உள்நாட்டு படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்டத்தை அநுசரித்து தகைமையுடைய செலுத்தவேண்டிய இலங்கை அபிவிருத்தி முறிகளை ஐந்து (5) புதிய இலங்கை ரூபா திறைசேரி முறிகளுக்கான பரிமாற்றத் தீர்ப்பனவு

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் வெளியிடப்பட்ட 2023 யூலை 04ஆம் திகதியிடப்பட்ட இலங்கை அபிவிருத்தி முறிகளின் பரிமாற்று விஞ்ஞாபனத்திற்கும் (“பரிமாற்று விஞ்ஞாபனம்") அதனைத்தொடர்ந்து இலங்கை அபிவிருத்தி முறி பரிமாற்றத்திற்கான அழைப்பிதழுக்கான (பரிமாற்று விஞ்ஞாபனத்தில் வரைவிலக்கணம் செய்யப்பட்டவாறு) பெறுபேறுகளின் அறிவித்தலுக்கும் மேலதிகமாக, செலுத்தவேண்டிய தகைமையுடைய இலங்கை அபிவிருத்தி முறிகள் (தகைமையுடைய முறிகள்) ஐந்து (5) புதிய மாறிலி கூப்பன் (துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்* +1.00%) இலங்கை ரூபாவில் பெயர்குறிக்கப்பட்ட புதிய திறைசேரி முறிகளுக்கு மாற்றப்பட்டு 2023.08.15 அன்று பின்வருமாறு தீர்ப்பனவுசெய்யப்பட்டன:   

பன்னாட்டு பிணையங்கள் அடையாள இலக்கம்**
LKJ00225G157
LKJ00427G159
LKJ00629G150
LKJ00831G152
LKJ01033G154
தொடர்கள்
1.00% 2025‘A’ 1.00% 2027‘A’ 1.00% 2029‘A’ 1.00% 2031‘A’ 1.00% 2033‘A’
வழங்கல் திகதி  
2023 யூலை 15  2023 யூலை 15  2023 யூலை 15  2023 யூலை 15  2023 யூலை 15 
முதிர்வு திகதி 
2025 யூலை 15  2027 யூலை 15  2029 யூலை 15  2031 யூலை 15  2033 யூலை 15 
ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை (ரூ.மில்)
50, 444.3 50, 444.3 50, 444.3 50, 444.3 50, 444.3

*ஏதேனும் புதிய இலங்கை ரூபா திறைசேரி முறி மீதான கூப்பன் வீதத்தின் கணிப்பு தொடர்பில் "துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்" என்பது அத்தகைய புதிய இலங்கை ரூபா திறைசேரி முறிக்கான தொடர்புடைய வட்டிக் கொடுப்பனவு திகதிக்கு முன்னர் 30 நாட்களாகவிருக்கின்ற திகதி அன்று (அல்லது, அத்தகைய கணிப்பீட்டு திகதி தொழில் நாளாக இல்லாதிருப்பின், உடனடியாக தொடர்ந்துவருகின்ற தொழில் நாள்) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தை அடிப்படையாகக்கொண்டு கணிப்பிடப்பட்ட 6 மாத கால வரலாற்று சராசரி எனப் பொருள்படும். 

** பன்னாட்டு பிணையங்கள் அடையாள இலக்கம் 

 

Published Date: 

Tuesday, August 15, 2023