நாணயக் கொள்கை அறிக்கை - 2026 ஓகத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிடுகின்றது

மத்திய வங்கி 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் தேவைப்பாடுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் 2026இற்கான அதன் இரண்டாவது நாணயக் கொள்கை அறிக்கையினை வெளியிட்டது. ஆண்டொன்றிற்கு இருமுறை வெளியிடப்படுகின்ற நாணயக் கொள்கை அறிக்கையானது பொருளாதாரம் குறிப்பாக, பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சித் தோற்றப்பாடு என்பன தொடர்பிலான முன்னோக்கிய பார்வையிலமைந்த நுண்ணோக்குகள் மற்றும் எறிவுகளிற்கான இடர்நேர்வுகள் என்பவற்றினை வழங்குகின்றது. இவ்வறிக்கையின் ஊடாக, மத்திய வங்கி அதன் அண்மைய நாணயக் கொள்கைத் தீர்மானங்களிற்குப் பின்னணியிலுள்ள நியாயபூர்வதன்மையினைத் தொடர்பூட்டுவதன் மூலம் அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறுந்தன்மை என்பவற்றினை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. 

இவ்வறிக்கை பிரதானமாக 2026 யூலை மாத நாணயக் கொள்கை மீளாய்வின் போது நாணயக் கொள்கைச் சபையினால் பரிசீலனையிற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

முக்கிய பண்புகள்

    • குறைந்த மட்டங்களிலிருந்து சடுதியாகத் துரிதமடைந்த முதன்மைப் பணவீக்கம் 5 சதவீத இலக்குடன் ஒருங்கிசைந்திருப்பதற்கு முன்னர் அண்மைக் காலத்தில் உயர்வடைந்து காணப்படுமென எறிவுசெய்யப்படுகின்றது.
    • மத்திய வங்கியானது பணவீக்கம் சார்ந்த அழுத்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் ஏதேனும் பணவீக்க எதிர்பார்க்கைகள் நிலைநிறுத்தப்படாமை தொடர்பான இடர்நேர்வினைத் தணிப்பதற்கும் 2026 மேயில் நாணயக் கொள்கையினை இறுக்கமடையச்செய்தது. 
    • தனியார்த் துறைக் கொடுகடன் வளர்ச்சியானது அண்மைய கொள்கை வழிமுறைகளுக்குப் பதிலிறுத்தும் வகையில் மிதமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
    • வெளிநாட்டுத் துறையானது மத்திய கிழக்குப் போரிலிருந்தான கசிவுத்தாக்கங்களுக்கு மத்தியில் தாக்குப்பிடிக்கும்தன்மையினைத் தொடர்ந்தும் கொண்டிருந்தது.
    • புவிசார் அரசியல் மற்றும் வானிலையுடன் தொடர்புடைய நிச்சயமற்றதன்மைகள் இடர்நேர்வுகளைத் தோற்றுவிக்கக்கூடுமெனினும், பொருளாதார வளர்ச்சிக்கான தோற்றப்பாடானது பரந்தளவில் உறுதியாகக்.

இணையவழி வெளியீடொன்றாகக் காணப்படுகின்ற நாணயக் கொள்கை அறிக்கையானது https://www.cbsl.gov.lk/ta/வெளியீடுகள்/பொருளாதார-மற்றும்-நிதியியல்-அறிக்கை/நாணயக்-கொள்கை-அறிக்கை எனும் மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் கிடைக்கப்பெறுகின்றது. 

PDF

Published Date: 

Thursday, August 13, 2026