நிதியியல் உளவறிதல் பிரிவினால் 2026 ஏப்பிறல் தொடக்கம் யூன் வரையான காலப்பகுதியில் அறிக்கையிடல் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட நிர்வாக ரீதியான தண்டப்பணங்கள்

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு, நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் பிரகாரம், நிறுவனங்களின் தொடர்புடைய இணங்கியொழுகாமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றினைப் பரிசீலனையிற்கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம்.

அதற்கமைய, பணம் தூயதாக்குதலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துநர் என்ற ரீதியில் நிதியியல் உளவறிதல் பிரிவானது நிறுவனங்களின் இணங்குவிப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு 2026 ஏப்பிறல் தொடக்கம் யூன் வரையான காலப்பகுதியில் கீழே குறித்துக்காட்டப்பட்டவாறு மொத்தமாக மூன்று மில்லியன் முந்நூறு ஆயிரம் ரூபா (ரூ.3,300,000) கொண்ட தொகையினைத் தண்டப்பணமாகச் சேகரித்தது. தண்டப்பணங்களாகச் சேகரிக்கப்பட்ட பணமானது திரட்டு நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டது. 

அறிக்கையிடல் நிறுவனம்

தண்டப்பணங்கள் மற்றும் இணங்கியொழுகாமைகளின் விபரங்கள்

கொமர்ஷல் கிறெடிற் அன்ட் பினான்ஸ் பிஎல்சி 

விதிக்கப்பட்ட திகதி          :               09.04.2026          

தொகை                                     :               ரூ. 3,000,000.00 (மூன்று மில்லியன் ரூபா)

கொடுப்பனவுத் திகதி     :               21.04.2026

தண்டப்பணம் விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள்: 

i.      2024.06.03ஆம் திகதியிடப்பட்ட 2387/02ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டவாறு, 2012ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் ஒழுங்குவிதிகளின் கீழ் பெயர்குறிக்கப்பட்ட ஆளொருவருடன் கம்பனி வியாபாரத் தொடர்பினை ஏற்படுத்தியிருந்தமையினாலும், வியாபாரத் தொடர்பினை ஏற்படுத்துகின்ற நேரத்தில் கம்பனி வாடிக்கையாளரை செயற்றிறன்மிக்க விதத்தில் உறுதிப்படுத்துவதற்கு தவறியிருந்தமையினாலும்,

ii.     

2025.02.20ஆம் திகதியிடப்பட்ட 2424/51ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலிலும் 2025.05.30ஆம் திகதியிடப்பட்ட 2438/47ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலிலும் வெளியிடப்பட்டவாறு, 2012ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் ஒழுங்குவிதிகளின் கீழ் பெயர்குறிக்கப்பட்ட தனிப்பட்டவருடன் கம்பனி வியாபாரத் தொடர்பினைப் பேணியிருந்தமையினாலும் பட்டியல்கள் இற்றைப்படுத்தப்படுகின்ற போது மற்றும் தொடர்ச்சியானதொரு முறையில், பெயர்குறிக்கப்பட்ட ஆட்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியல்களின் கீழ் பெயர்குறிக்கப்பட்ட எவரேனும் தனிப்பட்டவர்கள் அல்லது ஏதேனும் நிறுவனங்களுடன் எவ்வித வியாபாரத் தொடர்புகளும் இடம்பெறவில்லை என்பதனை நிச்சயப்படுத்துவதற்குத் தற்போதுள்ள வாடிக்கையாளர் தரவுத்தளத்தினை செயற்றிறன்மிக்க விதத்தில் பரிசோதிப்பதற்கு கம்பனி தவறியிருந்தமையினாலும் அத்துடன்,

iii.        2024.06.03ஆம் திகதியிடப்பட்ட 2387/02ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலிலும் 2025.02.20ஆம் திகதியிடப்பட்ட 2424/51ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலிலும் வெளியிடப்பட்ட பெயர்குறிக்கப்பட்ட பட்டியல்களை கம்பனி அதன் முறைமையில் தாமதமின்றி இற்றைப்படுத்துவதற்கு தவறியிருந்தமையினாலும்,

 நிர்வாக ரீதியான தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

மேற்குறிப்பிடப்பட்ட தவறுகைகள் நிதியியல் உளவறிதல் பிரிவினால் நடாத்தப்பட்ட தளத்திலான பரீட்சிப்புக் காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டன.  

