இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – கட்டடவாக்கம் 2026 பெப்புருவரியில் விரிவடைந்தது

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2026 பெப்புருவரியில் 70.3 கொண்ட பெறுமதியினைப் பதிவுசெய்தது. முன்னை மாதத்தில் அவதானிக்கப்பட்ட குறிப்பிடத்தக்களவு உயர்வான மட்டத்துடன் ஒப்பிடுகையில் மெதுவான வேகமாயினும் கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவாக்கத்தை இது எடுத்துக்காட்டுகின்றது. கட்டடவாக்கக் கருத்திட்டங்களின் நிலையான உட்பாய்ச்சல்கள் மற்றும் சாதகமான வானிலை என்பன மூலம் துணையளிக்கப்பட்டு, பெப்புருவரியில் சாதகமான தொழில் துறை நிலைமைகளை அநேகமான நிறுவனங்கள் அறிக்கையிட்டன.

பரந்த வகையான கட்டுமானக் கருத்திட்டங்கள் அதிகரித்தளவில் கிடைக்கப்பெறுகின்றமையை பல பதிலிறுப்பாளர்கள் அறிக்கையிட்டதன் மூலம் புதிய கட்டளைகள் சுட்டெண் மாதகாலப்பகுதியில் தொடர்ந்தும் விரிவடைந்தது. தொழில்நிலைச் சுட்டெண் உயர்வான வீதத்தில் விரிவடைந்து அதிகரித்த கருத்திட்ட கிடைக்கப்பெறும்தன்மை பற்றிய எதிர்பார்க்கையில் முன்னெடுக்கப்படுகின்ற ஆட்சேர்த்தலை பிரதிபலித்தது. கொள்வனவுகளின் அளவுச் சுட்டெண்ணும் உயர்வான கட்டடவாக்க நடவடிக்கைகளுக்கிசைவாக விரிவடைந்தது. அதேவேளை, நிரம்பலர் விநியோக நேரம் மாதகாலப்பகுதியில் மேலும் நீட்சியடைந்து, தொடர்ச்சியான கட்டுமானக் கேள்வியையும் சீனப் புத்தாண்டுடன் இணைந்த இறக்குமதி தொடர்புபட்ட தாமதங்களையும் பிரதிபலித்தது.

கட்டடவாக்க நடவடிக்கைகளுக்கான தோற்றப்பாடு, தொடர்ச்சியான கருத்திட்ட கிடைக்கப்பெறுதல் பற்றிய எதிர்பார்க்கைகள் மூலம் தூண்டப்பட்டு, சாதகமாகக் காணப்படுகின்றது. எனினும், மத்திய கிழக்கு மோதலிலிருந்து தோன்றுகின்ற அதிகரிக்கின்ற உள்ளீட்டுச் செலவுகள் மற்றும் சாத்தியமான விநியோகத் தடைகள் தொடர்பில் நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருப்பதனால் கீழ்நோக்கிய இடர்நேர்வுகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

PDF

Published Date: 

Tuesday, March 31, 2026