தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2021 செத்தெம்பரில் வீழ்ச்சியடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 ஓகத்தில் 6.7 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 6.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சிக்கு 2020 செத்தெம்பரில் நிலவிய உயர் தள புள்ளிவிபரத் தாக்கம் முழுமையாகக் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஓகத்தில் 11.1 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 10.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு)  2021 செத்தெம்பரில் 3.0 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண், 2021 செத்தெம்பரில் 5.5 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. 

முழுவடிவம்

Published Date: 

Thursday, October 21, 2021