இலங்கை மத்திய வங்கியின் 9ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடு 2016 திசெம்பர் 2ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்ரர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாடானது, சமகால தொனிப்பொருட்களின் மீதான ஆராய்ச்சிகளைத் தூண்டுவதனை நோக்கமாகக் கொண்டிருந்த வேளையில் மத்திய வங்கித்தொழில் மற்றும் பேரணட் பொருளாதார முகாமைத்துவம் என்பன தொடர்பான விடயஙக் ள் மீது மத்திய வங்கியின் ஆராய்ச்சியாளர்கள் நாணய அதிகாரிகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய ஆராய்ச்சி நிறுவனங்கள் அவற்றின் அண்மைக்கால கோட்பாட்டு ரீதியான அம்சங்களையும் அனுபரீதியான ஆய்வுகளையும் சமர்ப்பிப்பதற்கு ஒரு அரங்கினை உருவாக்கும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது.
-
9th International Research Conference of Central Bank of Sri Lanka
-
SL Purchasing Managers’ Index Survey - November 2016
தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2016 நவெம்பரில் 58.4ஆக விளங்கி 2016 ஒத்தோபருடன் ஒப்பிடுகையில் 1.9 சுட்டெண் புள்ளிகள் அதிகரிப்பினைக் கொண்டிருந்தமையின் மூலம் தயாரிப்பு நடவடிக்கைகள் ஒத்தோபருடன் ஒப்பிடுகையில் நவெம்பரில் விரிவடைந்தமையினை எடுத்துக் காட்டியது. இதற்கு இம்மாதகாலப்பகுதியில் விரிவடைந்த தொழில்நிலை மற்றும் உற்பத்தித் துணைச் சுட்டெண்களில் ஏற்பட்ட உயர்ந்தளவு வேகமே முக்கிய காரணமாகும். இம்மாத காலப்பகுதியில் புதிய கட்டளைகள் துணைச்சுட்டெண்ணும் அதிகரித்தது. நவெம்பரில் கொள்வனவுகள் இருப்புத்துணைச் சுட்டெண் வீழ்ச்சியடைந்து வரவிருக்கும் பண்டிகைக்காக இருப்புக்கள் பயன்படுதத்ப்படுகின்றமையை எடுத்துக்காட்டிய வேளையில் நிரம்பலின் வழங்கல் நேரம் நீண்டுகாணப்பட்டது. ஒட்டுமொத்த தரவுப்புள்ளிகள் விரிவடைந்த விடத்து மற்றைய அனைத்துத் துணைச்சுட்டெண்களும் சமநிலையான 50.0 அடிமட்டத்திறகு; மேலேயே காணப்பட்டன.
-
Inflation in November 2016
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013 = 100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 ஒத்தோபரின் 5.0 சதவீதத்திலிருந்து 2016 நவெம்பரில் 4.1 சதவீதத்திற்கு வீழச்சியடைந்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 நவெம்பரில்ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பங்களித்தன.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 நவெம்பரில் மாற்றமின்றி கடந்த மாதத்தின் 4.0 சதவீதத்தில் காணப்பட்டது.
-
External Sector Performance - August 2017
இலங்கையின் வெளிநாட்டுத் துறை 2017 ஓகத்தில் கலப்பான செயலாற்றமொன்றினைக் காட்டியது. 2017 ஓகத்தில் ஏற்றுமதி வருவாய்கள் அதிகரித்த போதும் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட உயர்ந்த வளர்ச்சி வர்த்தகப் பற்றாக்குறையில் விரிவாக்கமொன்றைத் தோற்றுவித்தது. 2017 ஓகத்தில் சுற்றுலா வருவாய்கள் அதிகரித்தபோதும் விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறையுடன் சேர்ந்து தொழிலாளர் பணவனுப்பல்கள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக வெளிநாட்டு நாணயக் கணக்கின் செயலாற்றம் தளர்வுற்றுக் காணப்பட்டது. எனினும், சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கு அரசாங்கத்திற்கான வெளிநாடடு; நாணய காலநிதியிடல் வசதியின் இரண்டாவது தொகுதி பெறப்பட்டமை, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை மற்றும் அரச பிணையங்கள் சந்தை என்பனவற்றிறகு; 2017இல் ஏற்பட்ட தொடர்ச்சியான வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் என்பனவற்றின் பெறுகைகள் மூலம் ஆதரவளிக்கப்பட்டது.
-
IMF Reaches Staff-Level Agreement on the Third Review of Sri Lanka’s Extended Fund Facility
இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிக்கும். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக ப.நா.நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும்.
