பேரேட்டுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலமைந்த பகிரப்பட்ட உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் சாத்தியப்பாட்டு எண்ணக்கருவை உருவாக்கிப் பரீட்சிக்கும் செயன்முறையினை இலங்கை மத்திய வங்கி வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது

பேரேட்டுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலமைந்த பகிரப்பட்ட உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் சாத்தியப்பாட்டு எண்ணக்கரு அறிக்கை 2021 ஒத்தோபர் 25 அன்று தேசிய கொடுப்பனவு சபையின் தலைவர், இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் திருமதி இவட் பெர்னாந்து மூலம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் முகாமைத்துவம் மற்றும் அலுவலர்கள் பிரசன்னமாகியிருந்ததுடன் சாத்தியப்பாட்டு எண்ணக்கருப் பரிசோதனையில் ஈடுபட்ட வங்கிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளும் மூன்று சாத்தியப்பாட்டு எண்ணக்கரு விருத்தியாளர் குழுக்களும் மெய்நிகராகப் பங்கேற்றனர். 

சாத்தியப்பாட்டு எண்ணக்கருவினை உருவாக்குவதற்கு இலங்கை மத்திய வங்கி முன்னர் மூன்று விண்ணப்பதாரிகளைத் தெரிவுசெய்திருந்தது. அதாவது, விண்ணப்பதாரிகளாக கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பாடசாலையுடன் இணைந்து சம்பத் வங்கி, லினேர்சிக்ஸ் உடன் இணைந்து யால லப்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் மற்றும் சுவீடனின் நோர்புளொக் ஏபி என்பனவாகும்.  சாத்தியப்பாட்டு எண்ணக்கரு இலங்கை மத்திய வங்கியினாலும் பத்து வர்த்தக வங்கிகளினாலும் அதாவது அமானா பாங்க், இலங்கை வங்கி, காகிள்ஸ் பாங்க், கொமர்ஷல் பாங்க் ஒவ் சிலோன், டிஎவ்சிசி பாங்க், ஹட்டன் நஷனல் வங்கி, எச்எஸ்பீசி பாங்க், நஷனல் டிவெலப்மன்ட் பாங்க், மக்கள் வங்கி மற்றும் ஸ்டேன்டார்ட் சார்ட்டட் பாங்க் என்பன மூலம் பரீட்சிக்கப்பட்டன. சாத்தியப்பாட்டு எண்ணக்கரு பணிக்கமர்த்தலும் பரிசோதனைக் கட்டமும் 2021 யூனில் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது. வங்கிகளுக்கிடையில் உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் தகவல்களைப் பாதுகாப்பாகவும் வினைத்திறனாகவும் பகிர்வதை இலயச்செய்துள்ள பேரேட்டுத் தொழில்நுட்பத்தின் பல முக்கிய அம்சங்களை கண்டறியப்பட்டவை எடுத்துக்காட்டின. உண்மையில் இது பல்வேறு நிதியியல் சேவைகளில் புத்தாக்கங்களை இயலச்செய்வதற்கு பேரேட்டுத் தொழில்நுட்பத்தின் வாய்ப்பினை கூட்டிணைந்து கண்டறிவதற்கு வங்தித்தொழில் துறையினதும் தகவல் தொழில்நுட்பத் தொழில் துறையினதும் தன்னார்வப் பங்கேற்பை ஈர்த்த இலங்கை மத்திய வங்கியினால் தொடங்கப்பட்ட முன்னோடி தேசியக் கருத்திட்டமொன்றாகும்.

தொழில்துறை முழுவதும் பகிரப்பட்ட உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் செயன்முறையொன்றின் பேரேட்டுத் தொழில்நுட்பம் அடிப்படையில் அமைந்த சாத்தியப்பாட்டு எண்ணக்கருவொன்றை உருவாக்குவதன் நோக்கம் வாடிக்கையாளர் அனுபவத்தினை மேம்படுத்துவதற்கும் வங்கிகளினதும் ஏனைய நிதியியல் நிறுவனங்களினதும் குறைவான தொழிற்பாட்டுச் செலவுகளையும் தொழிற்பாட்டு இடர்நேர்வுகளையும் குறைப்பதற்குமான சாத்தியப்பாட்டினை மதிப்பிடுவதாகும். உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் செயன்முறையினை விசேடமாக பயனர் நட்புடனும் பாதுகாப்பான வடிவமைப்புக்களுடனும் டிஜிட்டல் மயமாக்குவது டிஜிட்டல் நிதியியல் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளரை ஊக்கப்படுத்தி நிதியியல் சேவைகளுக்கான அவர்களது பெறுவழிகளை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பேரேட்டுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலமைந்த பகிரப்பட்ட உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் சாத்தியப்பாட்டு எண்ணக்கருவை வெற்றிகரமாக நிறைவுசெய்தமை நிதியியல் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் இலங்கையின் பயணத்திலும் அதேபோன்று நிதியியல் சேவைகளுக்கான பெறுவழியினை அதிகரிப்பதிலும் முக்கிய படிமுறையொன்றை எடுத்தியம்புகின்றது.

 

Published Date: 

Thursday, October 28, 2021