கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2024 பெப்புருவரியில் வீழ்ச்சியடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 சனவரியின் 6.4 சதவீதத்திலிருந்து 2024 பெப்புருவரியில் 5.9   சதவீதத்திற்கு சரிவடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இச்சரிவானது பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியின்  எறிவுகளுக்கு இசைவாக காணப்படுகின்றது.

உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்காண்டு), 2024 சனவரியின் 3.3 சதவீதத்திலிருந்து 2024 பெப்புருவரியில் 3.5 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு) 2024 சனவரியின் 7.9 சதவீதத்திலிருந்து 2024 பெப்புருவரியில் 7.0 சதவீதத்திற்குச் சரிவடைந்தது. உணவு வகையிலுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட 0.67 சதவீதம் கொண்ட விலை வீழ்ச்சிகளினதும் உணவல்லா வகையின் பொருட்களில் அவதானிக்கப்பட்ட 0.62 சதவீதம் கொண்ட விலை அதிகரிப்புக்களினதும் ஒன்றினைந்த தாக்கத்தின் காரணமாக  கொ.நு.வி.சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2024  பெப்புருவரியில் -0.05 சதவீதமாகப் பதிவாகியது. அதேவேளை, பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு), 2024 சனவரியின் 2.2 சதவீதத்திலிருந்து 2024 பெப்புருவரியில் 2.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.

பரந்தளவில் நோக்குகையில், பணவீக்கமானது நன்கு நிலைநிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்க்கைகள் அத்துடன் பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மூலம் துணையளிக்கப்பட்டு காலப்போக்கில் 5 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்ட மட்டத்தை அண்மித்து நிலைபெறுவதற்கு முன்னர், அண்மைய வரிச் சீராக்கங்களால் பிரதானமாகத் தூண்டப்பட்டு அண்மைய காலத்தில் இலக்கிற்கு மேல் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

முழுவடிவம்

Published Date: 

Thursday, February 29, 2024