கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) முதன்மையாக உணவுப் பணவீக்கத்தில் புள்ளிவிபரத் தளத் தாக்கத்தின் காரணமாக, 2026 யூலையின் 7.3 சதவீதத்திலிருந்து 2026 ஓகத்தில் 8.0 சதவீதமாக அதிகரித்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு), 2026 யூலையின் 6.3 சதவீதத்திலிருந்து 2026 ஓகத்தில் 8.5 சதவீதமாக அதிகரித்து, முதன்மைப் பணவீக்கத்தில் அதிகரிப்பிற்குப் பிரதானமாக பங்களித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு), 2026 யூலையின் 7.8 சதவீதத்திலிருந்து 2026 ஓகத்தில் 7.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.
-
CCPI-based headline inflation accelerated in August 2026
-
External Sector Performance - July 2026
வெளிநாட்டு நடைமுறைக் கணக்கானது 2026 யூலையில் ஐ.அ.டொலர் 142 மில்லியன் கொண்ட பற்றாக்குறையொன்றினைப் பதிவுசெய்து, தொடர்ச்சியான நான்காவது மாதத்திற்கான பற்றாக்குறையாக விளங்கி மத்திய கிழக்கில் ஏற்பட்ட அபிவிருத்திகளின் தாக்கத்தினைப் பிரதிபலித்தது. 2025 சனவரி தொடக்கம் யூலை வரையான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட மிகையொன்றுடன் ஒப்பிடுகையில் 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 387 மில்லியன் கொண்ட ஒன்றுசேர்ந்த பற்றாக்குறையொன்றினை இது தோற்றுவித்தது.
-
Release of ‘Economic and Social Statistics of Sri Lanka – 2026’
‘Economic and Social Statistics of Sri Lanka – 2026’, an annual release of socio-economic statistics of the Central Bank of Sri Lanka, is now available for public access. This is an online data release containing long series of data in an easily accessible and downloadable format, catering to the data requirements of various stakeholders.
-
Sri Lanka PMI - Construction expanded in July 2026
கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு, 2026 யூலையில் 61.4 ஆக அதிகரித்து, கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவாக்கத்தை எடுத்துக்காட்டியது. உள்ளீட்டுத் தடைகள் குறிப்பாக தார் வழங்கல் பற்றாக்குறை காணப்பட்ட போதிலும், கட்டடவாக்க வேலையின் தொடர்ச்சியான பாய்ச்சலொன்றை பல அளவீட்டுப் பதிலிறுப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
-
Land Valuation Indicator – First Half of 2026
கொழும்பு மாவட்டத்திற்காக தொகுக்கப்படும் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2025இன் நேரொத்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2026இன் முதலாம் அரையாண்டில்; மிதமான வேகத்தில் 5.9 சதவீதத்தினால் அதிகரித்தது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்து மூன்று துணைக் குறிகாட்டிகளும், வதிவிட காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி 6.7 சதவீதம், அதனைத் தொடர்ந்து வர்த்தக காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி 5.7 சதவீதம் மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி 5.2 சதவீதம் கொண்ட அதிகரிப்புடன் காலப்பகுதியில் மிதமான ஆண்டுக்காண்டு அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன. 2025இன் இரண்டாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், 2026இன் முதலாம் அரையாண்டில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகளும் அனைத்து மூன்று துணைக் குறிகாட்டிகளும் அதிகரித்தன. இந்நோக்கில், வதிவிட மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகள், 2025இன் இரண்டாம் அரையாண்டில் அவதானிக்கப்பட்டதை விடவும் உயர்வான அதிகரிப்புகளைப் பதிவுசெய்தன.
-
SL Purchasing Managers’ Index (PMI) – July 2026
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2026 யூலையில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துகாட்டுகின்றன.
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2026 யூலையில் 55.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைளில் தொடர்ச்சியான விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது. இம் முன்னேற்றத்திற்கு அனைத்து துணைச் சுட்டெண்களும் சாதகமாகப் பங்களித்திருந்தன.
-
The Central Bank of Sri Lanka releases the Monetary Policy Report – August 2026
மத்திய வங்கி 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் தேவைப்பாடுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் 2026இற்கான அதன் இரண்டாவது நாணயக் கொள்கை அறிக்கையினை வெளியிட்டது. ஆண்டொன்றிற்கு இருமுறை வெளியிடப்படுகின்ற நாணயக் கொள்கை அறிக்கையானது பொருளாதாரம் குறிப்பாக, பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சித் தோற்றப்பாடு என்பன தொடர்பிலான முன்னோக்கிய பார்வையிலமைந்த நுண்ணோக்குகள் மற்றும் எறிவுகளிற்கான இடர்நேர்வுகள் என்பவற்றினை வழங்குகின்றது. இவ்வறிக்கையின் ஊடாக, மத்திய வங்கி அதன் அண்மைய நாணயக் கொள்கைத் தீர்மானங்களிற்குப் பின்னணியிலுள்ள நியாயபூர்வதன்மையினைத் தொடர்பூட்டுவதன் மூலம் அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறுந்தன்மை என்பவற்றினை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது.
-
Clarification on Recent Media Reports Regarding the CBSL Governor's Remarks
அண்மைய ஊடக நேர்காணலொன்றில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரினால் தெரிவிக்கப்பட்ட குறித்த சில கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அதனைத்தொடர்ந்து பல அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களினால் தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளது.
-
Notice to General Public on Prohibited Pyramid Schemes
திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83இ பிரிவின் கீழ், இலங்கை மத்திய வங்கியானது விசாரணை மேற்கொண்டு “TM App” என்பன தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டு, நடத்தி ஊக்குவித்துள்ளது என உறுதிசெய்து தீர்மானித்துள்ளது.
-
‘Shaping the future through digital payments’ - Central Bank of Sri Lanka to promote digital payments in Jaffna
இலங்கை மத்திய வங்கியானது அரசாங்க அதிகாரிகள், வர்த்தகச் சமூகம் மற்றும் பொதுமக்களிடையே டிஜிட்டல் கொடுப்பனவு முறைகள் குறித்த விழிப்புணர்வினை அதிகரிக்கின்ற குறிக்கோளுடன் யாழ்ப்பாணத்தில் கார்கில்ஸ் சதுக்கத்தில் 2026 ஓகத்து 07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் மு.ப 8.30 மணி தொடக்கம் பி.ப 7.00 மணி வரை டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது. வட மாகாண ஆளுநர் கௌரவ திரு. நாகலிங்கம் வேதநாயகம் அவர்கள் அங்குரார்ப்பண அமர்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் சிரே~;ட அதிகாரிகள், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் திரு. எம். பிரதீபன், வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தேசிய சில்லறைக் கொடுப்பனவு முறைமையின் தொழிற்படுத்துநரான லங்காபே (பிறைவட்) விமிடெட் ஆகியவற்றின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொள்வர்.








