இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – கட்டடவாக்கம் 2026 யூலையில் விரிவடைந்தது

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு, 2026 யூலையில் 61.4 ஆக அதிகரித்து, கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவாக்கத்தை எடுத்துக்காட்டியது. உள்ளீட்டுத் தடைகள் குறிப்பாக தார் வழங்கல் பற்றாக்குறை காணப்பட்ட போதிலும், கட்டடவாக்க வேலையின் தொடர்ச்சியான பாய்ச்சலொன்றை பல அளவீட்டுப் பதிலிறுப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

புதிய கருத்திட்டங்களின் நிலையான உட்பாய்ச்சல் புதிய கட்டளைகள் சுட்டெண்னின் மேலதிக விரிவாக்கத்திற்குப் பங்களித்தது. அதேவேளை, தேர்ச்சிபெற்ற தொழிலாளர் பற்றாக்குறைகள் பற்றி பல நிறுவனங்கள் தொடர்ச்சியாக அறிக்கையிட்ட போதிலும், தொழில்நிலைச் சுட்டெண் யூலையில் வலுவடைந்தது. கட்டடவாக்க வேலை அதிகரித்தளவில் கிடைக்கப்பெறுகின்றமை மூலம் ஆதரவளிக்கப்பட்டு, கொள்வனவுகளின் அளவுச் சுட்டெண் யூலையில் மேலும் அதிகரித்தது. எவ்வாறிருப்பினும், வழங்கல் பற்றாக்குறைகள் மற்றும் உயர்வடைந்த பொருள் விலைகள் பற்றி அளவீட்டுப் பங்கேற்பாளர்கள் தொடர்ந்தும் குறிப்பிட்டனர். அதேவேளை, நிரம்பலர்களின் விநியோக நேரச் சுட்டெண் யூலையிலும் உயர்வடைந்து காணப்பட்டது.

உள்ளீடுகளின் நிலையான பாய்ச்சலொன்றைப் பேணுவதன் மீதான கரிசனைகள் தொடர்ந்து காணப்பட்ட போதிலும், வரவிருக்கும் கருத்திட்ட ஒதுக்கீடுகள் பற்றிய நம்பிக்கையினால் ஆதரவளிக்கப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களில் கட்டவாக்க நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கைகள் சாதகமாகக் காணப்பட்டது.

PDF

Published Date: 

Monday, August 31, 2026