நஷனல் டெவலப்மன்ட் பாங்க் பிஎல்சி - உள்ளக மோசடி

கணிசமான நட்டத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒரு உள்ளக மோசடியைக் கண்டறிந்துள்ளதாக நஷனல் டெவலப்மன்ட் பாங்க் பிஎல்சியானது இலங்கை மத்திய வங்கிக்குத் தெரிவித்துள்ளது. இந்த மோசடியால் எந்தவொரு வாடிக்கையாளர் கணக்குகளோ அல்லது வைப்புக்களோ பாதிக்கப்படவில்லை என்றும் இலங்கை மத்திய வங்கிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியானது, நஷனல் டெவலப்மன்ட் பாங்க் பிஎல்சி வழங்கிய தகவல்களின் அடிப்படையில், நிதியியல் தாக்கம் குறித்த ஆரம்பகட்ட மதிப்பீட்டினை மேற்கொண்டுள்ளதோடு, தெரிவிக்கப்பட்ட நட்டம் இருந்தபோதிலும், மூலதனப் போதுமை மற்றும் திரவத்தன்மை தொடர்பான முன்மதி விகிதங்கள், குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுக்கு மேலான மட்டங்களில் தொடர்ந்தும் உள்ளன என்பதில் திருப்தி அடைகிறது. இலங்கை மத்திய வங்கி நிலைமைகளைத் தொடர்ந்தும் அவதானித்து வருவதோடு தேவையெனில் அவசியமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.  

தேவையெனில், ஏற்கனவே நடைமுறையிலுள்ள தொடர்புடைய சட்டங்கள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றின் ஏற்பாடுகளின் கீழ் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து வங்கிகளுக்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள தற்காலிகத் திரவத்தன்மையையும் நஷனல் டெவலப்மன்ட் பாங்க் பிஎல்சி அணுகிக் கொள்ளலாம். 

PDF

 

Published Date: 

Monday, April 6, 2026