023 நவெம்பரின் 0.8 சதவீதத்திலிருந்து 2023 திசெம்பரில் 0.6 சதவீதமாக குறைவடைந்தது.

  • SL Purchasing Managers’ Index (PMI) for Construction Industry – November 2023

    கட்டடவாக்க கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2023 நவெம்பரில் 44.3 கொண்ட மொத்த நடவடிக்கைச் சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் சுருக்கமொன்றை எடுத்துக்காட்டியது. புதிய கருத்திட்டங்களின் குறைந்த மட்டமும் செயற்பாட்டிலுள்ள கருத்திட்டங்களுடன் தொடர்பான வேலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும் அவை இறுதிக்கட்டங்களில் இருப்பதால் நடவடிக்கை மட்டங்களைத் தடைப்படுத்தியுள்ளன எனப் பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனா்.

    முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில், புதிய கட்டளைகள் நவெம்பரில் உயர்வான வேகத்தில் வீழ்ச்சியடைந்தன. எனினும், அடுத்த ஆண்டின் முதலரைப்பகுதியில், குறிப்பாக அரசாங்க நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்களை வழங்குவதில் பல பதிலிறுப்பாளர்கள் உயர்வடைதலொன்றை எதிர்பார்க்கின்றனர். தற்போதைய தொழிற்துறை சூழ்நிலையின் கீழ் குறைந்தபட்ச அலுவலர்களுடன் கம்பனிகள் இயங்குவதனால் தொழில்நிலை தொடர்ந்தும் சுருக்கமடைந்து காணப்பட்டது. மேலும், கட்டடவாக்க வேலையில் குறைவடைதலுக்கிணங்க கொள்வனவுகளின் அளவு வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, வழங்குநர் விநியோக நேரம் மாதகாலப்பகுதியில் நீட்சியடைந்து காணப்பட்டது.

  • External Sector Performance – November 2023

    வர்த்தகப் பற்றாக்குறையானது ஓராண்டிற்கு முன்னைய நிலையுடனும் 2023 ஒத்தோபர் மாதத்துடனும் ஒப்பிடுகையில் ஏற்றுமதிகளில் ஏற்பட்ட மேம்பாடு மற்றும் இறக்குமதிகளில் ஏற்பட்ட சுருக்கம் என்பவற்றின் இணைந்த தாக்கத்தின் காரணமாக 2023 நவெம்பரில் சுருக்கமடைந்து காணப்பட்டது. ஏற்றுமதிகள் 2022 செத்தெம்பர் மாதத்திலிருந்து முதலாவது தடவையாக ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன.

    மாதாந்த தொழிலாளர் பணவனுப்பல்கள் ஐ.அ.டொலர் 500 மில்லியன் தொகையினை விஞ்சித் தொடர்ந்தும் காணப்பட்டதுடன் 2022இன் தொடர்புடைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2023 நவெம்பரில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன.

  • The Central Bank of Sri Lanka Releases the Financial Stability Review for the Year 2023

    2023ஆம் ஆண்டின் நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வானது நிதியியல் முறைமையில் காணப்பட்ட அபிவிருத்திகள், இடர்நேர்வுகள் அவற்றின் அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்படும் தன்மைகள் மற்றும் ஆய்விற்குரிய காலப்பகுதியில் அத்தகைய இடர்நேர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியினாலும் ஏனைய ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்ட கொள்கை வழிமுறைகள் என்பனவற்றை உள்ளடக்கியிருப்பதோடு 2023 செத்தெம்பர் இறுதி வரையான தரவுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவ்வெளியீட்டின் இலத்திரனியல் பதிப்பினை இலங்கை மத்திய வங்கியின் வலைத்தளமான (http://www.cbsl.gov.lk) இல் பார்வையிடமுடியும்.

