பன்னாட்டு நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் செய்கின்றார்

பன்னாட்டு நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் முனைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இலங்கைக்கான அவரது விஜயத்தின் போது 2026 பெப்புருவரி 17ஆம் திகதி அன்று இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் செய்தார். இவ்விஜயமானது இலங்கையின் பன்னாட்டு நாணய நிதிய அங்கத்துவத்தின் 75ஆவது ஆண்டு நிறைவு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவு என்பவற்றுடன் ஒருங்கிணைந்ததாகக் காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் வளாகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் மூத்த அதிகாரிகள் ஆகியோரை முனைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா சந்தித்தார். 

முழுவடிவம்

Published Date: 

Tuesday, February 17, 2026