சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கை - 2026 யூன் வெளியீட்டை இலங்கை மத்திய வங்கி வெளியிடுகின்றது

இலங்கை மத்திய வங்கி அதன் பிந்திய சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கையினை 2026 யூலை 31 அன்று வெளியிட்டது. நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த செலாவணி வீத வீச்சினால் ஆதரவளிக்கப்படும் நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பினுள் நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலினை அனுசரித்து மத்திய வங்கியினால் மேற்கொண்ட நாணய மற்றும் வெளிநாட்டுச் செலாவணித் தொழிற்பாடுகள் பற்றிய ஆர்வலர் புரிந்துகொள்ளலை மேம்படுத்துவதனை சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கை நோக்காகக் கொள்கின்றது.

பிந்திய சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கையானது மத்திய வங்கியின் கொள்கை நிலைப்பாடு, திரவத்தன்மை நிலைமைகள், குறுங்கால வட்டி வீதம், செலாவணி வீத அபிவிருத்திகள், அதேபோன்று பணச் சந்தை மற்றும் இலங்கை மத்திய வங்கியின் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை தொழிற்பாடுகள் என்பன பற்றி 2026ஆம் ஆண்டின் முதலாமரையாண்டின் மீது குறிப்பான கவனம் செலுத்தி பொதுநோக்கொன்றை வழங்குகின்றது. சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கை காலத்திற்குகந்த தலைப்புகளில் இரு சிறப்புக் கட்டுரைகளையும் எடுத்துரைப்பதுடன் சந்தைத் தொழிற்பாடுகள் மற்றும் கொடுக்கல்வாங்கல்கள் பற்றிய தெரிவுசெய்யப்பட்ட குறிகாட்டிகளையும் உள்ளடக்குகின்றது.

முக்கிய சிறப்புக்கூறுகள்:

    • விலை உறுதிப்பாட்டினைப் பாதுகாப்பதற்காக மத்திய வங்கி 2026ஆம் ஆண்டில் அதன் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை இறுக்கமாக்கியது. நாணயக் கொள்கையின் இறுக்கமாக்கல் பேரண்டமுன்மதிமிக்க மற்றும் வெளிநாட்டுச் செலாவணி தொடர்புடைய வழிமுறைகளுடன் இணைந்து வெளிநாட்டுத் துறை உறுதிப்பாட்டிற்குத் துணையளித்தல்.
    • அவ்வப்போதான வீழ்ச்சிகள் ஏற்பட்டபோதிலும், மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகளினால் முதன்மையாக ஆதரவளிக்கப்பட்டு, உள்நாட்டுப் பணச் சந்தையில் மிகையான திரவத்தன்மை தொடர்ந்து காணப்பட்டது.
    • நாணய இறுக்கமடைதலுக்குப் பதிலிறுத்தி குறுங்கால வட்டி வீதங்கள் மேல்நோக்கிச் சீராக்கம்செய்யப்பட்டு, 2026இன் முதலாமரைப்பகுதியின் போதான செயற்றிறன்மிக்க நாணயக் கொள்கை ஊடுகடத்தலைப் பிரதிபலித்தது.
    • திரவத்தன்மையினை முகாமைத்துவம்செய்வதற்கும், குறுங்கால வட்டி வீதங்களினை வழிநடாத்துவதற்கும், அத்துடன் பண மற்றும் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைகளில் ஒழுங்கான நிலைமைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் மத்திய வங்கியானது நிலவுகின்ற நாணயக் கொள்கை நிலையுடன் அதன் நாணயத் தொழிற்பாடுகளை அணிசேரச்செய்தது.
    • தீவிரமடைந்த உலகளாவிய நிச்சயமற்றதன்மைகள் மற்றும் அதிகரித்த வெளிநாட்டுச் செலாவணிக்கான கேள்வி என்பவற்றுக்கு மத்தியில் செலாவணி வீதமானது 2026இன் முதலமாரைப்பகுதியின் போது சில பெறுமானத்தேய்வு அழுத்தங்களை எதிர்கொண்டது.  
    • உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் மத்திய வங்கியின் தலையீடானது தேவையற்ற செலாவணி வீதத் தளம்பலினைக் குறைக்கின்ற அதேவேளை சாதகமான சூழ்நிலைகளில் ஒதுக்குகளைத் திரட்டுவதனை முதன்மை நோக்காகக் கொண்டிருந்தது. 
    • உள்நாட்டு வங்கிகளிற்கிடையிலான வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் நடவடிக்கையானது காலப் பகுதியின் இறுதியை நோக்கி மேம்படுவதற்கு முன்னர், தீவிரமடைந்த வெளிநாட்டு நிச்சயமற்றதன்மைகளுக்கு மத்தியில் 2026இன் முதலமாரைப்பகுதியின் போது மிதமடைந்தது.
    • ரூபா வைப்புக்களில் வளர்ச்சியானது 2026இன் முதலாமரைப்பகுதியின் போது மிதமடைந்த அதேவேளை நியதி ஒதுக்குத் தேவைப்பாடு கட்டமைப்பிற்கான சீராக்கங்கள், ஒதுக்கு முகாமைத்துவத்தினையும் நாணயத் தொழிற்பாடுகளின் செயற்றிறன்வாய்ந்த தன்மையினையும் வலுப்படுத்தின.
    • சுற்றோட்டத்திலுள்ள நாணயம் மற்றும் ஒதுக்குப் பணம் என்பன அதிகரித்தன. 
    • மத்திய வங்கியின் அரச பிணையங்களின் உடைமை, 2026இன் முதலாமரைப் பகுதியின் போது சிறிதளவு வீழ்ச்சியடைந்தது.

PDF

 

 

Published Date: 

Friday, July 31, 2026