பலமானதும் இயலாற்றல் மிக்கதுமான வங்கித்தொழில் துறையை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கை மத்திய வங்கி உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளுக்கான குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாடுகளை அதிகரித்திருக்கிறது. இந்நோக்கத்திற்காக கருத்திலெடுக்கப்பட்ட மூலதனமானது உயர் இழப்புக்களை ஈர்க்கும் இயலளவுள்ள உயர்தர மூலதனத்தினால் பெருமளவு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.
குறைந்தபட்ச மூலதன தேவைப்பாடுகளை உயர்த்துவது வங்கிகளின் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையை பலப்படுத்துவதற்காக இலங்கையில் பாசல் III இனை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் என்பதுடன் வங்கித்தொழில் துறையின் திரட்சிப்படுத்தலுக்கும் வழிவகுக்கும். இதன்படி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கையில் நிறுவப்பட்ட அல்லது கூட்டிணைக்கப்பட இருக்கும் புதிய வங்கிகள் பின்வரும் மூலதனத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு தேவைப்படுத்தப்படுகின்றன:









இலங்கை மத்திய வங்கியின் 9ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடு 2016 திசெம்பர் 2ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்ரர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாடானது, சமகால தொனிப்பொருட்களின் மீதான ஆராய்ச்சிகளைத் தூண்டுவதனை நோக்கமாகக் கொண்டிருந்த வேளையில் மத்திய வங்கித்தொழில் மற்றும் பேரணட் பொருளாதார முகாமைத்துவம் என்பன தொடர்பான விடயஙக் ள் மீது மத்திய வங்கியின் ஆராய்ச்சியாளர்கள் நாணய அதிகாரிகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய ஆராய்ச்சி நிறுவனங்கள் அவற்றின் அண்மைக்கால கோட்பாட்டு ரீதியான அம்சங்களையும் அனுபரீதியான ஆய்வுகளையும் சமர்ப்பிப்பதற்கு ஒரு அரங்கினை உருவாக்கும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது.