2016 மாச்சில் பணவீக்கம்

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான, பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 பெப்புருவரியின் 1.7 சதவீதத்திலிருந்து 2016 மாச்சில் 2.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் அதிகரித்தமைக்கு உணவல்லா வகையே முக்கியமாகப் பங்களித்தது. பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் (உந்து ஊர்திக் காப்புறுதி); வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை; போக்குவரத்து; ஆடை மற்றும் காலணி ஆகிய துணை வகைகளின் விலைகள் ஆண்டிற்கு ஆண்டு அதிகரிப்பிற்கு முக்கியமாகப் பங்களித்தன.   

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 பெப்புருவரியில் பதிவுசெய்யப்பட்ட 2.6 சதவீதத்திலிருந்து 2016 மாச்சில் 2.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.   

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாதாந்த மாற்றத்தினைப் பரிசீலனையில் கொள்ளும்பொழுது,  தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 2016 பெப்புருவரியிலிருந்து 2016 மாச்சில் 0.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இம்மாதாந்த வீழ்ச்சிக்கு உணவு மற்றும் வெறியமல்லாத குடிவகையிலுள்ள பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணமாகும். இம்மாத காலப்பகுதியில் காய்கறிகள், அரிசி, பச்சை மிளகாய், தேங்காய் மற்றும் சின்ன வெங்காயம் என்பனவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. இம்மாத காலப்பகுதியில் வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை துணைத் துறையின் விலைகள் அதிகரித்தன. உணவல்லா வகையிலுள்ள அனைத்துத் துணைத் தொகுதிகளும் இம்மாத காலப்பகுதியில் பெரும்பாலும் மாற்றமின்றிக் காணப்பட்டன.

முழுவடிவம்

Published Date: 

Friday, April 22, 2016