    2023ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வின் சுருக்கமும் நிதியியல் உறுதித்தன்மையின் தோற்றப்பாடும் கீழே தரப்படுகின்றன: 

  • Provincial Gross Domestic Product (PGDP) - 2022

    மேல், வட மேல், மத்திய மாகாணங்கள் இலங்கையின் பொருளாதாரத்தைத் தொடர்ந்தும் நிலைநிறுத்தின

    மேல் மாகாணம் பெயரளவு மொ.உ.உற்பத்தியில் அதன் பங்கினை 43.4 சதவீதமாக அதிகரித்து 2022 காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் அதன் பிடியினைத் தொடர்ந்தும் வலுப்படுத்தியது. மேல் மாகாணத்தின் வலிமையான பிரசன்னம் அநேகமான பொருளாதார நடவடிக்கைகளில் விசேடமாக பணிகள் மற்றும் கைத்தொழில் துறைகளில் காணக்கூடியதாகவுள்ளது. அதன்பின்னர் வடமேல் (11.2 சதவீதம்) மற்றும் மத்திய (10.0 சதவீதம்) மாகாணங்கள் பொருளாதாரத்தில் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகூடிய பங்குகளைப் பதிவுசெய்துள்ளன.

  • Sri Lanka Purchasing Managers’ Index (Manufacturing and Services) - November 2023

    தயாரித்தல் மற்றும் பணிகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2023 நவெம்பரில் அதிகரிப்பினைப் பதிவுசெய்தன 

    தயாரிப்புக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2023 நவெம்பரில் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் 57.0 ஆக அதிகரித்தது. இது பருவகால காரணிகளால் தூண்டப்பட்டிருந்தது. அனைத்து துணைச் சுட்டெண்களிலிருந்தும் கிடைத்த சாதகமான பங்களிப்புடன் இச்சுட்டெண் 2023 மாச்சிற்குப் பின்னர் நடுநிலையான அடிப்படை அளவினை விஞ்சியது. 

    பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2023 நவெம்பரில் 59.4 கொண்ட சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, பணிகள் நடவடிக்கைகளில் துரிதமடைந்த விரிவடைதலை எடுத்துக்காட்டியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் மூலம் இது முன்னிலை வகித்திருந்தது.

  • IMF Executive Board Completes the First Review Under the Extended Fund Facility Arrangement with Sri Lanka

    இலங்கையுடனான 48 மாத காலம் கொண்ட விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் முதலாவது மீளாய்வினை பன்னாட்டு நாணய நிதியத்தின் சபை நிறைவுசெய்து, அதன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்புக்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சி.எ.உ. 254 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 337 மில்லியன்) தொகைக்கான அணுகல் வசதியினை நாட்டிற்கு வழங்குகின்றது.

  • Governor of the Central Bank of Sri Lanka Dr. Nandalal Weerasinghe, co-chaired RCG Asia Meeting of FSB, held in Hong Kong SAR on 29 November 2023

    ஆசியாவிற்கான நிதியியல் உறுதிப்பாட்டுச் சபை பிராந்திய ஆலோசனைக் குழு ஹொங் கொங் விசேட நிருவாகப் பிராந்தியத்தில் 2023 நவெம்பர் 29 அன்று கூடியதுடன்  அண்மைக்கால நிதியியல் சந்தை அபிவிருத்திகள் மற்றும் பிராந்தியம் மீதான அவற்றின் தாக்கம், வங்கியல்லா நிதியியல் இடையீட்டிலிருந்து தோன்றுகின்ற பாதிக்கப்படும்தன்மைகள், சில வளர்ந்துவரும் சந்தைகள் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களில் இறையாண்மை-வங்கி தொடர்பு தீவிரமடைதல் அத்துடன் மறைகுறிச்-சொத்து தொடர்புடைய இடர்நேர்வுகள் பற்றிய செயல்திறன்மிக்க ஒழுங்குபடுத்தலையும் மேற்பார்வையையும் ஊக்குவிப்பதற்கான வழிகள் என்பன பற்றி கலந்துரையாடியது. இவ் இடர்நேர்வுகளை அடையாளப்படுத்தல், கண்காணித்தல், கையாளுதல் என்பன பற்றிய தமது அனுபவங்களை உறுப்பினர்கள் பகிர்ந்துகொண்டதுடன் நிதியியல் முறைமைகளின் தாக்குப்பிடிக்கும்தன்மையை அதிகரிப்பதன் மீது நிதியியல் உறுதிப்பாட்டு சபை தொடர்ச்சியாக கவனம் செலுத்துவதையும் வரவேற்றனர். 