நியூ நடாஷா (பிறைவெட்) லிமிடெட் 

விதிக்கப்பட்ட திகதி          :               15.05.2026          

தொகை                                     :               ரூ. 3,000,000.00 (முந்நூறு ஆயிரம் ரூபா)

கொடுப்பனவுத் திகதி      :               03.06.2026

தண்டப்பணம் விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள்: 

i. இருநூறு ஆயிரம் ரூபா (ரூ.200,000.00) அல்லது ஏதேனும் வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமமான தொகையினை விஞ்சுகின்ற கொடுக்கல்வாங்கல்களுக்காக வியாபாரத் தொடர்பினை ஏற்படுத்துகின்ற போது வாடிக்கையாளர் உரிய விழிப்புக்கவனச் செயன்முறையின் போது கொடுக்கல்வாங்கலின் நோக்கம், நிதியங்களின் மூலம், தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, தொழில் மற்றும் அரசியல் ரீதியில் முகங்கொடுக்கும் ஆட்கள் நிலை போன்ற கட்டாய வாடிக்கையாளர் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், 

ii. இருநூறு ஆயிரம் ரூபா (ரூ.200,000.00) அல்லது ஏதேனும் வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமமான தொகையினை விஞ்சுகின்ற கொடுக்கல்வாங்கல்களை மேற்கொண்டுள்ள வாடிக்கையாளரிடமிருந்து அடையாள ஆவணப் பிரதியொன்றைப் பெற்றுக்கொண்டு அத்தகைய ஆவணத்தின் பதிவுகளை வைத்திருப்பதற்கும்,  

iii.  தொடர்புடைய அனைத்து இடர்நேர்வு காரணிகளையும் கருத்திற்கொண்டு அதன் பணம் தூயதாக்கலினதும் பயங்கரவாதி நிதியளித்தலினதும் அனைத்தையுமுள்ளடக்கிய மதிப்பீடொன்றை நடாத்துவதற்கு தவறியிருந்தமையினாலும் அதன்மூலம் அத்தகைய பணம் தூயதாக்கல்ஃபயங்கரவாதி நிதியளித்தல் இடர்நேர்வு மதிப்பீட்டின் பிரதியொன்றை பரீட்சிப்பாளருக்கு வழங்குவதற்கு தவறியிருந்தமையினாலும், 

iv.    பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதி நிதியளித்தல் மற்றும் பேரழிவுமிக்க ஆயுதப்பெருக்கம் மற்றும் அதற்கு நிதியளித்தலுடன் தொடர்புடைய 1968ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுடன் இசைந்துசெல்லும் விதத்தில் பெயர்குறிக்கப்பட்ட எவரேனும் தனிப்பட்டவர்கள், ஏதேனும் நிறுவனங்கள் அல்லது குழுக்களின் பட்டியலிற்கு எதிராக வியாபாரத் தொடர்புகளினை ஏற்படுத்துகின்ற நேரத்தில் வாடிக்கையாளர்களினை உறுதிப்படுத்துவதற்கும், 

கம்பனி தவறியிருந்தமையினால் நிர்வாக ரீதியான தண்டப்பணம் விதிக்கப்பட்டது. 

 

முறைமையிலும் நடைமுறையிலும் மேற்குறிப்பிடப்பட்ட இடைவெளிகள் அவதானிக்கப்பட்ட போதிலும், கம்பனியின் மூலம் பேணப்படும் பெயர்குறிக்கப்பட்ட தனிப்பட்டவர்கள் அல்லது நிறுவனங்களுடனான வியாபாரத் தொடர்புகளின் எடுத்துக்காட்டல்கள் தளத்திலான பரீட்சிப்புக் காலப்பகுதியில் வெளிப்படுத்தப்படவில்லை.

 

மேற்குறிப்பிடப்பட்ட தவறுகைகள் இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட இடர்நேர்வின் அடிப்படையிலமைந்த தளத்திலான பரீட்சிப்புக் காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டன

PDF

 

Published Date: 

Wednesday, November 18, 2026