ஹொங்கொங் அன்ட் சங்காய் பாங்கிங்கோப்ரேசன் லிமிடெட்டினால் முதனிலை வணிகர் அங்கத்துவம் புறக்கீடு செய்யப்படுகிறது

இல. 24, சேர் பாரோன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு 01இல் அமைந்துள்ள ஹொங்கொங் அன்ட் சங்காய் பாங்கிங் கோப்ரேசன், 2016 ஏப்பிறல் 01ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில், முதனிலை வணிகராக தொழிற்படுவதனை நிறுத்திக் கொள்கின்றமை பற்றி பொதுமக்களுக்கு இத்தால் அறியத்தரப்படுகிறது. எனினும், ஹொங்கொங் அன்ட் சங்காய் பாங்கிங் கோப்ரேசன் பத்திரங்களற்ற பிணையங்களில் முதனிலை நேரடி பங்கேற்பாளராக தொடர்ந்தும் பணியாற்றும் என்பதுடன் வாடிக்கையாளர் சார்பில் பத்திரங்களற்ற பிணையங்களை கொடுக்கல்வாங்கல் செய்வதிலும் லங்காசெகுயரில் வாடிக்கையாளர் கணக்குகளைப் பேணுவதிலும் தொடர்ந்தும் ஈடுபடும்.  

 

Published Date: 

Thursday, March 31, 2016