கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 ஒத்தோபரில் 4 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)   ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2019 ஒத்தோபரில் நிலவிய உயர் தளத்தின் புள்ளிவிபரத் தாக்கத்தின் காரணமாக 2020 ஒத்தோபரில் 4.0 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 செத்தெம்பரின் 11.5 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 10.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 செத்தெம்பரின் 0.9 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 1.3 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 செத்தெம்பரின் 4.7 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 4.6 சதவீதத்திற்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது 2020 ஒத்தோபரில் 0.1 சதவீதத்தில் பதிவாகியிருந்தது. உணவு வகையிலுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் இதற்குப் பிரதான காரணமாக அமைந்தன. அதற்கமைய, உணவு வகையினுள் பெரிய வெங்காயம், அரிசி மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றின் விலைகள் 2020 ஒத்தோபரில் அதிகரித்தன. எனினும், மாதகாலப்பகுதியில் உடன் பழங்கள், கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பவற்றின் விலைகள் வீழ்ச்சியினைப் பதிவுசெய்தன.

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினை பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 செத்தெம்பரின் 2.9 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 3.0 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது. எவ்வாறாயினும்,ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கமானது 2020 செத்தெம்பரின் 3.6 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 3.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

முழுவடிவம்

 

Published Date: 

Thursday, October 29, 2020