‘டிஜிட்டல் கொடுப்பனவுகளின் ஊடாக எதிர்காலத்தை வடிவமைப்போம்’ - இலங்கை மத்திய வங்கி யாழ்ப்பாணத்தில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கின்றது

இலங்கை மத்திய வங்கியானது அரசாங்க அதிகாரிகள், வர்த்தகச் சமூகம் மற்றும் பொதுமக்களிடையே டிஜிட்டல் கொடுப்பனவு முறைகள் குறித்த விழிப்புணர்வினை அதிகரிக்கின்ற குறிக்கோளுடன் யாழ்ப்பாணத்தில் கார்கில்ஸ் சதுக்கத்தில் 2026 ஓகத்து 07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் மு.ப 8.30 மணி தொடக்கம் பி.ப 7.00 மணி வரை டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது. வட மாகாண ஆளுநர் கௌரவ திரு. நாகலிங்கம் வேதநாயகம் அவர்கள் அங்குரார்ப்பண அமர்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் சிரே~;ட அதிகாரிகள், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் திரு. எம். பிரதீபன், வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தேசிய சில்லறைக் கொடுப்பனவு முறைமையின் தொழிற்படுத்துநரான லங்காபே (பிறைவட்) விமிடெட் ஆகியவற்றின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொள்வர்.  

‘டிஜிட்டல் கொடுப்பனவுகளின் ஊடாக எதிர்காலத்தை வடிவமைப்போம்’ எனும் கருப்பொருளின் கீழ் நிதியியல் நிறுவனங்களுடனும் ஏனைய ஆர்வலர்களுடனுமான கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியினால் தொடங்கப்பட்ட தேசியளவிலான பிரசாரமொன்றின் பாகமாக இந்நிகழ்வு இடம்பெறுகின்றது. இதனையொத்த ஊக்குவிப்பு நிகழ்வுகள் அம்பாந்தோட்டை, நுவரெலியா, தம்புள்ளை, குருநாகலை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் வெற்றிகரமாக இடம்பெற்று, பரந்தளவிலான விழிப்புணர்வினைத் தோற்றுவித்ததுடன் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் சௌகரியத்தினையும் நன்மைகளினையும் அனுபவிப்பதற்கு வியாபாரங்களையும் பொதுமக்களையும் இயலச்செய்தன. 

இந்நிகழ்வில், பரந்த அளவிலான டிஜிட்டல் கொடுப்பனவுச் சேவைகளுக்குப் பதிவுசெய்துகொள்வதற்கும் செயற்றிறன்மிக்க விதத்தில் பயன்படுத்துவதற்கும் வங்கிகள், நிதிக் கம்பனிகள் மற்றும் இலத்திரனியல் பணச் சேவை வழங்குநர்கள் உள்ளடங்கலாக நிதியியல் நிறுவனங்களிடமிருந்து தனிப்பயனாக்கப்பட்ட உதவியினைப் பெற்றுக்கொள்வதற்குப் பொதுமக்கள் இயலுமாகவிருப்பர். மேலும், லங்காபே (பிறைவட்) லிமிடெட்டுடன் இணைந்து நிதியியல் நிறுவனங்கள் LANKAQR கொடுப்பனவு ஏற்றுக்கொள்ளல் வசதியினை வியாபார நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாண நகர் பகுதியில் வணிகர் ஈடுபாட்டு முயற்சியொன்றினை மேற்கொள்ளவுள்ளன. 

நிதியியல் நிறுவனங்களினால் வழங்கப்படும் வழிகாட்டல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உதவி என்பவற்றுடன் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் சௌகரியத்தினைப் பற்றிய தமது விழிப்புணர்வினையும் அனுபவத்தினையும் மேம்படுத்துவதற்கு இவ்வாய்ப்பின் அனுகூலத்தினைப் பெற்றுக்கொள்ளுமாறு யாழ்ப்பாணப் பொதுமக்கள் மற்றும் வர்த்தகச் சமூகத்திற்கு இலங்கை மத்திய வங்கி அழைப்பு விடுக்கின்றது.

PDF

 

 

Published Date: 

Wednesday, August 5, 2026