2017 ஏப்பிறல் பணவீக்கம

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013ஸ்ரீ100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 மாச்சில் 8.6 சதவீதத்திலிருந்து 2017 ஏப்பிறலில் 8.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2017 ஏப்பிறலின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் அதிகரித்தமைக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கிய பங்களித்தன.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 மாச்சில் பதிவுசெய்யப்பட்ட 5.6 சதவீதத்திலிருந்து 2017 ஏப்பிறலில் 6.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.

மாதாந்த மாற்றத்தினைக் பரிசீலனையில் கொள்ளும்போது, தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 2017 மாச்சின் 119.5 சுட்டெண் புள்ளியிலிருந்து 2017 ஏப்பிறலில் 121.0 சுட்டெண் புள்ளிக்கு அதிகரித்தது. இம்மாதாந்த அதிகரிப்பிற்கு உணவு வகையில் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்புக்களே முக்கிய காரணமாகும். இம்மாத காலத்தில் உணவு வகையில், காய்கறிகள், தேங்காய், வாழைப்பழம், உடன்மீன், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றின் விலைகள் அதிகரித்தன. உணவல்லா வகைகளில், ஆடை மற்றும் காலணி, தளபாடங்கள், வீட்டலகுச் சாதனங்கள், வழமையான வீட்டு அலகுகளின் பேணல், போக்குவரத்து, உணவகம் மற்றும் மற்றும் சுற்றுலா விடுதிகள் மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணை வகையின் விலைகள் அதிகரித்தன. 2017 ஏப்பிறல் காலப்பகுதியில் வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலைத் துணை வகையின் விலைகள் அதிகரித்தன. அதேவேளை, வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள்; நலம், தொடர்பூட்டல், பொழுதுபோக்கு, கலாச்சாரம் மற்றும் கல்வி என்பனவற்றின் விலைகளில் இம்மாத காலப்பகுதியில் மாற்றமின்றிக் காணப்பட்டன.

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 மாச்சில் 7.0 சதவீதத்திலிருந்து 2017 ஏப்பிறலில் 5.9 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சிக்கு ஒப்பீட்டு ரீதியில் தாழ்ந்த மாதாந்த மாற்றமும் தளத் தாக்கமும் காரணமாகும். வருடாந்த சராசரி தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் மையப்பணவீக்கம் 2017 ஏப்பிறலில் 6.6 சதவீதத்திற்கு மாற்றமின்னிறக் காணப்பட்டது.

Published Date: 

Monday, May 22, 2017