ஸ்டான்டட் கிறடிற் அன்ட் பினான்ஸ் லிமிடெட் வைப்பாளர்களுக்கு இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை துணையளித்தல் திட்டத்தின் கீழான நட்டஈட்டுக் கொடுப்பனவுகள்

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கு அமைய நிதி வியாபாரத்தினை மேற்கொள்வதற்காக ஸ்டான்டட் கிறடிற் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட உரிமம் 2018.07.25ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் இரத்துச்செய்யப்படுள்ளது.

இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை துணையளித்தல் திட்டத்தின் கீழ் ஸ்டான்டட் கிறடிற் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டின் வைப்பாளர்களுக்கு நட்டஈட்டினைக் கொடுப்பனவு செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இலங்கை வைப்புக் காப்புறுதி ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகளுக்கு அமைவாக நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும். விண்ணப்ப பிரமாணம் தொடர்பான அறிவுறுத்தல்கள் அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிவிக்கப்படும்.

உரிய காலத்தில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டவுடன் வேண்டப்பட்ட ஆவணங்களுடன் முறையாகப் பூர்த்திசெய்யப்பட்ட கோரிக்கைப் படிவங்களை இலங்கை மத்திய வங்கியின் தீர்மானங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்குமாறு ஸ்டான்டட் கிறடிற் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டின் வைப்பாளர்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பான மேலதிக விபரங்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம். 

0112-398788

0112-477261

Published Date: 

Wednesday, December 5, 2018