-
Monetary Policy Review - December 2016
இலங்கை தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக மதிப்பீடுகளின்டி, 2016இன் மூன்றாம் காலாண்டுப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் 5.6 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 4.1 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2016இன் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் பணிகள் துறை 4.7 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ள வேளையில் கைத்தொழில் நடவடிக்கைகள் 6.8 சதவீதம் கொண்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்தன. எனினும் வேளாண்மையுடன் தொடர்பான நடவடிக்கைகள; தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக சுருக்கத்தினைப் பதிவு செய்து 1.9 சதவீதத்தினால் குறைவடைந்தமைக்கு 2016இன் மூன்றாம் காலாண்டில் நிலவிய மோசமாக வானிலை நிலமைகளின் தாக்கமே காரணமாகும்.
-
Dr. Indrajit Coomaraswamy is named Central Bank Governor of the Year, South Asia by Global Capital Markets publication
இலங்கை மத்திய வங்கி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி இவ்வாண்டிற்கான சிறந்த தென்னாசியாவிற்கான ஆளுநராக 2017 ஒத்தோபர் 14 அன்று வாசிங்கடன் டிசி இல் இடம்பெற்ற பிரபல்யம் மிக்க பிரசுரலாயமான குளோபல் கெப்பிட்டல் மார்க்கட்டின் விருது வழங்கும் வைபவத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார் என்பதனை மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறது. இவ்விருது வழங்கும் வைபவம் உலக வங்கி – ப.நா. நிதியத்தின் ஆண்டுக் கூட்டத்துடன் ஒரே நேரத்தில் எதேச்சையாக இடம்பெற்றிருக்கிறது. உலகளாவிய மூலதனம் என்பது பன்னாட்டு மூலதனச் சந்தைகளில் பணியாற்றுகின்ற மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் முன்னிலைச் செய்திகளையும் கருத்துக்களையும் தரவுப் பணிகளையும் வழங்குமொன்றாகும்.
-
SL Purchasing Managers’ Index Survey - September 2017
தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் செத்தெம்பர் மாதத்தில் 59.0 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 ஒகத்து மாதத்துடன் ஒப்பிடும்போது 4.6 சுட்டெண் புள்ளிகளாலான ஒரு அதிகரிப்பாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகளானது ஒகத்து 2017 உடன் ஓப்பிடும் போது செத்தெம்பர் 2017 இல் உயர்வான வீதத்தில் தொடர்ச்சியான அதிகரிப்பை குறித்துக்காட்டுகின்றது. இவ் அதிகரிப்பானது, முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட குறைவிலிருந்து மீட்சியடைந்து புதிய தொழிலாளர்களின் ஆட்சேர்ப்பினால் தொழில்நிலை துணைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட அதிகரிப்பினால் பிரதானமாக உந்தப்பட்டது. உற்பத்தி மற்றும் புதிய கடட்ளைகள் துணைச்சுட்டெண்களும் செத்தெம்பரில் உயர்வான வீதத்தில் விரிவடைந்து காணப்பட்டன. கொள்வனவு இருப்புகளின் துணைச் சுட்டெண் முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட மேலதிக இருப்புகளின் நிலைமை காரணமாக மெதுவான வேகத்தில் அதிகரித்து காணப்பட்டது.
-
IMF Staff Concludes Visit to Sri Lanka to Discuss Progress of Economic Reform Program
தூதுக்குழுவினது விஜயத்தின் இறுதியில் விடுக்கப்பட்ட பத்திரிகை வெளியீடு, ப.நா. நிதிய அலுவலர் குழு நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் அது ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களைக் கொண்ட ப.நா.நிதியத்தின் அறிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிப்பர். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக ப.நா.நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும்.
-
External Sector Performance - July 2017
இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது நிதியியல் கணக்கிற்கான அதிகரித்த ஏற்றுமதிகள் மற்றும் உட்பாய்ச்சல்களினால் தொடர்ந்தும் மேம்பாடடைந்தது. எனினும், ஏற்றுமதி வருவாய் அதிகரித்தமைக்கு மத்தியிலும் உயர்ந்தளவான இறக்குமதிச் செலவினங்கள் காரணமாக, 2017 யூலையில் வர்த்தகப் பற்றாக்குறையானது 2016இன் இதையொத்த மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் விரிவடைந்துள்ளது. யூலையில் தொழிலாளர் பணவனுப்பல்கள் அதிகரித்த வேளையிலும் சுற்றுலா வருவாய்கள் சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது, கடந்த நான்கு மாதங்களில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சிப் போக்கினை மாற்றியுள்ளது.