இலங்கையில் உரிமம்பெற்ற வங்கிகளின் கணக்குகளைக் கணக்காய்வு செய்வதற்கான கணக்காய்வாளர்கள் பற்றிய தெளிவுபடுத்தல்

தேசிய அபிவிருத்தி வங்கியின் உள்ளக மோசடி தொடர்பான வெளிப்படுத்தலைத் தொடர்ந்து, தேசிய அபிவிருத்தி வங்கியின் நிதியியல் கூற்றுக்களின் கணக்காய்வில் ஈடுபட்ட ஈடுபாட்டுப் பங்காளருக்கும் தர உறுதிப்பாட்டுப் பங்காளருக்கும் உரிமம்பெற்ற வங்கிகளினுடைய எந்தவொரு கணக்காய்வுப் பணிகளையும் ஒப்படைக்க வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி ஏனஸ்ட் அன்ட் யங், இலங்கை நிறுவனத்தினை வேண்டிக்கொண்டது.

சந்தேகங்களைத் தவிர்ப்பதற்காக, திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் இலங்கையில் உரிமம்பெற்ற வங்கிகளின் கணக்குகளைக் கணக்காய்வு செய்வதற்குத் தகுதியுடைய தகைமைபெற்ற கணக்காய்வாளராக ஏனஸ்ட் அன்ட் யங் நிறுவனத்தை அங்கீகரித்திருப்பதில் இக்கட்டுப்பாடானது எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடப்படுகின்றது.

PDF

 

Published Date: 

Tuesday, November 10, 2026