இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் பி நந்தலால் வீரசிங்க, வெளிநாட்டில் வதிகின்ற இலங்கையர்களுக்கு விடுக்கும் செய்தி

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் நீடித்து நிலைக்கின்ற தாக்கம், உலக அரசியல் சமமின்மைகள் அத்துடன் நாட்டின் பேரண்டப் பொருளாதார சமமின்மைகள் காரணமாக தற்போது இலங்கை சமூகப் பொருளாதார மற்றும் நிதியியல் இடர்பாடுகளை எதிர்கொண்டு,ள்ளமை நாட்டு மக்களுக்கு இன்னல்களைத் தோற்றுவித்துள்ளது. நாட்டின் மேற்குறித்த நிலைமையினை கையாள்வதற்கு, நாட்டின் படுகடன் கடப்பாடுகளை முனைப்பாக முகாமைசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், ஏனைய நாடுகளிடமிருந்து உடனடி நிதி உதவியினை நாடுதல் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நிகழ்ச்சித்திட்டமொன்றுக்காக பன்னாட்டு நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தல் உள்ளடங்கலாக பல வழிமுறைகளை அதிகாரிகள் எடுத்துவருகின்ற போதிலும், அத்தகைய வழிமுறைகளின் சாதகமான தாக்கங்கள் எமது மக்களுக்கு நடுத்தர காலத்திலிருந்து நீண்ட காலத்திலேயே  நன்மைபயக்கும். ஆகையினால், உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப்பொருட்கள் உள்ளடங்கலாக நாளாந்த அத்தியாவசிய இறக்குமதிகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கு நிலையினை அதிகரிப்பதற்கு அவசரமான  வழிமுறைகள் தேவைப்படுகின்றன.

இதனைப் பின்னணியாகக் கொண்டு,  இலங்கை மத்திய வங்கியானது இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகளுக்கு மிகவும் தேவையாகவிருக்கின்ற வெளிநாட்டுச் செலாவணியினை அன்பளிப்புச் செய்வதன் மூலம் இக்கட்டான இத்தருணத்தில் தாய்நாட்டிற்கு ஆதரவளிப்பதற்கு தமது விருப்பத்தை வெளிப்படுத்தி வெளிநாட்டில் வாழ்கின்ற இலங்கையர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர்பூட்டல்களை மிகவும் வரவேற்கின்றது.

இலங்கை மத்திய வங்கியின் நலச் சொத்தாண்மையின் கீழ் தொடர்புடைய வங்கிகளில் பேணப்படுகின்ற பின்வரும் கணக்குகளுக்கு நலன்விரும்பிகள் வெளிநாட்டுச் செலாவணிப் பரிமாற்றல்களை மேற்கொள்ளலாம் என்பதுடன் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய இறக்குமதி நோக்கத்திற்காக மாத்திரம் அத்தகைய வெளிநாட்டு நாணய அன்பளிப்புகள்; பயன்படுத்தப்படும் என்பதற்கு இலங்கை மத்திய வங்கி உறுதியளிக்கின்றது.

நாணயம் வங்கியின் பெயர் பயன்பெறுநர் கணக்கின் பெயர் பயன்பெறுநர் கணக்கு இலக்கம் ஏனைய தகவல்கள்
US Dollar (USD) Deutsche Bank Trust Company Americas, New York, NY USA Central Bank of Sri Lanka 04015541 SWIFT: BKTRUS33XXX
Euro (EUR) ODDO BHF Bank - Frankfurt Am Main Germany Central Bank of Sri Lanka 0000739854 SWIFT: BHFBDEFF500
Sterling Pound (GBP) Bank of Ceylon (UK) LTD, London , UK Central Bank of Sri Lanka 88001249

 

Sort Code :40-50-56

IBAN :

GB89BCEY40505688001249

SWIFT: BCEYGB2LXXX

இணக்கம் பார்க்கும் நோக்கங்களுக்காக கொடுப்பனவு உறுதிப்படுத்தலின் பிம்பத்தினை கனயஉஉ;உடிளட.டம என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறும் நலன்விரும்பிகள் கேட்டுக்கொள்ளப்படுவதுடன் இது பற்றிய ஏதேனும் வினவல்களை இதே மின்னஞ்சல் முகவரியூடாகப்  பெற்றுக்கொள்ளலாம். உறுதிப்படுத்;தப்பட்டதன் பின்னர் ஒவ்வொரு கொடுப்பனவும் கிடைக்கப்பெற்றமை பற்றி மின்னஞ்சலூடாக அறிவிக்கப்படும்.

அத்தகைய வெளிநாட்டு நாணய நிதியங்களின் சேகரிப்பு மற்றும் உபயோகம் பற்றிய வெளிப்படைத்தன்மையினை பேணும் பொருட்டு, இலங்கை மத்திய வங்கியிலிருந்து 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இக்குழு, மேற்குறிப்பிடப்பட்ட கணக்குகளுக்கு நலன்விரும்பிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு நாணய நிதியங்களின் நிதியியல் கூற்றுக்களை இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்;தளம் ஊடாக  காலாண்டு அடிப்படையில் வெளியிடும். அதேவேளை, இக்கணக்குகளின் நிதியங்களின் கிடைப்பனவு மற்றும் உபயோகம் என்பன  காலம்முறையான சுயாதீன கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும்

குறிப்பு: இவ்வறிக்கை 2022.04.12 அன்று இலங்கை மத்;திய வங்கியின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்;ட செய்தியினை மாற்றீடுசெய்கின்றது.

 

Published Date: 

Wednesday, April 13, 2022