கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம்; 2024 சனவரியில் தொடர்ந்தும் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 திசெம்பரின் 4.0 சதவீதத்திலிருந்து 2024 சனவரியில் 6.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வதிகரிப்பானது அநேகமாக இலங்கை மத்திய வங்கியினால் எதிர்பார்க்கப்பட்ட எறிவுகளிற்கு இசைவாக காணப்படுகின்றது

உணவுப் பணவீக்கமானது 2023 திசெம்பரின் 0.3 சதவீதத்திலிருந்து 2024 சனவரியில் 3.3 சதவீதத்தினால் அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2023 திசெம்பரின் 5.8 சதவீதத்திலிருந்து 2024 சனவரியில் 7.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.  கொ.நு.வி.சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2024 சனவரியில் 2.87 சதவீதத்தைப் பதிவுசெய்தமைக்கு உணவு வகையின் பொருட்களில் அவதானிக்கப்பட்ட 1.21 சதவீதம் கொண்ட விலை அதிகரிப்புக்களும்; உணவல்லா வகையின் பொருட்களில் அவதானிக்கப்பட்ட 1.66 சதவீதம் கொண்ட விலை அதிகரிப்புக்களும் காரணமாக அமைந்தன. அதேவேளை, பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப்  பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2023 திசெம்பரின் 0.6 சதவீதத்திலிருந்து 2024 சனவரியில் 2.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

முழுவடிவம்

Published Date: 

Wednesday, January 31, 2024