"வட மாகாண முதன்மைத் திட்டத்திற்கான பொருளாதார அபிவிருத்திக் கட்டமைப்பினை" தொடங்கி வைத்தல்

இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிரதேச அலுவலகமானது வட மாகாணத்திலுள்ள புத்திஜீவிகள் குழுவொன்றின் பங்களிப்புடன் வட மாகாணத்தின் தற்கால சமூகப் பொருளாதார சவால்கள், சாத்தியமான பரிகாரங்கள், அதேபோன்று பரிந்துரைகள் என்பவற்றைப் பிரதிபலிக்கின்ற வட மாகாண முதன்மைத் திட்டமொன்றுக்கான "பொருளாதார அபிவிருத்திக் கட்டமைப்பு" இனை முன்வைக்கின்றது.