தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2020 திசெம்பரில் வீழ்ச்சியடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 நவெம்பரின் 5.2 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 4.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, 2019 திசெம்பரில் நிலவிய உயர்வான தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கம் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 நவெம்பரின் 9.4 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 7.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 நவெம்பரின் 1.7 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 2.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 நவெம்பரின்  6.3 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 6.2 சதவீதத்திற்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்தது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது, 2020 திசெம்பரில் 1.03 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. இதற்கு உணவு வகைகளிள் உள்ள  பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்களே முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், உணவு மற்றும் உணவல்லா வகைகளின் மாதாந்த மாற்றங்கள் 2020 திசெம்பரில் முறையே 1.02 சதவீதத்தினையும் 0.01 சதவீதத்தினையும் பதிவுசெய்தன. அதற்கமைய, உணவு வகையினுள் 2020 திசெம்பர் காலப்பகுதியின் போது பிரதானமாக தேங்காய், காய்கறிகள், உருளைக்கிழங்கு, அரிசி மற்றும் சின்ன வெங்காயம் என்பவற்றின் விலைகளில் அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன.

மேலும், ஆண்டிற்கு ஆண்டு மையப் பணவீக்கம் 2020 நவெம்பரின் 4.5 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 4.7 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில், ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம் 2020 நவெம்பரின் 4.2 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 4.1 சதவீதத்திற்கு சிறிதளவில் வீழ்ச்சியடைந்திருந்தது.

முமுவடிவம்

Published Date: 

Thursday, January 21, 2021