இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – கட்டடவாக்கம் 2026 ஏப்பிறலில் சுருக்கமடைந்தது

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு, பிரதானமாக சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியுடன் தொடர்புபட்ட பருவக்கால மெதுவடைதலின் காரணமாக, 2026 ஏப்பிறலில் 45.7 கொண்ட பெறுமதிக்கு வீழ்ச்சியடைந்தது. மேலும், திட்டமிடப்பட்ட வேலைகளின் காலந்தவறாத நடைமுறைப்படுத்தலுக்கான சவால்களாக, குறிப்பாக பெற்றோலிய இரசாயனம் அடிப்படையிலான மூலப்பொருட்கள் காரணமாக உள்ளீட்டு பற்றாக்குறைகளையும் மத்திய கிழக்கு மோதலிலிருந்து தோற்றம்பெறுகின்ற அதிகரிக்கின்ற செலவுகளையும் பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனா.

ஏப்பிறலில், குறிப்பாக வீதி புனரமைத்தல் நடவடிக்கைகள் போன்ற கருத்திட்டங்கள் தொடர்ச்சியாக கிடைக்கப்பெறுகின்றமையை அநேகமான நிறுவனங்கள் அறிக்கையிட்டதோடு, இது புதிய கட்டளைகள் சுட்டெண்ணின் விரிவாக்கத்திற்கு துணைபுரிந்தது. எனினும், அதிகரிக்கின்ற மூலப்பொருட்களின் செலவு காரணமாக விலை மீள்பேச்சுவார்த்தை தேவைப்படக்கூடும் என்பதால், சில புதிய கருத்திட்டங்கள் தாமதங்களை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ளதாக அநேகமான பதிலிறுப்பாளர்கள் சுட்டிக்காட்டினர். தொழில்நிலைச் சுட்டெண் தொடர்ந்து விரிவடைந்து, நிலையான கருத்திட்டங்களின் கிடைக்கப்பெறுகின்றமைக்கு பதிலிறுக்கும் வகையில் நிறுவனங்களால் முன்னெடுக்கப்படுகின்ற அலுவலர் ஆட்சேர்த்தலை பிரதிபலித்தது. எனினும், பல நிறுவனங்கள் பல்வேறு தேர்ச்சிபெற்ற தொழில்சார் வகைகளுக்கிடையில் பற்றாக்குறைகளை குறிப்பிட்டிருந்தன. பிரதானமாக கட்டுமான நடவடிக்கைகளின் தாழ்ந்தளவிலான மட்டங்களின் காரணமாக, கொள்வனவுகளின் அளவுச் சுட்டெண் ஏப்பிறலில் வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, நிரம்பலர் விநியோக நேரம் மாதகாலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவில் நீட்சியடைந்தது.

புவியியல் அரசியல் அபிவிருத்திகள் மீதான கரிசனைகள் தொடர்ந்து காணப்பட்ட போதலும், கருத்திட்டங்களின் நிலையான பாய்ச்சலால் தூண்டப்பட்டு, கட்டுமான நிறுவனங்களுக்கிடையிலான வியாபார எண்ணப்பாங்கு அடுத்த மூன்று மாதங்களிலும் சாதகமாகக் காணப்படுகின்றது.

PDF

Published Date: 

Friday, May 29, 2026