கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2026 மாச்சில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), பருவகால கேள்வியுடன் தொடர்பான அதிகரித்த நடவடிக்கையினால் ஆதரவளிக்கப்பட்டு, 2026 மாச்சில் 66.7ஆக அதிகரித்தது. எனினும், மூலப் பொருள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகள், அதிகரிக்கின்ற செலவுகள் மற்றும் ஏற்பாட்டு சேவை மட்டுப்பாடுகள் போன்றன காரணமாக இறுக்கமான உற்பத்திச் சூழலொன்று பற்றி பல பதிலிறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி துணைச் சுட்டெண்கள் குறிப்பாக உணவு மற்றும் குடிபானங்கள் மற்றும் புடவைகள் மற்றும் அணியும் ஆடைத் தயாரிப்பு துறைகளிலுள்ளவை மாச்சில் விரிவடைந்தன. கொள்வனவுகளின் இருப்பு துணைச் சுட்டெண்ணும் அதிகரிக்கின்ற உற்பத்திக் கேள்வியுடன் இசைந்துசெல்லும் விதத்தில் விரிவடைந்தது. மேலும், தற்போது இடம்பெறும் மத்திய கிழக்கு மோதலின் காரணமாக சாத்தியமான இடையூறுகளுக்கு எதிராக தமது உற்பத்தித் திட்டங்களைப் பாதுகாப்பதற்காக முன்னெச்சரிக்கைமிக்க களஞ்சியப்படுத்தலினை சில நிறுவனங்கள் தெரிவித்தன. தொழில்நிலைச் சுட்டெண் மாச்சில் மெதுவான வேகமொன்றிலேனும் விரிவடைந்தது. அதேவேளை, குறிப்பாக கேள்வி அழுத்தங்கள் மற்றும் கப்பற்பயணத்துடன் தொடர்பான இடையூறுகள் காரணமாக நிரம்பலர் விநியோக நேரம் தொடர்ச்சியாக நீட்சியடைந்தது.
அடுத்த காலாண்டில் தயாரிப்பு நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கைகள், தற்போதைய மத்திய கிழக்கு மோதலுடன் தொடர்புடைய நிச்சயமற்றதன்மைகளினால் ஓரளவு மிதமடைந்திருப்பினும் நடுநிலையான அடிப்படை அளவிற்கு மேல் காணப்பட்டது.
பணிகளுக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), 2026 மாச்சில் 59.4 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் பணிகள் நடவடிக்கைகளில் விரிவாக்கமொன்றை எடுத்துக்காட்டுகின்றது.
வியாபார நடவடிக்கைகளில் விரிவாக்கமானது துறைகளுக்கிடையில் பரந்த அடிப்படையிலான மேம்பாடுகளினால் ஆதரவளிக்கப்பட்டிருந்தது. நிதியியல் பணிகள் துறை, அதிகரித்த கடன்வழங்கல் நடவடிக்கையிலிருந்து அனுகூலமடைந்து முதன்மைத் தூண்டுதலாக காணப்பட்டது. இதற்கு மேலதிகமாக, மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகம் என்பன பண்டிகைக் கேள்வியின் காரணமாக விரிவாக்கமொன்றைக் காண்பித்த அதேவேளை, தொழில்சார் பணிகளும் ஏனைய தனிப்பட்ட பணி நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைப் பதிவுசெய்தன.
காப்புறுதி மற்றும் ஓய்வூதிய நிதியளித்தல் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்களவிலான வளர்ச்சியிலிருந்தான மேலதிக ஆதரவுடன் நிதியியல் பணித் துறையினால் தூண்டப்பட்டு, புதிய வியாபாரங்களின் விரிவாக்கம் 2026 மாச்சில் தொடர்ந்தது.
ண்டிகைக் காலத்தினை எதிர்பார்த்து அதிகரிக்கின்ற நுகர்வோர் கேள்வியினை நிவர்த்திசெய்வதற்கு சில நிறுவனங்கள் தமது தொழிற்படையினை விரிவடையச்செய்தமையினால் தொழில்நிலை 2026 மாச்சில் மேலும் அதிகரித்தது. நிலுவையிலுள்ள பணி, மாத காலப்பகுதியில் சுருக்கத்தின் வேகம் மிதமடைந்திருந்த போதிலும், தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தது.
அடுத்த காலாண்டுக்கான வியாபார நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள், தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் நிச்சயமற்றதன்மைகளுக்கு மத்தியில், தோன்றக்கூடிய பருவகாலக் கேள்வி மற்றும் புதிய வாய்ப்புக்களினால் ஆதரவளிக்கப்பட்டு வலுவானதாகக் காணப்பட்டது. எனினும், மத்திய கிழக்கு மோதலின் தாக்கம் மற்றும் பரந்தளவிலான உலக பொருளாதார








