கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2026 மாச்சில் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100)  அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), 2026 மாச்சில் உயர்வடைந்துள்ளது. அதற்கமைய, முதன்மைப் பணவீக்கம், 2025 பெப்புருவரியின் 1.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026 மாச்சில் 2.2 சதவீதமாகப் பதிவாகியது.

உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2026 பெப்புருவரியின் 0.2 சதவீதத்திலிருந்து 2026 மாச்சில் 0.7 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2026 பெப்புருவரியின் 2.3 சதவீதத்திலிருந்து 2026 மாச்சில் 2.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.

மாதத்திற்கு மாதம் அடிப்படையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 2026 மாச்சில் 0.25 சதவீத அதிகரிப்பொன்றைப் பதிவுசெய்தது. இவ்வதிகரிப்பானது முக்கியமாக போக்குவரத்து துணை வகையின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக 0.52 சதவீதப் புள்ளிகளால் பங்களித்திருந்த உணவல்லா வகையினால் தூண்டப்பட்டிருந்த அதேவேளை, உணவு வகை -0.27 சதவீதப் புள்ளிகளால் பங்களித்தது.

அதேவேளை, பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கப் போக்குகளைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2026 பெப்புருவரியின் 2.1 சதவீதத்திலிருந்து 2026 மாச்சில் 2.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.

2026ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டிற்காக அடையப்பெற்ற காலாண்டு சராசரிப் பணவீக்கமானது மத்திய வங்கியின் அண்மையப் பணவீக்க எறிவுகளுடன் பரந்தளவில் அணிசேர்ந்திருக்கின்றது. நிலவுகின்ற புவிசார் அரசியல் நிச்சயமற்றதன்மைகளுக்கு மத்தியில் பிந்திய கிடைக்கப்பெறும் தரவுகள் மற்றும் ஊகங்களை அடிப்படையாகக் கொண்டு, 2026 மாச்சில் நாணயக்  கொள்கைச் சுற்றில் மேற்கொள்ளப்பட்ட பணவீக்க எறிவுகள், பணவீக்கம் முன்னர் எதிர்பார்க்கப்பட்டதையும் விட முன்னதாக, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 5 சதவீதம் கொண்ட இலக்கினை அடையுமென எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. பொருத்தமானக் கொள்கைகளின் ஆதரவுடன் அதன்பின்னர் பணவீக்கமானது இலக்கை அண்மித்து இருக்கமென எறிவுசெய்யப்படுகின்றது.

PDF

Published Date: 

Tuesday, March 31, 2026