    ஹொங் கொங் நாணய அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அலுவலரும் நடப்பு உறுப்பு இணைத்தலைருமான திரு. எட்டி யூஈ மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் ஆசியாவிற்கான பிராந்திய ஆலோசனைக் குழுவின் தற்போதைய உறுப்பல்லாத இணைத்தலைவருமான முனைவர். நந்தலால் வீரசிங்க ஆகியோர் கூட்டத்திற்கு இணைத்தலைமை வகித்தனர். அவுஸ்ரேலியா, பூருனை தாருஸலாம், கம்போடியா, சீனா, ஹொங் கொங் விசேட நிர்வாகப் பிராந்தியம், இந்தியா, இந்தோனேசியா, யப்பான், கொரியா, மலேசியா, நியுசிலாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் நிதியியல் அதிகாரசபைகளை ஆசியாவிற்கான பிராந்திய ஆலோசனைக் குழும உறுப்புரிமை உள்ளடக்குகின்றது. 

  • CCPI based headline inflation increased in November 2023

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 ஒத்தோபரில் 1.5 சதவீதத்திலிருந்து 2023 நவெம்பரில் 3.4  சதவீதத்திற்கு அதிகரித்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வதிகரிப்பானது அநேகமாக 2023 நவெம்பரில் இலங்கை மத்திய வங்கியினால் எதிர்பார்க்கப்பட்ட எறிவுகளிற்கு இசைவாக காணப்படுகின்றது.

  • External Sector Performance – October 2023

    வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2022 ஒத்தோபர் மற்றும் 2023 செத்தெம்பர் ஆகிய மாதங்களுடன் ஒப்பிடுகையில் 2023 ஒத்தோபரில் மெதுவடைந்த ஆடை ஏற்றுமதிகளினால் உந்தப்பட்ட ஒப்பீட்டளவில் தாழ்ந்தளவிலான ஏற்றுமதி வருவாய்கள் மற்றும் எரிபொருள் இறக்குமதிகளினால் உந்தப்பட்ட உயர்ந்தளவிலான இறக்குமதிச் செலவினம் என்பவற்றின் காரணமாக விரிவடைந்து காணப்பட்டது. 

    தொழிலாளர் பணவனுப்பல்கள் 2023 ஒத்தோபரில் ஐ.அ.டொலர் 500 மில்லியன் தொகையினை விஞ்சிக் காணப்பட்ட அதேவேளையில் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் 2023 ஒத்தோபரில்; குறிப்பிடத்தக்களவிலான மேம்பாடொன்றினைத் தொடர்ந்தது.

    அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைத் 2023 ஒத்தோபரிலும் தொடர்ந்து பதிவுசெய்தபோதிலும் இதுவரையான ஆண்டு காலப்பகுதியில் உட்பாய்ச்சல்கள் தொடர்ந்தும் நேர்க்கணியமாகக் காணப்பட்டன.

    மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2023 ஒத்தோபர் இறுதியளவில் ஐ.அ.டொலர் 3.6 பில்லியனாக காணப்பட்டது.

    2023 ஒத்தோபர் மாத காலப்பகுதியில் இலங்கை ரூபாவானது ஐ.அ.டொலரிற்கெதிராக தொடர்ந்தும் உறுதியாக காணப்பட்டது.

Pages